இதய புனர்வாழ்வில், நோயாளி உள்ளெடுப்பு மற்றும் கடைப்பிடித்தலை மேம்படுத்துதல்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

பின்புலம்

இதய புனர்வாழ்வுத் திட்டங்கள், மாரடைப்பு, குருதிக்குழாய்ச் சீரமைப்பு (கரோனரி ஸ்டேன்ட் ப்லாசெமென்ட்) மற்றும் பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற இதய நிகழ்வுகளிருந்து மீளவும் மற்றும் நோய் இனிமேல் ஏற்படும் வாய்ப்பை குறைக்கவும் உதவுகிறது. இதய புனர்வாழ்வுத் திட்டங்கள் மாறுபடும், ஆனால் பொதுவாக பின்வரும் ஒன்று அல்லது அதற்கு மேலானவற்றை உள்ளடக்கி இருக்கும்: உடற்பயிற்சி, கல்வி, மற்றும் உளவியல் ஆலோசனை/ஆதரவு. இதய புனர்வாழ்வில் நன்மைகள் இருந்தாலும், அனைவருக்கும் இதில் பங்கேற்க ஒப்புக்கொள்வதில்லை, மேலும் பங்கேற்பவர்களில், பல மக்கள் பரிந்துரைக்கப்படும் திட்டங்களை கடைபிடிப்பதில்லை. இந்த திறனாய்வு, இதய புனர்வாழ்வில் உள்ளெடுப்பு மற்றும் கடைபிடிதலை ஊக்குவிக்கும் உக்திகளை ஆய்வு செய்த இதற்கு முன் வெளியான காக்குரேன் திறனாய்வை மேம்படுத்துகிறது.

ஆய்வு பண்புகள்

பெரியவர்களில் (18 வயதிற்கு மேலானவர்களில்) மாரடைப்பு கொண்டவர்கள், கரோனரி பைபாஸ் கிராப்ட் கொண்டிருந்தவர்கள் (இதய இரத்த ஓட்டம் மற்றும் பிராணவாயு​வின் விநியோகத்தை மேம்படுத்​தும் பொருட்டு முக்கிய தமனிகளின் குறுகிய அல்லது தடைகள் மிகுந்த பிரிவுகளை சுற்றி, இரத்தத்தை திசை திருப்புவதற்கான ஒரு அறுவை சிகிச்சை), பெர்குடேனஸ் ட்ரான்ஸ் லூமினல் கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி (இதய தமனிகளின் அடைப்பை திறப்பதற்கான ஒரு செயல்முறை) இதயம் இயங்கா நிலை, இரத்தக் குழாய் செயலிழப்பு, ​இதய புனர்வாழ்விற்கு தகுதியான இதயத் தமனி நோய் கொண்டிருந்தவர்களில், சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளுக்காக (ஒரு சீரற்ற முறையில்​ பங்கேற்பாளர்களை ​இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ​சிகிச்சைக் ​குழுக்க​ளில் ​ஒதுக்கீடு செய்யும் சோதனைகளுக்காக) நா​ங்கள் பல்வேறு ​வகையான அறிவியல் தரவுத்தளங்க​ளை தேடி​னோ​ம்​.​ இந்த தேடுதல் ஜனவரி 2013 வரை தற்போதையது.

முக்கிய முடிவுகள்

18 சோதனைகள் சேர்த்துக்கொள்வதற்குப் பொருத்தமானவை என்று நாங்கள் கண்டோம்( உள்ளெடுப்பை மேம்படுத்துவதற்கான 10 தலையீட்டு சோதனைகள் மற்றும் கடைப்பிடித்தலை மேம்படுத்துவதற்கான 8 தலையீட்டு சோதனைகள்) உள்ளெடுப்பு அல்லது கடைப்பிடித்தலை மேம்படுத்துவதற்கான பல்வேறு நுட்பங்களை, ஆய்வுகள் மதிப்பீடு செய்தன மற்றும் பல ஆய்வுகளில, பல்வேறு உத்திகளின் சேர்க்கை பயன்படுத்தப்பட்டது.

