எங்கள் கொள்கைகள் மற்றும் பதவிகள்

எங்கள் கொள்கைகள்

எங்கள் கொள்கைகள்

காக்ரேன் விரிவான தகவல்களை கொண்டு சரியான தலைப்பு மற்றும் நிர்வாக கொள்கைகளை உருவாக்கியுள்ளது.

காக்ரேன் சமுதாயத்தின் நிர்வாக கொள்கையின் தகவல்கள் சமூக வலைத்தளத்தில் கிடைக்கிறது.


எங்கள் திறந்த அணுகல் கொள்கை

எங்கள் திறந்த அணுகல் கொள்கை

திறந்த அணுகல் முறை என்பது இணையதளத்தில் கிடைக்கும் ஆராய்ச்சி முடிவுகள் எந்த தடையுமின்றி இலவசமாக கிடைக்கவும் மற்றும் எந்த விதத்திலும் பயன்படுத்திக்கொள்ள கட்டுப்பாடுகள் இல்லாத நிலையாகும்.

“கடந்த ஐந்து ஆண்டுகளில் திறந்த அணுகல் முறையின் மூலம் சேவை அளித்ததில் நாங்கள் அதிக பெருமை கொள்கிறோம், இதன் மூலம் காக்ரேனின் திறனாய்வுகளை இன்னும் அதிக அளவில் உலக முழுவதிலும் கிடைக்க உதவி செய்யும். எங்களுடைய திறந்த அணுகல் கொள்கையை 2020 பிறகு எங்களுடைய வெளியிட்டு நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து காக்ரேனின் நிதி ஆதாரங்களின் அடிப்படையில் உலக முழுவதும் காக்ரேனின் திறனாய்வுகள் நீடித்து வழங்குவதே எங்களுடைய தொலைநோக்கு சிந்தனையாகும்.”
மார்க் வில்சன், முதன்மை நிர்வாக அலுவலர், காக்ரேன்

2013 முதல்

  • புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட காக்ரேன் திறனாய்வுகளை உலக முழுவதிலும் உள்ளவர்கள் படிப்பதற்காக வெளியிட்டிற்கு 12 மாதத்திற்கு பின்பு எங்களின் ‘green’ திறந்த அணுகல் சேவை மூலம் வழங்குவதில் காக்ரேன் பெருமை கொள்கிறது. கிட்டதட்ட 50% காக்ரேன் திறனாய்வுகள் இவ்விதமாகவே கிடைக்கிறது. அனைத்து திறந்த அணுகல் காக்ரேன் திறனாய்வுகளும் காக்ரேன் இணைய நூலகத்தில் உள்ளது மற்றும் PubMed யிலும் கிடைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
  • காக்ரேன் ஆய்வு ஆசிரியர் குழுக்கள் தங்களின் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட திறனாய்வுகளை இணையதளம் மூலம் இலவசமாக கிடைக்கப்பெற கட்டணம் செலுத்தும் முறை உள்ளது மற்றும் பொதுவான நன்மைகளை தங்க திறந்த அணுகல் முறை மூலம் அடையலாம். தங்க திறந்த அணுகல் முறை மூலம் ஆய்வுகட்டுரைகள் பொதுவாக மத்திய PubMed ல் தானாக வைக்கப்படும் மற்றும் மற்ற சேவைகள் நிதியளிப்பவர் ஆணைகள் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.
  • எல்லா சுருக்கங்களும் மற்றும் நெறிமுறைகளும், மற்றும் எளிய மொழி சுருக்கங்களும் இலவசமாக அணுக உடனடியாக வெளியீடு செய்யப்படுகிறது, எளிய மொழி சுருக்கங்கள் ஆய்வுகளின் பண்புகளை சாதாரண மொழியிலே விவரிக்கப்படுகிறது.
  • காக்ரேன் இணைய நூலகத்தை பயன்படுத்த பலவிதமான திட்டங்கள் எங்களிடத்தில் இருக்கிறது முக்கியமாக தேசிய நிதி திட்டத்தின் மூலம் ஒரு நாட்டின் பிரஜைகள் எல்லோரும் காக்ரேன் இணைய நூலகத்தை பயன்படுத்தலாம் கூடவே மனிதநேய அணுகல் முறை மூலம் 100 நாடுகளை மற்றும் 3.66 பில்லியன் மக்களையும் அடைகிறோம்.

இன்னும் அதிகமான பயன்பாட்டை உருவாக்க சிந்தித்து வருகிறோம் மற்றும் குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்து ஆதாரத்துடன் சுகாதார தீர்மானங்களை எடுக்கும் முறைகளையும் வடிவமைப்புகளையும் முன்னேற்ற இருக்கிறோம். மேலும் எங்களுடைய மொழிபெயர்ப்பு வேலையை பற்றி அறிந்துக்கொள்ள

இருப்பினும், நாங்கள் அதிகமாக செய்ய விரும்புகிறோம். எங்களுடைய 2020 திட்டத்தில் உலகமுழுவதிலும் சுகாதார முடிவு எடுக்கும் தீர்மானங்களில் காக்ரேன் ஆதாரங்கள் இதயதுடிப்பாக இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாக வைத்து அதன் மூலம் யாவருக்கும் ஆதாரங்கள் கிடைக்க கூடியதாகவும் பயனுள்ளதாகவும் இருக்க விரும்புகிறோம். 2020 க்கு பிற்பாடு எங்களுடைய நிதி ஆதாரங்கள் நிலைப்படும்போது உலக முழுவதிலும் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட காக்ரேன் திறனாய்வுகளும் மற்றும் தற்போது வெளியிடப்பட்ட திறனாய்வுகளும் உடனடியாக கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும்.

இதை நிறைவேற்ற நாங்கள் எங்களுடைய பங்குதாரர்களுடன் மற்றும் காக்ரேன் நூலகத்தின் வெளியிட்டாரிடத்திலும் கடினமாக உழைத்து புதிய வசதிகளையும் மற்றும் தகவல்களையும் கொடுப்பதின் மூலம் காக்ரேன் நூலகத்தை பயன்படுத்துபவர் அதிக மதிப்பை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருகிறோம்.
காக்ரேன் இணைய நூலகத்தை பயன்படுத்த இன்னும் அதிகமான தகவலை பெற்றுக்கொள்ள cochranelibrary.com அணுக

பயன்பாட்டின் வரைப்படைத்தை காண இங்கு அழுத்தவும்

அணுகல் வரைப்படம்

மூடு