ஒழுங்கான உடற்பயிற்சி அல்லது உடற்பயிற்சியுடன் கூடிய விளக்கக் கல்வி மற்றும் உளவியல் ஆதரவு மூலம் இதய நோயால் இறக்கும் வாய்ப்பைக் குறைக்க முடியும்.

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

இதயத் தமனி நோய் (கரோனரி ஹார்ட் டிசிஸ், சிஹச்டி) இதய நோய்களில் மிகவும் பொதுவான ஒரு வகையாகும். இது, இதயத்தைச் சுற்றியுள்ள இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தியோ அல்லது தடுத்தோ இதயத்தைப் பாதிக்கிறது. இது மார்பில் இறுக்கம் (ஆன்ஜினா) போன்ற உணர்விற்கோ அல்லது மாரடைப்பிற்கோ வழி வகுக்கும். உடற்பயிற்சி-சார்ந்த இதய மறுவாழ்வு சிகிச்சை, ஒழுங்கான தனி உடற்பயிற்சி மூலமோ அல்லது உடற்பயிற்சி உடன் கூடிய விளக்கக்கல்வி மற்றும் உளவியல் ஆதரவு ஆகியவற்றின் சேர்க்கை மூலமாகவோ இதயத் தமனி நோய் கொண்ட மக்களின் ஆரோக்கியத்தை மீட்டளிக்க ​ நோக்கம் கொண்டுள்ளது. இந்த திறனாய்வின் கண்டுபிடிப்புகள், உடற்பயிற்சி-சார்ந்த மறுவாழ்வு சிகிச்சை இதய நோயால் இறக்கும் வாய்ப்பைக் குறைக்கிறது என்று குறிப்பிடுகிறது, மற்றும் அதிமுக்கியமாக, இவ்வாய்வுகளில் சேர்க்கப்பட்டிருந்த நடுத்தர வயது ஆண் நோயாளிகளின் வாழ்க்கைத் வாழ்க்கைத் தரத்தில் நிலவிய முன்னேற்றத்திற்கு ​மிதமான ஆதாரம் இருந்தது. ஒரு பரந்த அளவிலான நோயாளிகளில், உடற்பயிற்சி-சார்ந்த மறுவாழ்வு சிகிச்சையின் ஒட்டுமொத்தமான ஆரோக்கியத் தாக்கத்தை மதிப்பிட அதிகமான ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.