நாள்பட்ட புண்களுக்கு சிகிச்சையளிக்க மிகை அழுத்த பிராணவாயு சிகிச்சை

பின்புலம்

ஆறுவதற்கு அதிகமான காலம் எடுத்துக் கொள்வது, ஆறாமல் இருப்பது அல்லது திரும்பவும் ஏற்படும் புண்கள் ஆகியவை நாள்பட்ட புண்கள் ஆகும்; இந்த புண்கள், நீரிழிவு நோய் அல்லது இரத்தத் தமனி அல்லது நாள வியாதியோடு (மோசமான இரத்த ஓட்டம்) தொடர்புடைய சீழ்ப் புண்களாகும். உயிர்வளிப் பற்றாக்குறையைக் (ஹைபாக்ஸ்சியா , குறைந்தளவு பிராணவாயு மட்டங்கள்) கொண்டிருக்கும் புண் திசுக்கள் என்பது நாள்பட்ட புண்களின் ஒரு சிறப்பியல்பாகும். நாள்பட்ட புண்கள் பொதுவாக ஏற்படுபவையாகும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரத்தைக் அது குறைக்கக் கூடும்.

மிகை அழுத்த பிராணவாயு சிகிச்சை (ஹைபர்பாரிக் ஆக்சிஜன் தெரபி, ஹச்ஓபிடி) என்பது பிற சிகிச்சைகளுக்கு கேட்காத புண்களுக்கு பிராணவாயு வழங்கலை அதிகரிப்பதற்கென்று வடிவமைக்கப்பட்ட ஒரு சிகிச்சையாகும். ஹச்ஓபிடி, ஒரு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சிறுகூடத்தில் (ஆழ் கடல் மூழ்காளர்கள் , கடலின் மேற்பரப்பிற்கு திரும்ப வரும் போது அவதிப்படும் அழுத்த பிரச்னைகளுக்கு பயன்படுத்துவதை போன்று) மக்கள் சுத்தமான பிராண வாயுவை சுவாசிக்க செய்வதை உள்ளடக்கும்.

திறனாய்வு கேள்வி

மிகை அழுத்த பிராணவாயு சிகிச்சை (ஹைபர்பாரிக் ஆக்சிஜன் தெரபி, ஹச்ஓபிடி), நாள்பட்ட புண்களுடைய மக்களில் குணமடைதலின் விகிதத்தை அதிகரித்து மற்றும் பகுதிச் சார்ந்த அல்லது முழுமையான கால் அங்க நீக்கத்தின் தேவையை குறைக்குமா? இந்த சிகிச்சை பாதுக்காப்பானாதா?

நாங்கள் கண்டது என்ன

இந்த புதுப்பிக்கப்பட்ட திறனாய்வில், பன்னிரண்டு சோதனைகளை (577 பங்கேற்பாளர்கள்) நாங்கள் உள்ளடக்கினோம். உள்ளடக்கப்பட்ட பெரும்பாலான சோதனைகள், நீரழிவு நோய் கொண்ட மக்களில் பாத சீழ்ப் புண்களை ஆராய்ந்தன (10 சோதனைகள்). நீரிழிவு-தொடர்புடைய பாத சீழ்ப் புண்களுக்கு, ஹச்ஓபிடி, நீண்ட-கால பின்-தொடர்தலோடு அல்லாமல் குணமாகுதலின் வாய்ப்பை குறைந்த காலக் கட்டத்தில் மேம்படுத்துவதாக தெரிகிறது. நாள்பட்ட பாத சீழ்ப் புண்களை கொண்ட நீரிழிவு நோய் மக்களில் முக்கிய அங்க நீக்கங்களின் எண்ணிக்கையை ஹச்ஓபிடி குறைக்கக் கூடும்.காலின் இரத்த நாளங்களுடைய நோய் காரணமாக ஏற்படும் நாள்பட்ட புண்களுக்கு, ஹச்ஓபிடி, புண்களின் அளவைக் குறைக்கக் கூடும்.இரத்த தமனிகள் வழியாக இரத்த ஓட்ட பற்றாக்குறை அல்லது நாள்பட்ட அழுத்தப் புண்களால் ஏற்படும் நாள்பட்ட புண்களுக்கு, ஹச்ஓபிடி-யின் எந்த விளைவுகளையும் உறுதிப்படுத்துவதற்கு அல்லது மறுப்பதற்கு எந்த ஆதாரத்தையும் நாங்கள் காணவில்லை.இந்த திறனாய்வில் உள்ளடக்கப்பட்ட எந்த சோதனைகளும் அவை முக்கிய பாதக நிகழ்வுகளைக் கொண்டிருந்தனவா என்று அறிக்கையிடாததால், எங்களால் பாதுகாப்பை பற்றி மதிப்பிட முடியவில்லை.

இந்த எளிய மொழிச் சுருக்கம், 23/1/15 வரை நிலவரப்படியானது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information