வயது வந்தோரில் ஏற்படும் கபவாதத்திற்கான (நிமோனியா) நெஞ்சு இயன்முறை சிகிச்சை

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

உலகம் முழுவதிலும், அனைத்து வயது பிரிவினரையும் பாதிக்கும் மிகவும் பொதுவான ஆரோக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக நிமோனியா விளங்குகிறது. நிமோனியா சிகிச்சையில் நுண்ணுயிர் கொல்லிகள் பிரதானமாக திகழுகின்றன, பிற சிகிச்சை முறைகள் பெரும்பாலும் ஆதரவளிக்கும் சிகிச்சைகளாக செயல்படுகின்றன. வயது வந்தோரில் ஏற்படும் நிமோனியாவிற்கான துணைச்சேர்ம சிகிச்சை முறையாக நெஞ்சு இயன்முறை சிகிச்சை எந்த நம்பகமான ஆதாரங்களும் இல்லாமல் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

434 பங்கேற்பாளர்களை மதிப்பிட்ட ஆறு சமவாய்ப்பு கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் சேர்க்கப்பட்டன. நான்கு வகை நெஞ்சு இயன் முறை சிகிச்சை முறைகளான பாரம்பரிய நெஞ்சு இயன்முறை மருத்துவம், ஆஸ்டியோபேதிக் கையாள்கை சிகிச்சை (முதுகு பகுதி தசைப்பிடிப்புகளை ​ மட்டுப்படுத்துதல், விலா எலும்பு உயர்த்துதல், மற்றும் உதரவிதான அல்லது மென்மையான தசை உறைத்திசு விடுவிப்பு உட்பட), தீவிர சுவாச கட்டுப்பாடு சுழற்சி நுட்பங்கள் (தீவிர சுவாச கட்டுப்பாடு, மார்பு விரிவாக்கப் பயிற்சிகள் மற்றும் கட்டாய சுவாச வெளியேற்றும் ​ நுட்பம் உள்ளிட்ட) மற்றும் நேர்மறை வெளிமூச்சு அழுத்தம் ஆகியவற்றை ஆய்வுகள் மதிப்பிட்டன. எந்தவொரு நுட்பங்களும் (இயன்முறை சாரா சிகிச்சைக்கு அல்லது மருந்துப்போலி சிகிச்சைக்கு எதிராக) இறப்பைக் குறைக்கவில்லை. மூன்று வகையான நுட்பங்கள் மத்தியில் (பாரம்பரிய நெஞ்சு இயன் முறை சிகிச்சை, தீவிர சுவாச கட்டுப்பாடு சுழற்சி நுட்பங்கள் மற்றும் ஆஸ்டியோபேதிக் கையாள்கை சிகிச்சை) இயன்முறை சாரா சிகிச்சை அல்லது மருந்துப்போலி சிகிச்சையுடன் ஒப்பிடும் போது அதிக சிறப்பான குணமாக்கும் விகிதத்தை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை. நேர்மறை வெளிமூச்சு அழுத்தம் (இயன்முறை சாரா சிகிச்சைக்கு எதிராக) மற்றும் ஆஸ்டியோபேதிக் கையாள்கை சிகிச்சை ஆகியவை (மருந்துப்போலி சிகிச்சைக்கு எதிராக) மருத்துவமனையில் தங்கும் காலத்தை சற்றே குறைக்க முடியும் (முறையே, 2.02 மற்றும் 1.4 நாட்கள்) என்று வரையறுக்கப்பட்ட சான்றுகள் காட்டுகிறது. மேலும், நேர்மறை வெளிமூச்சு அழுத்தமானது (இயன்முறை சாரா சிகிச்சைக்கு எதிராக) காய்ச்சலின் கால அளவை 0.7 நாள் என்றளவில் குறைக்க முடியும், ​மற்றும் ஆஸ்டியோபேதிக் கையாள்கை சிகிச்சை (போலி சிகிச்சைக்கு எதிராக) நுண்ணுயிர் கொல்லி​ மருந்துகளின் பயன்பாட்டை 1.93 நாட்கள் என்றளவில் குறைக்கக் கூடும். கடுமையான பாதக நிகழ்வுகள் எதுவும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.

சுருக்கமாக, வயது வந்தோரில் ஏற்படும் நிமோனியாவிற்கான வழக்கமான கூடுதல் சிகிச்சையாக நெஞ்சு இயன்முறை சிகிச்சை பரிந்துரைக்கப்படக்கூடாது. திறனாய்வின் சேர்கை பண்புகளை சந்தித்த ஆறு வெளியிடப்பட்ட ஆய்வுகள் (ஐந்து ரஷிய மொழியில் வெளியிடப்பட்டவை) வகைப்பாடு செய்ய காத்திருக்கிறது என்பது இந்த திறனாய்வின் வரையறையாகும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.