உடைந்த முழங்கால் தொப்பிகளுக்கான சிகிச்சைகள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

உடைந்த முழங்கால் தொப்பிகள் (முழங்கால் சில்லெலும்பு முறிவுகள்) அனைத்து முறிவுகளிலும் 1 சதவீதம் பங்களிக்கிறது. இந்த எலும்பு முறிவுகளுக்கு பல சிகிச்சைகள் உள்ளன மற்றும், அவைகளுக்கு அறுவை சிகிச்சை அல்லது பாரம்பரிய (அறுவை சிகிச்சை இல்லாத எந்த சிகிச்சையாவது) சிகிச்சை அளிக்கப்படலாம். பாரம்பரிய சிகிச்சை தலையீடுகளில், கட்டு அசைவின்மை, கட்டு, மற்றும் இழுவை மூலம் அசைவின்மை ஆகியவைகள் ஆகும். அறுவை சிகிச்சை, திறந்த அல்லது (ஒரு ஊசி மூலம்) தோல் மூலமாக இருக்க முடியும், உலோகம் அல்லது உலோகம் அல்லாத மாற்று சிகிச்சைகளை பயன்படுத்த முடியும், மற்றும் கம்பிகள், திருகுகள் அல்லது தட்டுகள் உட்பதிவு சிகிச்சைகளாக இருக்க முடியும்.

திறனாய்வின் நோக்கம்

அறுவை சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை இல்லாமல் வயது வந்தவர்களில், முழங்கால் தொப்பி முறிவுகளுக்கான பல்வேறு சிகிச்சை முறைகளின் விளைவுகளை மதிப்பீடு செய்ய இந்த திறனாய்வு நோக்கம் கொண்டுள்ளது. நோயாளி-மதிப்பிட்ட முழங்கால் செயல்பாடு, வலி ​​மற்றும் சிக்கல்கள் ஆகிய முக்கிய விளைவுகளில் நாங்கள் ஆர்வம் கொண்டிருந்தோம்.

தேடல் முடிவுகள் மற்றும் சான்றின் தரம்

மே 2014 வரையான அறிவியல் இலக்கியத்தை நாங்கள் தேடினோம் மற்றும் மொத்தம்169 பங்கேற்பாளர்கள் தொடர்புடைய ஐந்து ஆய்வுகளை நாங்கள் கண்டோம். இந்த ஆய்வுகளில் இருந்த பங்கேற்பாளர்கள் 16 மற்றும் 76 ஆண்டுகள் வரை வயதுடையவர்களாய் இருந்தனர். 68 பெண்கள் மற்றும் 100 ஆண்கள் இருந்தனர்; ஒரு பங்கேற்பாளரின் பாலினம் பற்றிய தகவல் இல்லை. இரண்டு ஆய்வுகள் சீனாவில் நடத்தப்பட்டது, மற்றும் பின்லாந்து, மெக்ஸிக்கோ மற்றும் துருக்கியில் தலா ஒன்று நடத்தப்பட்டது. பல்வேறு வகையான அறுவை சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை சாதனங்களை இந்த ஐந்து ஆய்வுகள் ஒப்பிட்டன. எனவே, பல்வேறு வகையான பாரம்பரிய சிகிச்சை அல்லது பாரம்பரிய சிகிச்சைக்கு எதிராக அறுவை சிகிச்சையை ஒப்பிட்ட ஆய்வுகளை நாங்கள் காணவில்லை.

ஐந்து ஆய்வுகள் மூன்று ஒப்பீடுகளை செய்தன. ஒவ்வொரு ஒப்பீட்டிற்கும் மிகவும் குறைந்த தரம் இருந்தது என்று நாங்கள் தீர்மானித்தோம். இது ஏனென்றால், அனைத்து சோதனைகளுக்கும் வடிவ குறைபாடுகள் காரணமாக உயர் தலை சார்பு அபாயம் இருந்தது மற்றும் ஆய்வுகள் மிக சிறியவையாகவும் இருந்தபடியால் இருந்தது.

சேர்க்கப்பட்டிருந்த ஆய்வுகள் என்ன கண்டுப்பிடித்தன

ஆரோக்கிய-தொடர்புடைய வாழ்க்கைத் தரம், முந்தைய செயல்பாட்டிற்கு திரும்புதல் அல்லது ஒப்பனை தோற்றம் ஆகியவற்றின் மேல் எந்த ஆய்வுகள் அறிக்கையிடவில்லை.

மக்கும் (உலோகம் அல்லாத) உட்பதிவுகளுக்கு எதிராக உலோக உட்பதிவுளை ஒப்பிட்ட இரண்டு ஆய்வுகள், இரண்டு குழுக்களுக்கு இடையே சிறியளவில் விளைவுகளை (முழங்கால் வலி, தீங்கு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடு) கண்டன. நோயாளி-மதிப்பிட்ட செயல்பாடு மீது எந்த ஆய்வும் அறிக்கையிடவில்லை.

சிக்கலான முழங்கால் தொப்பி முறிவுகளின் சிகிச்சைக்காக, தசைநார் மாற்றோடு சில்லெலும்பு நீக்கத்திற்கு எதிராக எளிய சில்லெலும்பு நீக்கத்தை ஒரு ஆய்வு ஒப்பிட்டது. தசைநார் மாற்று, சிறப்பான முழங்கால் செயல்பாட்டை அறிக்கையிட்ட அதிக பங்கேற்பாளர்களை அளித்தது மற்றும் வலி மற்றும் குறைவான முழங்கால் செயல்பாட்டை அறிக்கையிட்ட குறைந்த பங்கேற்பாளர்களை அளித்தது என்று காணப்பட்டது. ஒரு பங்கேற்பாளருக்கு ஒரு பாதகமான நிகழ்வு ஏற்பட்டது.

இரண்டு ஆய்வுகள், திறந்த அறுவை சிகிச்சையை காட்டிலும் தோல்மூலமாக நிலைப்பாட்டு புதிய முறைகள் (சிறிய கீறல்களை பயன்படுத்தி பொருத்துதல் சாதனங்கள் நுழைக்கும் அறுவை சிகிச்சை) குறைவான முழங்கால் வலி மற்றும் குறைந்த தீங்கு நிகழ்வுகள் (முக்கியமாக, எலும்பு முறிவு பொருத்துதல் பொருட்கள் தொடர்பான) ஏற்பட்டது என்று காணப்பட்டது. நோயாளி-மதிப்பிட்ட செயல்பாடு பற்றி எந்த ஆய்வும் அறிக்கையிடவில்லை.

முடிவுரைகள்

மொத்தத்தில், ஆதாரம் மிகக் குறைந்த தரத்தில் உள்ளது, மற்றும் முழங்கால் தொப்பி முறிவுகளுக்கான சிறந்த சிகிச்சை முறையை பற்றி உறுதியான முடிவுகளை எடுப்பதற்கு பற்றாக்குறையாக உள்ளது. ஒவ்வொரு நோயாளியின் அடிப்படையில், பலன்கள் மற்றும் பாதிப்புகளை கவனமாக பரிசீலித்து, ஒவ்வொரு சிகிச்சை தலையீடு மற்றும் நோயாளி விருப்பங்கள் ஏற்றவாறு சிகிச்சைகளை தேர்ந்தெடுக்க வேண்டும், எந்த ஆராய்ச்சி கேள்விகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் முந்தைய ஆராய்ச்சியை பின்தொடர்ந்து மேற்படியான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம்,ஸ்ரீகேசவன் சபாபதி.