கீழ் முதுகு வலிக்கு பிலேட்ஸ் (Pilates)

திறனாய்வு கேள்வி

குறிப்பிட்ட காரணம் இல்லாத கடுமையான அல்லது நாள் பட்ட கீழ் முதுகு வழிநோயாளிகளுக்கு பிளட்ஸ் முறை விலைவுகளை தீர்மானிக்க.

பின்புலம்

கீழ் முதுகு வலி ஒரு முக்கியமான உடல் நலப் பிரச்சனையாக உள்ளது. இதற்கு பொதுவான சிகிச்சைகளில் ஒன்று உடற்பயிற்சி. சமீபத்திய காலத்தில் பிளட்ஸ் முறை சிகிச்சை பொதுவான தேர்வாக உள்ளது.

தேடல் தேதி

மார்ச் 2014 வரை தேடல்கள் நடத்தப்பட்டது. நங்கள் ஜூன் 2015ல் தேடல்களை புதுபித்தோம் அனால் இந்த முடிவுகள் இன்னும் சேர்க்கப்படவில்லை.

ஆய்வு பண்புகள்

இந்த திறனாய்வு 10 ஆய்வுகள் மற்றும் 510 நோயாளிகளை உள்ளடக்கியது. அணைத்து ஆய்வுகளிலும் ஒரே விதமான குறிப்பிட்ட காரணம் இல்லாத கீழ் முதுகு வலி கொண்டவர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். ஆய்வுகள் குறிப்பிட்ட காரணம் இல்லாத நாள்பட்ட கீழ்முதுகு வலி பங்கேற்பாளர்களை மட்டுமே கொண்டது. சேர்க்கப்பட்ட ஆய்வுகளில் கொடுக்கப்பட்ட சிகிச்சை திட்டங்களின் கால அளவு 10 நாட்களில் இருந்து 90 நாட்கள் வரையானதாக இருந்தன. தொடர் கண்காணிப்பு காலம் 4 மாதங்களில் இருந்து 6 மாதங்கள் வரை இருந்தது. உள்ளடங்கிய ஆய்வுகளில் ஆறுமாதங்களுக்கு மேல் தொடர் கண்காணிப்பு காலம் கொண்ட ஆய்வுகள் இல்லை. மாதிரி அளவுகள் (sample size)17 முதல் 87 பங்கேற்பாளர்களாக பரவிருந்தது.

முக்கிய முடிவுகள்

சேர்கபட்டுள்ள ஆய்வுகள், பிலேட்ஸ் மற்ற குறுகிய மற்றும் குறைந்தபட்ச தலையீடுகளுடன் ஒப்பிடுகையில் வலி மற்றும் இயலாமை ஆகியவற்றில் பெரும்பாலும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மற்றும் குறுகிய கால செயல்பாடு மற்றும் அணைத்து செயல்களிலும் முன்னேற்றத்தில் குறைந்தபட்ச் தலையீட்டைகாட்டிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றும் நீருபித்துள்ளது. பிலேட்ஸ் பெரும்பாலும் குறுகிய மற்றும் இடைநிலை கால வலி மற்றும் இயலாமை முன்னேற்றத்தில் மற்ற உடற்பயிர்ச்சிகளை விட மிகவும் பயன் நிறைந்தது அன்று. செயல்திறனுக்கு, உடற்பயிச்சி பிலேட்ஸ் முறையை காட்டிலும் இடைகால தொடர் கணகணப்பு மிகவும் பயனுள்ளது அனால் அப்பயன் குறைந்த காலதொடர் கணகணப்பில் இல்லை. கீழ் முதுகுவலிக்கு பிலேட்ஸ் திறன் வாந்தது என்று சில சான்றுகள் உள்ள போது, அது பிற வகையான உடற்பயிற்சிகளை விட மேன்மையானது என்று உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. தீங்கு விளைவிக்கும் நிகழ்வுகள் எதுவும் ஆராய்ச்சிகளில் தெரிவிக்கப்படவில்லை.

சான்றின் தரம்

அணைத்து திறனாய்வுகளிலும் ஆதாரங்கள் குறைவானது முதல் மிதமான வரையிலானத் தரத்தில் இருந்தது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: இ. நவீன் மற்றும் சி.இ, பி.என்.அர் குழு

Tools
Information