உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களில் உடல் எடை-குறைக்கும் உணவுத் திட்டமுறைகளின் நீண்ட-கால விளைவுகள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

மருத்துவர்கள், உயர் இரத்த அழுத்தம் கொண்ட அதிக எடையுடைய நோயாளிகளுக்கு உடல் எடையை குறைக்க பொதுவாக பரிந்துரைப்பர். சில நேரங்களில் உடல் எடை மற்றும் இரத்த அழுத்த குறைவிற்கு உறுதுணையாக உடற் பருமன் -போக்கி மருந்துகளை எடுத்துக்கொள்ளும்படி பரிந்துரைப்பதும் இதில் அடங்கும். இரண்டு செயல்படு கலவைபொருட்கள் (சிபுட்ராமின் (sibutramine) மற்றும் ரிமோனபான்ட் (rimonabant)) முறையே 2009 மற்றும் 2010 ஆண்டுகளில் சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட்டன. உடல் பருமனுக்கான மருந்து மேலாண்மையில் நீண்டகால எடை குறைப்புக்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஐந்து மருந்தளிப்புகளை ( ஒர்லிஸ்டேட் (orlistat), லோர்காசெரின் (lorcaserin), ஃபென்டர்மைன்/ டோபிரமேட் (phentermine/topiramate, நல்ட்ரிக்சோன் / ப்யுரோபியோன் (naltrexone/bupropion) மற்றும் லிராகுளுடைடு (liraglutide) ) தற்போதைய வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளன. ஆனாலும் இவற்றில் இரண்டு மருந்துகளுக்கு (ஃபென்டர்மைன்/ டோபிரமேட் (phentermine/topiramate) மற்றும் லோர்காசெரின்(lorcaserin)) ஐரோப்பாவில் ஒப்புதல் பெறப்படவில்லை.

ஒர்லிஸ்டேட் (orlistat), சிபுட்ராமின் (sibutramine), மற்றும் ஃபென்டர்மைன்/ டோபிரமேட் (phentermine/topiramate) போன்ற மருந்துகள் மிதமான அளவு இடையை குறைக்கும் என்பதற்கான ஆதாரங்களை நாங்கள் கண்டறிந்தோம். ஒர்லிஸ்டாட் மற்றும் ஃபென்டர்மைன்/ டோபிரமேட் (phentermine/topiramate) இரத்த அழுத்தத்தைக் குறைத்தது. ஆனால் சிபுட்ராமின் (sibutramine) இரத்த அழுத்தத்தை உயர்த்தியது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களில் ரிமோனபான்ட் (rimonabant), லோர்காசெரின்(lorcaserin), லிராகுளுடைடு (liraglutide), அல்லது நல்ட்ரிக்சோன் / ப்யுரோபியோன் (naltrexone/bupropion) போன்ற மருந்துகளை ஆராய்ந்த ஆய்வுகள் எதையும் நாங்கள் கண்டறியவில்லை. மரணம் அல்லது நோய் பாதிப்பு அளவில் இந்த மருந்துகளின் விளைவுகளுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கப் பெறவில்லை. ஒர்லிஸ்டாட்-ற்கு இரைப்பை-குடல்வழி பாதிப்பும், சிபுட்ராமின்-ற்கு உலர்ந்த வாய், மலச்சிக்கல் மற்றும் தலைவலி ஆகியவையும் ஃபென்டர்மைன்/ டோபிரமேட் (phentermine/topiramat க்கு உலர்ந்த வாய், அசாதாரண-உணர்வுகள் போன்றவையும் பொதுவாக நிகழும் பக்க விளைவுகள்ஆகும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர் குழு