எங்கள் ஆதார தகவல்கள்
காக்ரேன் நூலகம்
காக்ரேன் நூலகம் (ISSN 1465-1858) என்பது இணைய தகவல்களின் சேகரிப்பாகும், அதில் பலவிதமான உயர்ந்த தரம் மற்றும் தனித்துவமான ஆதாரங்கள் மூலம் சுகாதார தீர்மானம் செய்யும் தகவல்களை பெறலாம். காக்ரேன் நூலகத்தில் காக்ரேன் திறனாய்வு தகவல்கள் (CDSR), காக்ரேன் மத்திய சீரற்ற மருத்துவ ஆராய்ச்சி தகவல்கள் மற்றும் காக்ரேன் பதில்கள் மற்றும் தேடும் சேவை மூலம் வெளிப்புற இணைய தகவல்கள் பெற முடியும்.
காக்ரேன் திட்டமிட்ட திறனாய்வு தகவல் மையம்
காக்ரேன் திட்டமிட்ட திறனாய்வு தகவல் மையம் (CDSR) தற்போது உடல்நலம் சார்ந்த திட்டமிட்ட திறனாய்வுகளை சார்ந்த தகவல்களை வழங்குவதில் முன்னணியில் உள்ளது. CDSR ல் (முறையான ஆய்வுகள்) காக்ரேன் திறனாய்வுகள் மற்றும் காக்ரேன் திறனாய்வுகளின் நெறிமுறைகள் கூடவே அதன் தலையங்கங்களும் அடங்கும். CDSR அவ்வப்போது கூடுதல் தகவல்களையும் அளிக்கும். காக்ரேனின் முறையான தகவல் ஆய்வுகள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு மாத தவணையில் வெளியிடப்படுகிறது.
எங்களுடைய ஆதாரங்களை பற்றி அறிந்துக்கொள்ளுங்கள்.
எங்களுடைய ஆதார சேவைகள்
காக்ரேன் பதில்
காக்ரேன் குழுமம், நியமிக்கப்பட்ட ஆதார ஆய்வுகளை மேற்கொள்ள அதன் திறன்களை ஊக்கப்படுத்த காக்ரேன் பதில் தலம் நிறுவப்பட்டது. நாங்கள் ஏற்ற மற்றும் பதிலளிக்கும் ஆதாரங்களை வழங்கி அவைகள் நலத்துறை ஆணை பிறப்பிக்கும் நபர்களுக்கு எளிதாக ஆதாரங்களை பெற்றுக்கொள்ளும் வடிவங்களை கட்டண அடிப்படையில் வழங்கி வருகிறோம்.
எங்களுடைய கற்றல் சேவைகள்
காக்ரேன் கலந்தாய்வு கற்றல் முறை
உலக முன்னணி நிபுணர்களால் உருவாக்கப்பட்ட, காக்ரேன் கலந்தாய்வு கற்றல் முறை 10 மணி நேரத்திற்கும் மேலாக சுய இயக்கப்பெறும் முறையில் முழுமையான திறனாய்வு ஆராய்ச்சிகளை செய்யும் புதிய மற்றும் அனுபவமுள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது.
எங்கள் திறனாய்வு ஆராய்ச்சிக்கு பயன்படுத்தும் தயாரிப்பு மென்பொருள்கள்.
RevMan
RevMan5 and RevMan Web மென்பொருள்கள் காக்ரேன் ஆராய்ச்சி தயாரிப்பிற்க்கும் மற்றும் பராமரிப்பிற்கும் பயன்படுத்தப்படும். RevMan மென்பொருள் நெறிமுறைகளை மற்றும் முழு ஆய்வு கட்டுரையை ஏற்படுத்தவும், கூடவே எழுதவும், ஆய்வின் பண்புகளை சேர்க்கவும், ஒப்பீடு அட்டவணைகள், மற்றும் ஆய்வு தகவல்களை கையாளுகிறது. செலுத்தப்பட்ட தகவல்களை கொண்டு மெட்டா -பகுப்பாய்வு செய்வதுடன் அதன் முடிவுகளை வரைப்படமாக வெளியிடும்.
சுகாதார சிகிச்சை முறைகளின் தாக்கத்தை அறிந்துக்கொள்ள ஆய்வுகளின் திறனாய்வை செய்வதுபோல கூடுதலாக வியாதியை கண்டறியும் முறைகளுக்கு உண்டான சரியான ஆய்வு முறையையும், சிகிச்சை செய்யும் முறைமைகளின் திறனாய்வுகளும், திறனாய்வுகளுக்கு திறனாய்வும் இதிலே செய்யப்படும்.
கொவிடேன்ஸ்
கொவிடேன்ஸ் என்பது காக்ரேன் திறனாய்வுகளை செய்ய முதல் அடிப்படை சரிப்பார்க்கும் முறையும் மற்றும் தகவலை எடுக்கும் ஒரு மென்பொருள் தலமாகும். கொவிடேன்ஸ் காக்ரேன் ஆய்வுகளை செய்ய ஆதாரவு தரும் முக்கிய தலமாக உள்ளது, ஆய்வு குறிப்புகளை சரிப்பார்த்தல் மற்றும் பிழைகளின் ஆபத்துகளை சரிப்பார்க்கவும், RevMan மென்பொருளை எழுத பயன்படுத்தும்போது முன்னேற்றமடைந்த ஆய்வின் இணைப்புகளை பயன்படுத்தவும் உதவுகிறது. கொவிடேன்ஸ் மென்பொருள் ஆய்வை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் கவனத்தோடும், முறையான நுனுக்கத்தோடும், அதை உபயோகிக்கிறவரும் தரம் அனுபவத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.