அதிக தண்ணீர் உட்கொள்ளுதல் சிறுநீரகக் கற்கள் மீண்டும் மீண்டும் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவக் கூடும் , ஆனால் அதிக ஆய்வுகள் தேவைப்படுகிறது

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

சிறுநீரகக் கற்கள் (மேலும், கால்குலி என்றும் அழைக்கப்படும்) என்பது படிகக்கற்கள் மற்றும் புரத திணிவுகள் ஆகும், மற்றும் வயது வந்தவர்களில் சிறுநீர் பாதை அடைப்பிற்கு பொதுவான காரணங்களாக இருக்கின்றன. நீண்ட காலமாக, நோய் மற்றும் அது மீண்டும் மீண்டும் நிகழ்வதற்கு அதிகப்படியான தண்ணீர் உட்கொள்ளுதல் முக்கிய தடுப்பு நடவடிக்கையாக இருக்கிறது. இந்த திறனாய்வில், மீண்டும் மீண்டும் ஏற்படுவதை மற்றும் மறுநிகழ்வுக்குப் தேவைப்படும் நேரத்தின் மேல் அதிகப்படியான தண்ணீர் உட்கொள்ளுதலின் விளைவை பார்த்த ஒரே ஒரு ஆய்வு மட்டும் கண்டறியப்பட்டது. அதிகப்படியான தண்ணீர் உட்கொள்ளுதல், மீண்டும் நிகழும் வாய்ப்பைக் குறைத்து விட்டது மற்றும் மறுநிகழ்விற்கான நேரத்தை அதிகரித்தது. மேற்படியான ஆய்வுகள் தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்:தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி.