இதயத்தமனி நோய் தடுப்பிற்கான பச்சை மற்றும் கருந் தேநீர்

இதயத்தமனி நோய் (கார்டியோ-வாஸ்குலர் டிசிஸ், சிவிடி) என்பது ஒரு உலகளாவிய ஆரோக்கிய பராமரிப்பு சுமையாகும். என்றாலும், உணவு முறை, மற்றும் தேநீர் உட்கொள்ளுதல் போன்ற மாற்றக் கூடிய பல எண்ணிக்கையிலான அபாய காரணிகளை மாற்றுவது சிவிடியின் அபாயத்தைக் குறைக்கும் என்று எண்ணப்படுகிறது. ஆரோக்கியமான வயது வந்தவர்கள் மற்றும் சிவிடி அபாயம் கொண்டவர்களில், பச்சை தேநீர், கருந் தேநீர் அல்லது பச்சை/கருந் தேநீர் சாறுகளின் திறனை இந்த திறனாய்வு மதிப்பிட்டது. நாங்கள் 11 சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளை கண்டோம், அவற்றில் நான்கு கருந் தேநீர் தலையீடுகளை மற்றும் ஏழு பச்சை தேநீர் தலையீடுகளையும் ஆய்வு செய்தன. பச்சை மற்றும் கருந் தேநீர் சிகிச்சை தலையீடுகளின் அளவு மற்றும் வடிவு (பானம், மாத்திரைகள், அல்லது வில்லைகள்) ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந்தன மற்றும் சிகிச்சை தலையீடுகளின் கால அளவு மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை பரவியிருந்தன. சேர்க்கப்பட்டிருந்த சோதனைகளில், ஐந்து ஆய்வுகள் பாதகமான நிகழ்வுகளை அறிக்கையிட்டிருந்தன. இவை , சுக்கிலவக புற்றுநோய், ஃப்ளுவிற்காக மருத்துவமனையில் அனுமதித்தல், அப்பெண்டிஸ்சைடிஸ், மற்றும் விழித்திரை பிரிதல் ஆகியவற்றின் அறுதியீட்டை உள்ளடக்கின; சிகிச்சை தலையீட்டோடு இவை தொடர்புடையதாய் இருக்கவில்லை. கொழுப்பு அளவுகள் மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றின் மேல் பச்சை மற்றும் கருந் தேநீர் ஒரு நன்மையான விளைவை கொண்டிருந்தன என்று முடிவுகள் காட்டின; ஆனால் இந்த முடிவுகள், ஒரு தலைச் சார்பு அபாயத்தைக் கொண்ட சிறிய எண்ணிக்கையிலான சோதனைகளை அடிப்படையாக கொண்டிருந்தன. எல்டிஎல்-கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தின் மேல் தேநீர் நன்மையான விளைவுகளைக் கொண்டிருந்தன என்று இரண்டு தேநீர் வகைகளில் நடத்தப்பட்ட பகுப்பாய்வு காட்டியது; ஆனால் மறுபடியும், இவை ஒரு தலைச் சார்பு அபாயத்தைக் கொண்ட சிறிய எண்ணிக்கையிலான சோதனைகளை அடிப்படையாக கொண்டிருந்தன. இன்றைய தேதி வரை, இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அளவுகள் மீது பச்சை மற்றும் கருந் தேநீரின் சில நன்மைகளை, சேர்க்கப்பட்டிருந்த சிறிய எண்ணிக்கையிலான சோதனைகள் பரிந்துரைக்கின்றன, ஆனால், இவற்றை உறுதிப்படுத்துவதற்கு, குறைந்த ஒரு தலைச் சார்பு அபாயத்தைக் கொண்ட நீண்ட-கால சோதனைகள் தேவைப்படுகின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information