மார்பக புற்று நோய் கொண்ட பெண்களுக்கு ஆதரவான பராமரிப்பு அளிக்கும் மார்பக பராமரிப்பு செவிலிய வல்லுநர்கள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

கடந்த 20 ஆண்டுகளில், பெண்களில் உயிர் வாழ்தல் மேம்பட்டதை கண்ட மார்பக புற்று நோய் ஒரு சிக்கலான நோயாகும். பெரும்பாலான இந்த மேம்பாடுகள், சிறந்த சிகிச்சைகள், மேம்பட்ட முன்கண்டறிதல், மற்றும் அதன் மேலாண்மைக்கு ஒரு பல்துறை சார்ந்த அணுகுமுறை ஆகியவற்றோடு சம்பந்தப்பட்டுள்ளன. மார்பக பராமரிப்பு செவிலிய வல்லுநர்கள் (பிரஸ்ட் கேர் நர்சுகள், பிசிஎன்-கள்) இந்த பல்துறை சார்ந்த சூழலில் வேலை செய்து, ஆதரவு, தகவல், நோயாளிக்கு வழக்காடுதல், மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு குழுவின் பல்வேறு வகையான உறுப்பினர்கள் மத்தியில் ஒரு பொது தொடர்பை ஏற்படுத்துதல் போன்ற பரவலான தலையீடுகளை அளிப்பவர்களாக உள்ளனர். மார்பக புற்று நோய் அறுதியீடு கொண்ட பெண்களின் வாழ்க்கைத் தரத்தின் விளைவுகள் மேல், பிசிஎன்-களளால் நடத்தப்படும் தனிப்பட்ட சிகிச்சை தலையீடுகளின் திறனை பற்றி மதிப்பிடுவது இந்த திறனாய்வின் நோக்கமாகும். இந்த முறைப்படுத்தப்பட்ட திறனாய்வின் சேர்க்கை அளவைகளை சந்தித்த ஐந்து ஆய்வுகளை நாங்கள் திறனாய்வு செய்தோம். இவை பரவலான சிகிச்சை தலையீடுகள் மற்றும் விளைவு மதிப்பீடல்களை கொண்டிருந்தன, மற்றும் வெவ்வேறு வயது பெண்கள் மற்றும் வெவ்வேறு மார்பக புற்று நோய் மதிப்பீடு மற்றும் சிகிச்சை காலக்கட்ட நிலைகளை கொண்டிருந்தன. இந்த ஆய்வுகள், புள்ளி தொகுப்பியல் முடிவுகளை அறிக்கையிடுவதிலும் பல விதமான செயல்முறைகளை பயன்படுத்தி இருந்தன, மற்றும் இந்த காரணத்தினால், ஆய்வுகளின் முடிவுகளை ஒருங்கிணைக்க முடியாமல் போனது. பிசிஎன் செயல்பங்கை ஆதரிக்க போதுமான ஆதாரம் இல்லாதிருந்த போதும், மருத்துவரோடு ஒப்பிட்ட பிசிஎன்-ன் பின் தொடர்தலை கண்ட ஒரு ஆய்வு, பராமரிப்பு தொடர்பான திருப்தி அல்லது பதட்டம் மற்றும் மனச்சோர்வை கண்டறிவதில் ஆரோக்கிய பராமரிப்பு அளிப்பவரின் திறன் தொடர்பாக, எந்த குழுவிற்கும் வித்தியாசங்கள் இல்லை என்று முடிவு செய்தது. ரேடியோதெரபி மேற்கொண்ட பெண்களில், குறிப்பிட்ட பிசிஎன் தலையீடுகள் உணரத்தக்க வேதனையை குறைக்கக் கூடும் என்று காட்டியது, எனினும், சமாளிக்கும் திறன்கள், உள நிலை, அல்லது ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் மேல் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை

பொதுவாக கூறினால், ஒரு பெண்ணின் வாழ்க்கைத் தரத்தின் மேல் தாக்கமுடைய பிசிஎன்-களின் செயல்பங்கின் பகுதிகளை கண்டறிவதில் வரையறுக்கப்பட்ட ஆதாரத்தை இந்த திறனாய்வு கண்டது, ஆனால், ஒரு பல்துறை குழுவில் அளிக்கப்படும் அவர்களின் வேலை பண்புகள், பிசிஎன்-ன் தாக்கத்தை அழுந்தக் கூறுவதை விட, அந்த குழுவை முழுமையாக நிறைவு செய்வதாக உள்ளது. எனினும், மார்பக புற்று நோய் கொண்ட பெண்களுக்கு, வாழ்க்கைத் தரத்தின் பகுதிகளில் மேல் இருக்கக் கூடிய பிசிஎன்-களின் தாக்கத்தை முன்னிறுத்தும் மேற்படியான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்:சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.