புகைப் பிடிப்பதை மக்கள் விடுவதற்கு உடற்பயிற்சி சிகிச்சை தலையீடுகள் உதவுமா

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

திறனாய்வு கேள்வி

புகைப் பிடிப்பதை விடுவதற்கு விரும்பும் மக்களில் உடற்பயிற்சி திட்டங்களின் விளைவு பற்றிய ஆதாரத்தை நாங்கள் திறனாய்வு செய்தோம். தனியான புகைப்பிடிப்பு நிறுத்த திட்டங்கள் அல்லது ஆரோக்கிய கல்வியோடு இணைந்த புகைப்பிடிப்பு நிறுத்த திட்டங்களை விட தனியான உடற்பயிற்சி சிகிச்சை தலையீடுகள் அல்லது புகைப்பிடிப்பு நிறுத்த திட்டங்களோடு இணைந்த உடற்பயிற்சி சிகிச்சை தலையீடுகள், அதிக மக்களுக்கு ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக புகைப் பிடிப்பதை விடுவதற்கு உதவினவா என்பதை நாங்கள் பார்த்தோம்.

பின்புலம்

சிறப்பு சிகிச்சை மையங்கள் மற்றும் சுய-உதவி பொருள்கள் புகைப் பிடிப்பதை விட விரும்பும் மக்களுக்கு உடற்பயிற்சியை வாடிக்கையாக பரிந்துரைக்கின்றன. முறையான உடற்பயிற்சியை மேற்கொள்வது, திரும்ப பெறல் மற்றும் தீவிர நாட்டம் ஆகியவற்றோடு உதவி, மற்றும் உடல் எடை அதிகரிப்பதை சமாளிக்கவும் உதவுவதன் மூலம் மக்கள் புகைப் பிடிப்பதை விடுவதற்கு உதவுகின்றது.

ஆய்வு பண்புகள்

ஆதாரம் ஏப்ரல் 2014 வரைக்கும் நிலவரப்படியானது. மொத்தம் 5,870 பங்கேற்பாளர்களைக் கொண்ட 20 சோதனைகளை நாங்கள் கண்டோம். ஒன்பது ஆய்வுகள் பெண்களில் மட்டும் இருந்தன மற்றும் ஒரு ஆய்வு ஆண்களில் மட்டும் இருந்தது. ஆய்வுகள், காலஅளவு மற்றும் அளிக்கப்பட்ட திட்டங்களின் தீவிரத்தில் வேறுப்பட்டிருந்தன. ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக புகைப் பிடிப்பதை அளவிட்ட ஆய்வுகளை மட்டுமே நாங்கள் உள்ளடக்கினோம். பெரும்பாலான சோதனைகளில், உடற்பயிற்சி திட்டங்கள், குழு மற்றும் வீடு-சார்ந்த உடற்பயிற்சியை உள்ளடக்கியிருந்தன.

முக்கிய முடிவுகள்

இந்த ஆய்வுகள் வெவ்வேறு விதங்களான மற்றும் தீவிரங்களை கொண்ட உடற்பயிற்சி திட்டங்களை பயன்படுத்தியதால், கண்டுப்பிடிப்புகள் கூட்டு சேர்க்கப்படவில்லை.

நான்கு ஆய்வுகளில், புகைப் பிடிப்பு நிறுத்த திட்டத்தை மட்டும் பெற்ற மக்களைக் காட்டிலும், உடற்பயிற்சியை பெற்ற மக்கள், சிகிச்சையின் முடிவில் புகைப் பிடிப்பதை விடுவதற்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிக சாத்தியத்தைக் கொண்டிருந்தனர். மக்கள புகைப் பிடிப்பதை நீண்ட-காலத்திற்கு விடுவதற்கு உதவிய உடற்பயிற்சிக்கான ஆதாரத்தை, 20 சோதனைகளில் இரண்டு ஆய்வுகள் மட்டுமே அளித்தன. இந்த ஆய்வுகளில் ஒன்றில், உடற்பயிற்சி குழுவிலிருந்த மக்கள் மூன்று மாத பின்-தொடர்தல் மற்றும் 12 மாதங்களில், குறிப்பிடத்தக்க உயர்ந்த அளவு புகைப் பிடித்தலை கைவிடும் விகிதங்களை கொண்டிருந்தனர், இந்த ஆய்விலுள்ள முடிவுகள் எல்லைக்குட்பட்டு குறிப்பிடத்தக்கவையாக இருந்தன. இந்த ஆய்வில், உடற்பயிற்சி திட்டத்தை பெற்ற மக்கள் 12 மாதங்களில் இரண்டு மடங்கு தொடர்ந்து புகைப் பிடிப்பதை கைவிட்டவர்களாய் நீடித்தனர். ஒரு சுருக்கமான புகைப் பிடிப்பதை கைவிடுவதற்கான ஆலோசனையோடு ஒப்பிடும் போது, ஒரு உடற்பயிற்சி மற்றும் புகைப் பிடிப்பு நிறுத்தத் திட்டத்தின் கூட்டு சிகிச்சையின் ஆறு மாத பின்-தொடர்தலில் குறிப்பிடத்தக்க உயர்ந்த அளவு புகைப் பிடித்தலை கைவிடும் விகிதங்களை இன்னொரு ஆய்வு அறிக்கையிடுகிறது. பிற ஆய்வுகள், புகைப் பிடித்தலை விடும் விகிதங்களின் மேல் உடற்பயிற்சி திட்டங்களின் விளைவை காணவில்லை, ஏனென்றால், அவை சிறிய ஆய்வுகளாகும் அல்லது உடற்பயிற்சி திட்டங்கள் போதுமான அளவு தீவிரமானவையாக இல்லாதது ஒரு காரணமாகும்.

சான்றின் தரம்

மக்கள் புகைப் பிடிப்பதை விடுவதற்கு உடற்பயிற்சி திட்டங்கள் உதவுமா என்பதற்கான ஆதாரத்தின் மட்டம் மிகவும் குறைவாக உள்ளது மற்றும் அதிக ஆராய்ச்சி தேவைப்படுகிறது. ஆய்வு வடிவமைப்பு, சாத்தியமான ஒரு தலை சார்பு அபாயம், மற்றும் ஆய்வுகளுக்கிடையேயான வித்தியாசங்கள் ஆகியவற்றில் பிரச்னைகள் உள்ளன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்