பக்கவாதத்திற்கு பிறகு ஏற்படும்உடல் செயல்பாடு,சமநிலை மற்றும் நடை உபாதைகளிலிருந்து மீள்வதற்கான உடல்சார் மறுவாழ்வு அணுகுமுறைகள்

கேள்வி

 உடல் மறுவாழ்வு அணுகுமுறைகள், பக்கவாதமுடைய மக்களின் செயல்பாடு மற்றும் இயக்க மீட்பில் பயனுடையவையா?என்பதையும்,ஏதேனும் ஒரு அணுகுமுறை ,மற்ற அணுகுமுறைகளைக்காட்டிலும் ஆற்றல் வாய்ந்ததா ?என்பதையும் நாங்கள் தெரிந்துகொள்ள விரும்பினோம். 

பின்புலம்

பக்கவாதம் பல்வேறு உடல் பாகங்களின் செயல் இலக்கச்செய்யும் மற்றும் பிற உடல் செயல்பாடுகளிலும் சிக்கல்களை ஏற்படுத்தும்.  பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வுக்கு உடற்சார்ந்த புனர்வாழ்வு முக்கியபங்கு வகிக்கிறது. பல ஆண்டுகளாக, உடற்சார்ந்த மறுவாழ்வுக்கு பல்வேறு அணுகுமுறைகள் உருவாக்கப்பட்டது. இவை பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் எவ்வாறு உடல் நலமடைவார்கள், என்னும் மாறுபட்ட கருத்துக்களின் அடிபடையில் உருவாக்கப்பட்டது. பெரும்பாலும் இயன்முறை மருத்துவர்கள் ஒரு குறிப்பிட்ட அணுகுமுறையை பின்பற்றுவார்கள், ஆனால் இந்த முறை பொதுவாக அறிவியல் கோட்பாட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடாமல் தனிப்பட்ட விருப்பதின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுகிறது. வெவ்வேறு இயன்முறை அணுகுமுறைகளின் பலன்கள் பற்றி இயன்முறை மருத்துவர்கள் மத்தியில் விவாதம் தொடர்கிறது; ஆகையால், இதற்கான ஆராய்ச்சி ஆதாரங்கள்களை ஒன்றுசேர்த்து, இருக்கும் பல்வேறு அணுகுமுறைகளில் எது சிறந்த சிகிச்சை முறை என்று கண்டறிந்து எடுப்பாய் காட்டவேண்டியது முக்கியமாகும். 

ஆய்வு பண்புகள்

நாங்கள் இந்த திறனாய்வில் சேர்ப்பதற்காக 2012 டிசம்பர் வரை 96 ஆய்வுகளை அடையாளம் கண்டோம். 10,401 பக்கவாத நோயாளிகள் பங்குகொண்ட இந்த ஆராய்ச்சிகள், பக்கவாத நோயாளிகளுக்கு செயல்பாடுதிறன் அல்லது நடமாட்ட திறனை ஊக்குவிக்க பல உடல்சார் புனர்வாழ்வு சிகிச்சைமுறைகளை, சிகிச்சை அளிக்காமை அல்லது வழக்கமான சிசிச்சை அல்லது அக்கறை மட்டும் அளிக்கப்படும் கட்டுப்பாட்டு குழு அல்லது பல்வேறுபட்ட இயன்முறை புனரமைப்பு அணுகுமுறைகளை ஒப்பிடுதலை உள்ளடக்கியவை ஆகும். ஒவ்வொரு ஆய்விலும் பங்கேற்பாளர்களின் சராசரி எண்ணிக்கை 105 இருந்தது: பெரும்பாலான ஆய்வுகள் (93%), 200 க்கு சற்று அதிகமான பங்கேற்பாளர்கள் கொண்டிருந்தது, ஒரு ஆய்வு 1000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை கொண்டிருந்தது, ஆறு ஆய்வுகள் 100 முதல் 250 பங்கேற்பாளர்களை கொண்டிருந்தது. மற்றும் 10 ஆய்வுகள் 20 அல்லது அதற்கு குறைவான பங்கேற்பவர்களை கொண்டிருந்தது. அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில் உதவி இல்லாமல் செயல்படுவது, இயக்கச் செயல்பாடு (செயல்பாட்டு அசைவுகள் functional movements), நடக்கும் வேகம் மற்றும் மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலம் ஆகியவை சிகிச்சையின் விளைவுபயனாக ஆய்வுகளில் எடுத்துக் கொள்ளப்படிருந்தது. இதில் பாதிக்கு மேற்பட்ட ஆராய்ச்சிகள் (50/96) சீனாவில் மேற்கொள்ளப்பட்வை. இந்த ஆய்வுகள் பக்கவாதம் வகைகள் மற்றும் நோயின் தீவிரத்தன்மை, அத்துடன் அளிக்கப்பட்ட சிகிச்சைமுறை, சிகிச்சை வகை மற்றும் கால அளவுக்கு தகுந்தார் போல் வேறுபட்டிருந்தது.

