பக்கவாதத்திற்கான புனர்வாழ்வில் தோற்ற மெய்மை (Virtual reality).

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

திறனாய்வின் கேள்வி: செயல்பாட்டு திறனில் தோற்ற மெய்மையின் விளைவுகளை (மற்றும் நடக்கும் வேகம், தினசரி செயல்பாடுகளை தாமே சுயமாக கையாள்வது போன்ற இதர விளைவுபயன்களை ) வேறு மருத்துவமுறைகள் அல்லது எந்த சிகிச்சையும் எடுக்காதவர்களுகெதிர் ஒப்பிட நாங்கள் விரும்பினோம்.

பின்புலம்: பொதுவாக பலர் பக்கவாததிற்குப்பிறகு நகர்வதற்கும், சிந்திப்பதற்கும், உணர்வதற்கும் சிரமப்படலாம். இது, எழுதுதல், நடத்தல், வாகனம் ஒட்டுதல் போன்ற அன்றாட செயல்பாடுகளில் பிரச்சினையாக முடிகிறது. தோற்ற மெய்மை (Virtual reality), ஊடாடும் வீடியோவிளையாட்டு (interactive video gaming) போன்றவை புதிதாக, பக்கவாததிற்குப் பிறகு கொடுக்கப்படுகின்ற சிகிச்சை முறைகளாகும். இந்த சிகிச்சை வாழ்வியல் பொருட்களையும் நிகழ்வுகளையும் உருவகப்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டகணினி அடிப்படையிலான நிரல்களை கொண்டுள்ளதாகும். தோற்ற மெய்மை (Virtual reality), ஊடாடும் வீடியோவிளையாட்டு (interactive video gaming) போன்றவை, மக்களுக்கு, மருத்துவமனை சுழலில் செய்யாத அல்லது செய்யமுடியாத அன்றாட நடவடிக்கைகளை பயிற்சி செய்ய வாய்ப்பு அளிக்கலாம் என்பதால் அவை பாரம்பரிய சிகிச்சை முறைகளைக்காட்டிலும் சில நன்மைகளையுடையதாக இருக்கலாம். மேலும் தோற்ற மெய்மை (Virtual reality))யின் , சில அம்சங்கள் நோயாளிகளை நீண்டநேரம் சிகிச்சையில் ஈடுபடுத்தவல்லதாக இருக்கின்றன: எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட இந்த செயல், மிகுந்த ஊக்கமூட்டக்கூடியதாக இருக்கலாம்.

ஆய்வு பண்புகள்: பக்க வாததிற்குப்பிறகு 1019 பேர் ஈடுபடுத்தப்பட்ட 37 ஆய்வுகளை நாங்கள் கண்டெடுத்தோம். பல்வேறுவிதமான தோற்ற மெய்மை நிரல்கள் (Virtual reality), பயன்படுத்தப்பட்டுள்ளன மேலும் அதில் பங்கேற்பவர்கள் ஓரளவு செயல்படக்கூடிய நிலையில் இருக்கவேண்டியிருந்தது (அதே வேளையில் இயக்குபிடியை (joystick) நகர்த்துவது வெறும் சிறிய அசைவுகள் தேவைப்படும்) இந்த ஆதாரங்கள் நவம்பர் 2013 வரை நிலவரப்படியானவை.

முக்கிய முடிவு: பன்னிரண்டு ஆராய்ச்சிகள் வழக்கமான சிகிச்சை ஒப்பிடுகையில் தோற்ற மெய்மை நிரல்கள் பயன்படுத்துவது ஒருவரின் கை பயன்பாட்டுத் திறனில் மேம்பாடு ஏற்படுத்துமா என்று சோதித்தன, இதில் தோற்ற மெய்மை நிரல்கள் கை செயல்பாட்டில் மேம்பாடு ஏற்படுத்தும் என்று தெருவித்தன. நான்கு ஆய்வுகள் வழக்கமான சிகிச்சை முறைகளுடன் ஒப்பிடும்போது தோற்ற மெய்மை (Virtual reality), ஒருவரின் நடை வேகத்தில் மேம்பாடு ஏற்படுத்துமா என்று சோதித்தன. எனினும் அதில், தோற்ற மெய்மை (Virtual reality),பயனுள்ளதாக இருப்பதற்கு எந்த ஆதரமும் இல்லை. 8 ஆய்வுகள் தோற்ற மெய்மை (Virtual reality), குளிப்பது உடுத்துவது போன்ற அன்றாட செயல்பாடுகளை சமாளிக்க சற்றே மேம்பட்ட திறனை ஏற்படுத்தியதற்கான சில ஆதாரம் இருப்பதாகக் கண்டன. இருந்தாலும், இந்த சாதகமான முடிவுகள் சிகிச்சை முடிந்தத உடனே கானப்பட்டுள்ளதால், சிகிச்சையின் விளைவுகள் நீடிக்குமா என்பது தெளிவாக இல்லை. மிக சிறிய அளவில் பங்கேற்பாளர்கள் ஈடுப்பட்டுள்ள ஆய்வுகள் என்பதால்,முடிவுகள் எச்சரிக்கையுடன் அர்த்தம் கொள்ளப்படவேண்டும். தோற்ற மெய்மை (Virtual reality), பயன்படுத்தியபோது வலி, தலை வலி அல்லது தலைசுற்றல் போன்றவைகள் ஏற்பட்டதாக மிகவும் சொற்ப நபர்களே தெரிவித்துள்ளார்கள் மற்றும் அபாயமான பக்கவிளைவுகள் எதுவும் தெருவிக்கப்படவில்லை.

ஆதாரத்தின் தரம்: நாங்கள் கைகளின் செயல்பாட்டு திறன் சம்பந்தப்பட்ட ஆதாரத்தை குறைந்த தரம் என்று வகைப்படுத்தினோம். நடைக்கு திறன், ஒட்டு மொத்த செயல்திறன் மற்றும் சுகந்திரமாக வாழ்கைக்கு தேவையான காரியங்களைச் செய்வது போன்றவற்றிக்கு ஆதரங்கள் மிகவும் தரம் குறைந்தாக இருந்தது. குறைந்த அளவிலான பங்கேற்பாளர்கள், ஆராய்ச்சிகளுக்கு இடையே முரணான முடிவுகள் மற்றும் ஆராய்ச்சிகள் பற்றிய விவரங்களை வெளியிடுதலில் உள்ள குறைபாடுகளின் நிமித்தம் ஏற்பட்ட குறைவுகளால் ஒவ்வொரு விளைவுபயன்னை பற்றிய ஆதரங்களின் தரம் மட்டுப்படுத்தப்பட்டது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: இர .செந்தில் குமார் & மு. கீதா, மற்றும் சி.இ.பி.என்.அர் குழு