காக்ரேன் ஆதாரங்கள் உலகளவில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறதென்று அறிந்துக்கொள்ளுங்கள். காக்ரேன் ஆதாரங்கள் உலகளாவிய சுகாதாரம் மற்றும் அதன் கொள்கைளில் பெரிதான தாக்கத்தை எற்படுத்தி உள்ளதே பெரிய உதாரணமாக கருதப்படுகிறது. அனுதின வாழ்க்கையில் காக்ரேன் மற்ற நிறுவனங்களுடன் பணியாற்றுவது குறிப்பாக உலக சுகாதார மையம் மற்றும் விக்கிபீடியா உடன் ஆதாரங்களை கொண்டு செயல்படுவது முக்கிய குறிப்பாகும்.
எங்கள் லோகோ சொல்லும் கதை
இரண்டு ‘C’ கலால் உண்டாகும் வலையம் உலகளாவிய கூட்டை வெளிப்படுத்துகிறது. உள்ளே உள்ள கோடுகள் முறையான திறனாய்வு முடிவுகளை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு கிடைமட்ட கோடும் ஒரு தனிப்பட்ட ஆராய்ச்சியின் முடிவை வெளிப்படுத்துகிறது, வைர சின்னம் ஒட்டுமொத்த முடிவையும், சிகிச்சை முறை ஆதரவாக அல்லது எதிர்மறையாக உள்ளதா என்று விவரிக்கிறது, வைர சின்னம் செங்குத்தான கோட்டுக்கு இடபுறம் அமைவதால் “ எந்த வித்தியாசம் இல்லை” என்ற நிலைப்பாட்டை தெரிவிக்கின்றது ஆகவே இந்த ஆதாரம் பயனுள்ளது என்று காட்டுகிறது. இந்த விதமான பிரதிபலிப்பை “forest plot” என்று அழைக்கிறோம். எங்கள் லோகோவில் காணப்படும் forest plot ஒரு திறனாய்வு அறிக்கை எந்த அளவிற்கு சுகாதாரத்தை முன்னேற்ற உதவும் என்ற உதாரணத்தை காண்பிக்கிறது. corticosteriods யை குறைபிரசவம் ஏற்படும் பெண்களுக்கு கொடுப்பதன் மூலம் பிறந்த குழந்தையின் உயிரை காக்க உதவும் என்பதை காட்டுகிறது.
corticosteroids யை பயன்படுத்துவதினால் எற்படும் பலனை குறித்து அனேக ஆராய்ச்சிகள் குறிப்பிட்ட போதிலும் சிகிச்சைக்கு இந்த மருந்தை குறைவான மருத்துவர்களே பயன்படுத்தினர். Crowley et al. மூலமாக வெளியிடப்பட்ட திறனாய்வு முடிவுகள் மேம்படுத்தப்பட்ட பிறகு இந்த சிகிச்சை முறை மிகவும் தாக்கத்தை ஏற்படுத்த கூடியதாய் இருந்தது. இந்த எளிய சிகிச்சை ஆயிரக்கணக்கான குறைபிரசவ குழந்தைகளின் உயிர்களை பாதுகாத்தது.
காக்ரேன் லோகோவை பயன்படுத்த கூடுதலான தகவலை அறிந்துக்கொள்ள ‘லோகோ மற்றும் ஒப்புதல் கொள்கை’ காக்ரேன் சமூக இணையத்தில் காண்க.
காக்ரேனின் பெயர்
காக்ரேன் என்கின்ற பெயர் ப்ரிட்டிஷ் மருத்துவ ஆய்வாளர் ஆர்ச்சி காக்ரேன் அவர்கள் அறிவியல் வளர்ச்சிக்காக ஆற்றிய மகத்தான சேவை நிமித்தமும் அவரை கனப்படுத்தும் விதமாக அளிக்கப்பட்ட பெயராகும்.
ஆர்ச்சி காக்ரேன் என்பவர் தன்னுடைய பிரபலமான புத்தகம் Effectiveness and Efficiency Random Reflections on Health Services மூலம் மிகவும் அறியப்படுகிறவர். 1972 ல் வெளியீடப்பட்டது, அவர் தன் நெறிமுறைகளை தெளிவாகவும் நேரடியாகவும் பதிவு செய்துள்ளார், அவர் கூறியதாவது வளங்கள் எப்பொழுதுமே குறைந்தே காணப்படுகிறது, ஆனாலும் சமமான சுகாதார முறைகளை சரியான திட்ட சோதனை மூலமாகவும் பலனுள்ளதாக அமையும். முக்கியமாக சீரற்ற முறையின் மூலம் கிடைக்கும் ஆதாரங்களை பயன்படுத்துவதின் முக்கியத்தை தெளிவுப்படுத்தி உள்ளார் காரணம் அவை மற்ற ஆதார தகவல்களை காட்டிலும் நம்பகமான தகவலை அளிக்கிறது. காக்ரேனின் எளிமையான தகவல்கள் முக்கியமானதாக அனேகரால் கருதப்பட்டது - சாதாரண மக்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள்.
