உறுப்பினர் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் நீங்கள் காக்ரேனிலிருந்து ("நாங்கள்" அல்லது "நம்") ஒரு உறுப்பினருக்கு வழங்கப்படும் சேவைகள் அல்லது நன்மைகள் என்ன என்பதை விவரிக்கிறது. காக்ரேன் உறுப்பினர் தகுதியை பெறுவதற்கு நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டிய விதிமுறைகளையும் அவர்கள் நிர்ணயிகிறார்கள்.

காக்ரேனின் Articles of Association எங்களின் உறுப்பினர்களுக்கு சட்ட விவரங்களையும் மற்றும் குறிப்புகளையும் வகுத்துள்ளது. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உறுப்பினர்களுக்கு மேலும் நடைமுறை விவரங்களை வழங்குகின்றன, ஆனால் Articles of Association யை மேலோங்கி செயல்படாது.

காக்ரேன் UK தொண்டு பதிவு எண் 1045921, பதிவுப்பட்ட அலுவலகம் St Albans House, 57-59 Haymarket, London, SW1Y 4QX, United Kingdom.

1. உறுப்பினர் வரையறை

பத்தி இரண்டில் உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு மற்றும் அதன் விதிகளில் தகுதிப்பெற்ற ஒரு நபரே காக்ரேனின் உறுப்பினர்.

2. உறுப்பினராக இருக்க தகுதி

நாங்கள் பங்களிப்பு-சார்ந்த உறுப்பினர் அமைப்பை செயல்படுத்துகிறோம். நீங்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணிகளை முடித்தவுடன் ஒரு வரையறுக்கப்பட்ட காலப்பகுதிக்கு காக்ரேன் உறுப்பினராக தகுதி பெறுவீர்கள். எங்கள் உறுப்பினர் தகுதியை பெறத் தேவையான பணிகள் எங்கள் உறுப்பினர் வரம்புகளில் விவரிக்கப்பட்டுள்ளது.

கீழே பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் பணி செய்பவர்களை தவிர்த்து உறுப்பினர் வரம்புகளை நிறைவேற்றுகிற யாருக்கும் காக்ரேன் உறுப்பினர் தகுதி கிடைக்க வாய்ப்புள்ளது.

 • மருந்து நிறுவனங்கள்; மற்றும்
 • மருத்துவ சாதன நிறுவனங்கள்.

இந்த நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் காக்ரேன் பணிகளில் அதிக கருத்து மோதல்களைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகின்றனர், எனவே காக்ரேன் உறுப்பினர்களாக ஆக இவர்களுக்கு தகுதியில்லை. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் 12 வது பிரிவுக்கு இணங்க தகுதிக்கான அடிப்படைகளை மேம்படுத்தவும் மற்றும் விரிவுபடுத்துவதற்கான உரிமையை நாங்கள் கொண்டுள்ளோம்.

3. உறுப்பினரின் கடமைகள்

உறுப்பினர் தகுதியை ஏற்றுக்கொள்வதால் நீங்கள்:

 • ஆளுமை குழு வாரியத்தால் நிறுவப்பட்ட காக்ரேன் விதிகள், கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்றுவதற்கு ஒப்புக்கொடுப்பது. கூடுதல் தகவலுக்கு எங்களைப் பற்றி வலைத்தளத்தில் பார்க்கவும்.
 • விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் 2 ஆம் பத்தியில் நீங்கள் உறுப்பினராவதற்கு நீங்கள் தகுதியானவர் என்பதை உறுதிப்படுத்துவதன் மூலம், பின்னர் நீங்கள் தகுதியை இழக்கும் நாளில் எங்களுக்கு தெரிவிக்கலாம்.
 • தகவல் பாதுகாப்புக் கொள்கை படி உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை கையாள்வதற்கு UK Data Protection Act 1998 ன் படி உபயோகித்துக்கொள்ள அனுமதிப்பெற்றவர்களாக செயல்படுகிறோம்.

4. உறுப்பினர் தகுதியை பெற்றுக்கொள்ள வேண்டும்

உறுப்பினர் தகுதி என்பது நீங்கள் காக்ரேனுக்கு என்ன பங்களித்தீர்கள் என்பதற்கான ஒப்புகையாக வழங்கப்படுகிறது. உறுப்பினர் தகுதி பெற பணம் செலுத்த முடியாது; உங்கள் பங்களிப்பு மூலம் மட்டுமே பெற முடியும்.