உள்ளெடுப்பை அதிகரிப்பதற்கான உத்திகள் பொதுவாக பயனுள்ளதாக இருந்தது மற்றும் வழக்கமான செவிலியர்-அல்லது சிகிச்சை தலைமையிலான வருகைகள், மருத்துவமனை வெளியேற்றத்திற்குப் பிறகு ஆரம்பகால நியமனங்கள், ஊக்கமூட்டும் கடிதங்கள், பாலினம்-சார்ந்த திட்டங்கள் மற்றும் வயது முதிர்ந்த நோயாளிகளுக்கு இடைநிலை கட்ட திட்டங்கள் ஆகியவை சேர்க்கப்பட்டிருந்தது. நாம் ஒருதலைச் சார்பின் குறைந்த அபாயம் (ஆராய்ச்சியாளர்கள் பாரபட்சமான தவறான முடிவுகளை எட்டுவதற்கான குறைந்த ஆபத்து) கொண்ட சில ஆய்வுகளை மதிப்பீடு செய்தோம். செயல்பாடுகளின் தினசரி சுய கண்காணிப்பு, செயல் திட்டமிடல், மற்றும் கடைப்பிடித்தலை எளிதாக்க இதய புனர்வாழ்வு ஊழியர்கள் வசதிகளை செய்துக்கொடுத்தல் ஆகிய திறம்பட்ட தலையீடுகளை உள்ளடக்கிய ஒரு சிறிய எண்ணிக்கையிலான ஆய்வுகள் மட்டுமே கடைப்பிடித்தலில் மேம்பாட்டை காட்டியது. எனினும், இந்த ஆய்வுகளில் ஒருதலை சார்புக்கான ஆபத்து அதிகமாக இருந்தது. இந்த தலையீடுகள், ஆரோக்கியம் தொடர்பான வாழ்க்கை தரத்தை மேம்படுத்தியது என்பதற்கோ அல்லது இதய நிகழ்வுகள் அல்லது மொத்த இறப்பு வீதம் ஆகியவற்றை குறைக்கும் என்பதற்கோ, நாங்கள் எந்த ஆதாரத்தையும் காணவில்லை. இதய புனர்வாழ்வுக்கு உள்ளெடுப்பு அல்லது கடைப்பிடித்தலை ஊக்குவிக்கும் தலையீடுகள் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதற்கான எந்த ஆதாரத்தையும் நாங்கள் கண்டுப்பிடிக்கவில்லை. நாங்கள், செலவுகள் அல்லது வளங்களின் உட்குறிப்புக்களை பற்றிய தகவல்களை வழங்கும் எந்த ஆய்வுகளையும் கண்டுப்பிடிக்கவில்லை.

சான்றின் தரம்

இதய புனர்வாழ்வினுடைய உள்ளெடுப்பை அதிகரிப்பதற்க்கான தலையீடுகள் பயனுள்ளதாக இருந்தது என்பதை பரிந்துரைக்க வலுவற்ற ஆதாரம் மட்டுமே இருந்தன. இதய புனர்வாழ்வை பின்பற்றுவதை அதிகரிப்பதற்கான நடைமுறை பரிந்துரைகளை சொல்ல இயலாது. கூடுதலான உயர்தர ஆராய்ச்சிகள், குறிப்பாக குறைவாக சுட்டிக்காடப்படுகின்ற, பெண்கள், இனவழிச் சிறுபான்மையினர், வயது முதிர்ந்த நோயாளிகள், இதய செயலிழப்பு கொண்ட நோயாளிகள், மற்றும் இணை-நோய் அபாயங்கள் கொண்ட மக்கள் (பிராதானமாக அக்கறை செலுத்தபடுகின்ற நோய்களைத் தவிர மற்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நோய்கள் அல்லது நிலைமைகளைக் கொண்டிருகின்றவர்கள் ) போன்ற குழுக்கள் மத்தியில் தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.