2020 வரையிலான யுத்திகள்

நாம் எப்படி இதை செய்கிறோம்

எங்களுடைய 2020 இலக்கு காக்ரேனின் ஆதாரங்களை சுகாதார முடிவுகளை எடுக்கும் மையமாக உலக முழுவதிலும் ஆக்குவதே எங்கள் நோக்கமாகும்.

நாம் இதை எப்படி சாதிக்க விரும்புகிறோம் என்பதை இது வரையறுக்கிறது மற்றும் வருங்காலத்து சுகாதார தீர்மானங்களை உருவாக்க கட்டமைப்பை உருவாக்கிட, யுத்தியின் வாய்ப்புகளுக்கு உதவிட, மற்றும் வருகின்ற காலத்திற்கும் பிறகும் ஏற்படக்கூடிய சவால்களை சந்திக்க இவை விவரிக்கின்றது. நம்முடைய உலகளாவிய பங்களிப்பாளர்களின் கூட்டு முயற்சியால் ஏற்பட்ட முடிவு இது ஆகவே 2020 நிறுவனத்தின் யுத்தியை கூட்டாக நிறைவேற்றி அதன் வெற்றி பங்களிப்பாளர்களையே சார்ந்திருக்கிறது.

யுத்தி 2020 நான்கு முக்கிய இலக்குகளை அடைய தீர்மானிக்கப்பட்டுள்ளது: முன்னுரிமை மற்றும் சமமான கவனம் கொண்ட கட்டமைப்பு, (Goals 1-3) நான்காவதாக சற்று குறைத்து அடிப்படையிலான விவரங்கள் (Goal 4) நிறுவனத்தின் பலத்தை அதிகரிக்க மற்றும் எங்கள் நோக்கத்திற்கு உறுதுணையாக செயல்பட வரையறைக்கப்பட்டுள்ளது:

நோக்கம் 1: ஆதாரத்தை உருவாக்குவது

உயர்ந்த தரம், தொடர்புடைய, இன்றைய தேதி வரை உருவாக்கப்பட்ட திறனாய்வு மற்றும் சுகாதார முடிவுகளை மேற்கொள்ளும் ஆதாரங்களை தெரிவிப்பதாகும்.

நோக்கம் 2: எங்களுடைய ஆதாரங்கள் எளிதாக கிடைக்க செய்வது

நாங்கள் காக்ரேன் ஆதாரங்களை எளிதாக கிடைக்கவும் மற்றும் உலகில் உள்ள எல்லோருக்கும் எல்லா இடங்களிலும் பயன்பட வேண்டும்.

நோக்கம் 3: ஆதாரங்களை பரிந்துரைப்பது

சுகாதார முடிவுகளை மேற்கொள்ள காக்ரேனை ‘ஆதாரங்களின் வீடு’ என்ற நிலைக்கு உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும், எங்கள் பணிகள் உயர்ந்த அங்கீகரிக்கப்பட்ட நிலையில் காணப்படவும் மற்றும் ஆதாரத்தை சார்ந்த சுகாதாரத்தை பரிந்துரைக்க நாங்கள் வழிக்காட்டியாக இருக்க விரும்புகிறோம்.

நோக்கம் 4: ஒரு பயனுள்ள நிலையான அமைப்பை உருவாக்குவது

நாங்கள் பல்வேறு வித்தியாசங்களுடன், உள்ளடக்கிய மற்றும் வெளிப்படையான சர்வதேச அமைப்பாகும் நாங்கள் எங்களின் பங்களிப்பாளர்களின் உற்சாகத்தையும் திறனையும் பயனுள்ள வகையில் இணைத்து செயல்பட்டு, எங்கள் நெறிமுறைகளால் வழி நடத்தப்பட்டு, பொறுப்புடன் செயல்பட்டு, திறமையாக நிர்வகிக்கப்பட்டு, மற்றும் வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துவது.

2020 யுத்தியை முழுமையாய் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

2019 இலக்குகள்

2020க்கான யுத்தியின் ஆதரவாக காக்ரேனின் சமூகமும் மற்றும் மத்திய செயற்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட வருடாந்திர இலக்குகளை காக்ரேனின் நிர்வாகக் குழு ஒப்புதல் அளிக்கிறது.

2019 ல் காக்ரேன் குழுக்களும் மற்றும் மத்திய நிர்வாக குழுவும்:

  1. ஆண்டின் நோக்கங்கள் மற்றும் காக்ரேனின் உள்ளடக்க இலக்குகளை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்
  2. காக்ரேனின் தலையங்க செயல்முறையின் தரம் மற்றும் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும்
  3. தீர்மானம் செய்பவர்களுக்கு காக்ரேனின் திறனாய்வுகள் எளிதாக கிடைக்க வழி செய்வது
  4. காக்ரேன் திறனாய்வுகள் மற்றும் தகவல்கள் இலவசமாக கிடைக்கக்கூடிய கொள்கைகளை மறுபரிசிலனை செய்வது
  5. காக்ரேன் இணைய நூலகம் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு புதிய சேவைகளை தொடர்ந்து வழங்கிட
  6. சுகாதாரக் கொள்கைகளை உருவாக்குகிறவர்களுக்கு காக்ரேன் ஆதாரங்களையும் மற்றும் புதிய பரிந்துரைக்கும் முயற்சிகளை கொண்டு உதவுவது
  7. காக்ரேன் சமூகத்தில் கடினமான திறனாய்வுகளை உருவாக்க ஆளுமையை ஏற்படுத்துவது மற்றும் இந்த அறிவு திறன்களை மொழிபெயர்ப்பு செய்யும் வேலைகளில் ஈடுபட
  8. மதிப்பீடு, திட்டம் மற்றும் காக்ரேன் திறனாய்வுகளை உருவாக்க மேம்படுத்தப்பட்ட மேலாண்மை முறைகளை துவங்கச்செய்வது
  9. தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் காக்ரேனை ஒரு உலகளாவிய அமைப்பாக வலுப்படுத்துவது

2019 இலக்குகளை எப்படி நிறைவேற்றுவோம் என்பதை காக்ரேன் சமூக வலைத்தளத்தில் மேலும் படிக்க.


நாம் வெற்றியை எப்படி தெரிவிப்போம்?

2020 யுத்தியின்படி அடைந்த வெற்றியை காக்ரேனின் அகலமான சமூகத்திற்கும் மற்றும் காக்ரேனில்லாத வெளி சமூகத்திற்கும் காக்ரேன் ஒரு ஆவணத்தை ஏற்படுத்தியுள்ளது. 2018 ஆம் ஆண்டின் இறுதியில் கணிக்கப்பட்ட முன்னேற்றத்தை ஆராய்ந்து மற்றும் மீதமுள்ள பணிகளை முடித்து வெற்றியின் தீர்மானத்தை அடைவதே நோக்கமாகும். இந்த ஆவணம் 2020 மட்டும் ஏற்புடையதாக இருக்கும், ஆனால் பணிகள் முடிவு பெறும்போது இந்த ஆவணம் உருவாக்கப்பட்டு மற்றும் புதுப்பிக்கப்படுகிறது மற்றும் நிறுவனம் புதிய சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றத்தை செய்துக்கொள்ளும். 2017 ல் வெளியிடப்பட்ட பதிப்பின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு ஆகும்.

மேலும் அறிந்துக்கொள்ள