5. உறுப்பினரின் நலன்கள்

சேர்க்கப்பட்ட தற்போதைய நலன்கள், ஆனால் அவசியமாக வரையறுக்கப்படவில்லை:

 • உள் ஆட்சியின் பதவிகளுக்கு நிற்கும் உரிமை.
 • காக்ரேன் தேர்தல்களில் மற்றும் பொதுக்கூட்டங்களிலும் வாக்களிக்கும் உரிமை உள்ளது. ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு வாக்கு உண்டு.
 • உறுப்பினரின் பரிமாற்றம்

நலன்களை பிறருக்கு கொடுக்க முடியாது.

6. உறுப்பினரின் பரிமாற்றம்

ஒரு உறுப்பினராக உங்களுக்கு உறுப்பினர் மின்னஞ்சல் அனுப்பப்படும் அதன்மூலம் உள் கட்டமைப்பு பதவிகளில் இருக்கும் பதவிகளுக்கு ஓட்டு, பொது குழு கூட்டங்கள், மற்றும் உங்கள் உறுப்பினர் தகுதிக்கு தொடர்புடைய பிற தகவல்களை பெறுவீர்கள்.

உங்கள் உறுப்பினர் தொடர்பான மின்னஞ்சல்களையும் நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம், எடுத்துக்காட்டாக, நீங்கள் உறுப்பினர் பதவிக்காக தகுதிப்பெறும்போது அல்லது உங்கள் உறுப்பினர் காலாவதியாகிவிடும்போது, உங்கள் உறுப்பினர் உரிமையை பராமரிக்க பங்களிப்புகளை நிறைவேற்ற நினைவுப்படுத்துவோம்.

7. உறுப்பினர்களின் காலம்

உறுப்பினர் உரிமை காலவரையறைக்கப்பட்டது. ஒருவரின் பங்களிப்புகளுக்கு ஏற்ப உறுப்பினரின் விதிமுறைகளின் படி மாறுபடலாம். உங்கள் உறுப்பினர் தகுதி காலாவதியாகும் நாட்களுக்கு முன்கூட்டியே உங்களுக்குத் தெரிவிக்கப்படும், இதனால் உங்கள் உறுப்பினர் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள நீங்கள் மேலும் அதிகமான பங்களிப்பைச் செய்ய முடியும். உங்கள் உறுப்பினர் தகுதி காலாவதியாகும் பட்சத்தில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் 5 ஆம் பத்தியில் நிர்ணயிக்கப்பட்ட உறுப்பினர்களின் நலன்களை பெற உரிமையில்லை.

8. உறுப்பினர் தகுதியை மறுத்தல் அல்லது திரும்பப் பெறுதலுக்கான உரிமை

எங்கள் சங்கத்தின் விதிகள் 4 வது பிரிவின் படி ஆளுமை குழு ஒருவரின் உறுப்பினர் தகுதியை நிராகரிக்க அல்லது திரும்பப் பெற உரிமை உள்ளது.

9. உறுப்பினர் தகுதியை முடிவுக்கு கொண்டுவர உங்களுக்கு உரிமை உள்ளது.

membership@cochrane.orgதொடர்பு கொண்டு எந்த நேரத்திலும் உங்கள் உறுப்பினரை தகுதியை ரத்துசெய்யலாம். உங்கள் உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டவுடன், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் 5 ஆம் பத்தியில் இடம் பெற்றுள்ள விதிகளின்படி எந்த நலன்களையும் உரிமைக்கோர முடியாது.

10. உறுப்பினர் தகுதி மாற்றம்

உறுப்பினர்களின் தகுதியை பிறருக்கு மாற்றம் செய்ய முடியாது.

11. கேள்விகள், கருத்துகள் மற்றும் புகார்கள்

ஐந்து (5) வேலை நாட்களுக்குள் பெறப்பட்ட எந்தவொரு ஒரு கேள்விக்கும் அல்லது புகார்களுக்கும் பதிலளிப்பதை நாங்கள் இலக்காகக் கொண்டிருக்கிறோம். உங்கள் கேள்வி அல்லது புகாரை நாங்கள் பெற்றுள்ளோம் என்கின்ற ஒப்புகை அளித்து, மேலும் அதே நேரத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும்.

நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்:

 • மின்னஞ்சல் மூலம்: membership@cochrane.org;
 • தொலைபேசி மூலம்: +44 (0) 207 183 7503 (இணைப்புகள் Mon-Fri 9 am-5pm UK நேரம்) (இங்கிலாந்து பொது விடுமுறை தவிர்த்து); அல்லது
 • தபால் மூலம்: Cochrane, St Albans House, 57-59 Haymarket, London SW1Y 4QX, UK.

12. வேறுபாடு

நாங்கள் 14 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வாக அறிக்கை அனுப்பி எந்த நேரத்திலும் இந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மாற்றலாம். இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் சமீபத்திய பதிப்பானது அனைத்து உறுப்பினர்களுக்கும் பிணைப்பாக இருக்கும்.