காக்ரேன் விமர்சகராகுங்கள்

யார் காக்ரேன் விமர்சகர்கள்?

அனைத்து காக்ரேன் நெறிமுறைகளும் மற்றும் திறனாய்வுகளும் வெளியீட்டிற்கு முன் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன, இது காக்ரேன் விமர்சகர் கொள்கையால் பரிந்துரைக்கப்படுகிறது. திறனாய்வுகள் தலைப்பைப் பொறுத்து, சக விமர்சகர்கள் பின்வருகின்ற நிலையில் இருக்கலாம்:

  • மருத்துவ நிபுணர்கள்
  • செயல்முறை நிபுணர்கள்
  • புள்ளியியல் நிபுணர்கள்
  • நுகர்வோர் - நோயை குறித்து அல்லது விவாதிக்கப்படும் சிகிச்சை முறையை குறித்து முதல் அனுபவம் பெற்ற நோயாளிகள், பாதுகாப்பாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள்

காக்ரேன் விமர்சகரின் பணி எதை உள்ளடக்கியது?

சக விமர்சகர்கள் ஒரு காக்ரேன் நெறிமுறையின் வரைவு அல்லது முழு திறனாய்வு குறித்த விரிவான கருத்துக்களை வழங்குகிறார்கள். உங்கள் நிபுணத்துவ பகுதியைப் பொறுத்து, மதிப்பாய்வின் குறிப்பிட்ட பிரிவுகளில் உங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்கப்படுவீர்கள். நீங்கள் சரளமாக ஆங்கிலத்தில் எழுதவும் படிக்கவும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஒரு திறனாய்வின் விமர்சனத்திற்கு மிக அதிகமான கடினமான வேலை குறுகிய காலத்திற்கு தேவைப்படுகிறது மற்றும் நீங்கள் திறனாய்வு குழுக்களின் இறுதியான காலக்கெடுவிற்குள் உங்களின் கருத்துக்களை அனுப்ப நேரிடும். காக்ரேனின் சக விமர்சகர்களின் எதிர்பார்ப்புகளை மேலும் அறிந்துக்கொள்ள விமர்சகரின் ஒழுங்குமுறைகள் எங்கள் விமர்சகர்களின் கொள்கையில் அறியலாம்.

காக்ரேன் விமர்சகர் பணிகளுக்கு நான் எவ்வாறு பதிவுபெற முடியும்?

காக்ரேனிற்காக விமர்சனத்தை உறுதிப்பாடுடன் செய்ய உங்களுக்கு நேரமும் மற்றும் திறமையும் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், தயவுச்செய்து எங்கள் சுகாதார ஆதார மையமான காக்ரேன் பணிபரிமாற்றத்தில் சேர பதிவு செய்க. திறனாய்வு குழுக்கள் பணிபரிமாற்றத்தில் புதிய சக விமர்சகர்களை கண்டறிந்து, சக விமர்சகர் பணிகளையும் விளம்பரப்படுத்துகின்றன. உங்கள் பணிபரிமாற்ற விமர்சகர் சுயவிவரத்தை எவ்வாறு முடிப்பது என்பதற்கான எங்கள் குறிப்புகளைப் படித்து, தொடர்புடைய பணிகளைத் தேடுங்கள்.

விமர்சகராக தற்போது உங்களால் அர்ப்பணிக்க இயலவில்லை என்றால் தயவுக்கூர்ந்து மற்ற வழிகளிலே காக்ரேனுக்கு பங்களிக்க கருத்தில் கொள்ளுங்கள்.