முக்கிய முடிவுகள்

இந்த ஆய்வு உடல்சார்ந்த மறுவாழ்வு (பெரும்பாலும் ஒரு இயன்முறை மருத்துவர், புனர்வாழ்வு மருத்துவர் மூலம் வழங்கப்படுகிறது) பக்கவாததிர்க்குப்பின் செயல்பாடு, இருப்பு மேம்படுத்தல் (balance) மற்றும் நடப்பது போன்ற செயல்களை மேம்படுத்தும் என்பதை உறுதிபடுத்தும் ஆதாரங்களை ஓன்று திரட்டியுள்ளது. சிகிச்சை அளிப்பவர்கள் ஒவ்வொரு நோயாளிக்கும் அளிக்கும் சிகிச்சையில் பரவலான உபோகிக்கும் வெவ்வேறு சிகிச்சைகள் முறைகளில் இருந்து தேர்வுசெய்த பலவேறுபட்ட சிகிச்சைகள் கலந்து அளிக்கும்போது அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இயன்முறை புனர்வாழ்வு, சிகிச்சை அளிக்காத நிலையோடு ஒப்பிட் 27 ஆராய்ச்சிகளில் (3234 பகவாத நோயாளிகள்) முடிவுகளை எங்களால் ஒருங்கிணைக்க முடிந்தது. 27 ஆராய்ச்சிகளில் 25 ஆராய்ச்சிகள் சீனாவில் மேற்கொள்ளப்பட்டவை. இந்த திறன் ஆய்வின் முடிவுகள் உடல்சார் மறுவாழ்வு செயல்பாட்டு திறன் மீட்பை அதிகரிக்கும் என்றும், இந்த முன்னேற்றம் நீண்ட காலம் நீடிக்கும் என்று காட்டியது. கூடுதல் உடல்சார் மறுவாழ்வு சிசிச்சை அள்ளிபது வழக்கமான அல்லது கட்டுப்பாடு சிகிச்சையுடன் ஓப்பிடும் போது, கூடுதல் உடல்சார் மறுவாழ்வு சிசிச்சை இயக்க செயல்பாடுகள் (12 ஆராய்ச்சிகள், 887 பக்கவாத நோயாளிகள்) மற்றும் நடை வெக்கத்தையும் (14 ஆராய்ச்சிகள், 1126 பக்கவாத நோயாளிகள்) மேம்படுத்தும் என்று ஆராய்ச்சிகளில் இருந்து நங்கள் பார்த்த ஆதாரங்கள் கூறுகின்றன. உடற்சார்ந்த புனர்வாழ்வு சிகிச்சையை, சிகிச்சை அளிக்காத அல்லது வழக்கமான சிகிச்சை பெற்றவர்களுடன் ஒப்பிடும்போது சிகிசை அளவு ஒரு நாளைக்கு 30 முதல் 60 நிமிடமாக, வாரத்திற்கு 5 முதல் 7 நாட்கள் சிகிச்சை வழங்குவது திறன்வாய்ந்தது என்று மிக குறைந்த ஆதாரங்கள் கூறுகிறது. பக்கவாதம் வந்த சில காலத்திலே, சிகிச்சை அல்ளிப்பது, மிகுந்த பயன் அளிக்கும் என்று அதாரங்கள் முலம் எங்கள்ளால் கண்டறியப்பட்டது, எனினும் இதனை உறுதி செய்ய மேலும் ஆராய்ச்சிகள் தேவைப்படுகிறது

எந்த ஒரு உடற்சார்ந்த மறுவாழ்வு அணுகுமுறையும் வேறு எந்த அணுகுமுறை காட்டிலும் மிகவும் பயனுள்ளதது என்று கூற எங்களுக்கு எந்த ஆதாரம் கிட்டவில்லை. இதன் அர்த்தம் என்னவென்றால் இயன்முறை மருத்துவர்கள், ஒவ்வொரு நோயாளிக்கு ஏற்றால்ப் போல சான்றுகளில் இருந்து குறிபிட்ட சிகிச்சை முறையை தேர்ந்து எடுக்கவேண்டும் மேலும் ஒரு 'பெயரிடப்பட்ட' அணுகுமுறை மட்டும் உபயோகிப்பதை தவிர்க வேண்டும்.

சான்றின் தரம்

தகவல்களை தரமற்ற, முழுமையற்ற அல்லது சுருக்கமான அறிக்கையிடல்களால் ஆதாரங்களின் தரத்தை மதிப்பிடுவது கடினமாக இருந்தது. 50% ஆய்வுகள் நல்ல தரமானவை என்று நாங்கள் தீர்மானித்தோம், மற்றும் பெரும்பாலான ஆய்வுகளில் ஆதாரத்தின் தரம் அளிக்கப்பட்டிருந்த தகவல்களில் இருந்து தெளிவாக தெரியவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: கா.ஹரிஓம், மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information