1979 ல் அவர் எழுதியதாவது “நம்முடைய துறையில் பதிவாகும் அதிகமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய தெளிவான சீரற்ற மருத்துவ ஆய்வுகளில் உண்டாகும் குற்றச்சாட்டுகளை துறை ரீதியாக அல்லது உப துறை ரீதியாக, நாம் முறையாக பராமரிக்காமல் இருந்தது பெரிய தவறாகும்”, இந்த சவாலை மேற்கொள்ள 1980 ல் பிறப்பு சார்ந்த Oxford தகவல் மையத்தை உருவாக்க சர்வதேச குழுமத்தை உருவாக்கினர்.
1987 ல் காக்ரேன் அவர்கள் மறிப்பதற்கு ஒரு வருடம் முன்பு பிரசவம் மற்றும் குழந்தை பிறப்புக்கு தேவையான சிகிச்சை முறைகள் கொண்ட சீரற்ற மருத்துவ ஆய்வுகளை கொண்ட ஒரு திறனாய்வு அறிக்கையை அவர் மேற்கொள் காட்டி “ சீரற்ற மருத்துவ ஆய்விலும் மற்றும் சிகிச்சையின் பரிசோதனையிலும் இது சரித்திரத்தில் ஒரு முக்கிய குறிப்பாகும்” என்று குறிப்பிட்டு மற்ற மருத்துவ துறைகளும் இதை பின்பற்ற வேண்டும் என்று ஆலோசனை கூறினார்.அவர் அளித்த உற்சாகம் மற்றும் அவருடைய கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அனைவரின் ஆதரவும் கொண்டு முதல் காக்ரேன் மையத்தை 1992 ல் நிறுவப்பட்டு (in Oxford, UK) பின்பு 1993 ல் காக்ரேன் குழுமம் உருவானது.
ஆர்ச்சி காக்ரேன் பற்றிய படைப்புகள்
Cochrane AL. பலன் மற்றும் திறன் சுகாதார சேவைகளில் சீரற்ற பிரதிபலிப்புகள்
London Nuffield Provincial Hospitals Trust, 1972. (மறுபதிப்பு 1989 BMJ கூட்டமைப்பு, Nuffield Trust க்காக Royal Society of Medicine Press, London (ISBN 1-85315-394-X).) [1] மீண்டும் மறுபதிப்பு 1999.
Cochrane AL. 1931-1971: மருத்துவ தொழிலுக்கு குறிப்பான தொடர்பு கொண்ட ஒரு முக்கியமான திறனாய்வு. குறிப்பு: 2000 வருஷத்திற்கான மருத்துவம் London: சுகாதார பொருளதாரம், 1979, 1-11. [2]
Cochrane AL. முன்னுரை குறிப்பு: Chalmers I, Enkin M, Keirse MJNC, eds. பிரசவம் மற்றும் குழந்தைபேறுவில் திறனான சிகிச்சை. Oxford: Oxford University Press, 1989. [3]
Dickersin K and Manheimer E. காக்ரேன் குழுமம்: சீரற்ற மருத்துவ ஆய்வுகளை கொண்ட திறனாய்வு கட்டுரை கொண்டு சுகாதாரம் மற்றும் அதன் சேவைகளை மதிப்பீடு செய்வது. மகப்பேறு மற்றும் பெண் சுகாதாரம் 41(2):315-331, 1998. ஆர்ச்சி காக்ரேனின் தொலைநோக்கு பார்வை எந்த அளவிற்கு மற்றவர்களை ஊக்கம் பெற செய்தது என்பதை அற்புதமாக விவரிக்கும் கட்டுரையாக உள்ளது, முடிவாக காக்ரேன் குழுமம் எப்படி உருவானது என்பதை விவரிக்கிறது.
ஆர்ச்சி காக்ரேன்: Back to the front, F. Xavier Bosch, அவர்களால் திருத்தப்பட்டு, ஆர்ச்சி காக்ரேன் அவர்கள் ஸ்பெனிஷ் உள்நாட்டு யுத்தம் அவருடைய வாழ்க்கையின் துவக்கத்தையும் மற்றும் வேலையையும் கலந்துரையாடுவதுடன் மற்றும் இந்த சம்பவங்கள் காக்ரேன் குழுமம் வளரவும் நிதி ஆதாரம் பெறுவதையும் விவரிக்கிறார். வேறுபட்ட குடும்பம், நண்பர்கள் மற்றும் உடன் ஊழியர்கள் குறித்ததான விவரம் இதில் அடங்கும். இந்த புத்தகத்தின் பிரதிகள் €75.00 (GBP £52.00); விற்பனைக்கு உள்ளன, இந்த படிவத்தை பயன்படுத்துங்கள்.
ஒரு மனிதனின் மருத்துவம்: பேராசிரியர் ஆர்ச்சி காக்ரேனின் சுயசரிதை.
ஏ. எல் Cochrane ; Max Blythe. Cardiff : Cardiff University. 2009. New ed. 303 pages, 14 plates, 16 figures. ISBN 978-0-9540884-3-9. [Order online directly from Cardiff University (Lindsay Roberts, Health Library, Cochrane Building, Cardiff University, Heath Park, Cardiff, CF14 4YU, UK) or via Amazon.co.uk.]