இதயத் தமனி நோய்க்கான முழுதானிய கூளவகைகள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

முழுதானிய உணவுகள், ஒரு பரந்த அளவிலான தயாரிப்புகளை உள்ளடக்கும் மற்றும் முழு தானிய கோதுமை, அரிசி, சோளம், மற்றும் ஓட்ஸ் ஆகியவை உதாரணங்கள் ஆகும். முழுதானியம் என்ற சொற்பதம், ஓட்ஸ்உணவு, மற்றும் முழூ உணவு கோதுமை போன்ற அரவை ஆலை முழு தானியங்களையும் உள்ளடக்கும். இந்த திறனாய்வில் கண்டறியப்பட்ட ஆதாரம், முழு தானிய ஓட்ஸ் மற்றும் கொழுப்புகளின் (லிபிட்ஸ்) மாற்றங்கள் என்ற ஒரு விளைவோடு வரம்பிற்குட்பட்டிருந்தது. பிற முழுதானிய உணவுகள் அல்லது உணவு திட்டங்கள் மீது ஆய்வுகள் இல்லை. ஒப்புமையான குறுகிய சிகிச்சை தலையீடுகளோடும் கூட, இதயத் தமனி நோய் அபாய காரணிகளோடு முன்பதாகவே அறுதியிடப்பட்டவர்களில், குறைந்த அடர்த்தி கொழுப்புப் புரதங்கள் கொலஸ்ட்ரால் மற்றும் மொத்த கொலஸ்ட்ரால் என்ற லிபிட் மட்டங்களை ஓட்ஸ்உணவுகள் நன்மை தரும் வகையில் குறைக்கின்றன என்பதற்கு சில ஆதாரம் இருக்கிறது. எனினும், காணப்பட்ட சோதனைகள் சிறிதாகவும், குறுகிய கால அளவுடையதாகவும்,மற்றும் பெரும்பாலனவை வணிக ரீதியாக நிதியளிக்கப்பட்டதாலும், முடிவுகளை கவனத்துடன் பொருள் விளக்கம் கொள்ள வேண்டும். இதயத் தமனி நோயினால் மரணங்கள் அல்லது இதயத் தமனி நோய் ஏற்படுதல் ஆகியவற்றின் மீது முழுதானிய உணவுகள் அல்லது உணவு திட்டங்களின் விளைவுகளை அறிக்கையிட்ட எந்த ஆய்வுகளையும் காணவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.