நாள்பட்ட சிலேட்டும சூலை நோய் (கவுட்)-க்கான துணை உணவுத் திட்டங்கள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

கவுட் என்றால் என்ன, மற்றும் துணை உணவுத் திட்டங்கள் என்றால் என்ன ?

கவுட் என்பது, ரத்தத்தில் யூரிக் அமில அளவுகள் அதிகரிப்பதால் மூட்டுகளில் படிகம் உருவாகுவதன் மூலம் ஏற்படுகிறது. பெரும்பாலும், மக்கள் கால் கட்டை விரலில், வலி, ​​வெப்ப மற்றும் வீக்க தாக்குதல்களை கொண்டிருப்பர். சில மக்களுக்கு, தோலின் அடியில், 'டோபி' என அழைக்கப்படும் பெரிய படிக திரட்டுகள் உருவாகும். இரத்தத்தில் யூரிக் அமில அளவுகள் ஒரு நீண்ட நேரத்திற்கு சாதாரண நிலைக்கு திரும்பும் போது, படிக வைப்புகளைக் கரைய செய்வதன் மூலம் குணமாகுதலை அடைய முடியும்.

துணை உணவுத் திட்டங்கள் என்பது, வைட்டமின்கள், அத்தியாவசிய தாதுக்கள், ப்ரிபயாடிக்ஸ் போன்ற தயாரிப்புகளாகும். சில ஆய்வுகள், அவற்றின் நலன்களை மதிப்பீடு செய்தன, மற்றும் சிலது தீங்கு இல்லாமல் இருக்காது.

ஆய்வு பண்புகள்

6 ஜூன் 2013 வரைக்குமான மருத்துவ இலக்கியத்தை தேடிய பிறகு, நாங்கள் இரண்டு ஆய்வுகளை கண்டுப்பிடித்தோம். முதல் ஆய்வு (120 பங்கேற்பாளர்கள்), செறிவூட்டப்பட்ட கொழுப்பு நீக்கிய பால் தூளுடன்(சாத்தியமான எதிர்-வீக்க விளைவைக் கொண்ட பெப்டைட்ஸ்) பாரம்பரிய கொழுப்பு நீக்கிய பால் மற்றும் லாக்டோஸ் தூளை ஒப்பிட்டது, மற்றும் இரண்டாவது ஆய்வு (40 பங்கேற்பாளர்கள்), வைட்டமின் சி -யை, கவுட்டிற்கு பொதுவாக பயன்படுத்தப்படும் ஆலோபியூரினல் மருந்தோடு ஒப்பிட்டது. முதலாவது ஆய்வில், செறிவூட்டப்பட்ட பால் கவுட் தாக்குதல்களின் மறு நிகழ்வுகளை குறைப்பதற்கு நோக்கம் கொண்டது, அதே சமயம், இரண்டாவது ஆய்வில், வைட்டமின் சி இரத்தத்தில் யூரிக் அமில அளவை குறைக்க நோக்கம் கொண்டது. இந்த இரண்டு ஆய்வுகளிலும் சேர்ந்த கவுட் கொண்ட மக்கள், பெருமளவில் நடுத்தர-வயது ஆண்களாக இருந்தனர்; கொழுப்பு நீக்கிய பால் ஆய்வில், கவுட் கொண்ட பங்கேற்பாளர்கள் அதிக மறுநிகழ்வு தாக்குதல்கள் மற்றும் 20% முதல் 43% வரை டோபி உடைய, தீவிர நோய் கொண்டவர்களாக தெரிந்தனர். அதே வேளையில், வைட்டமின் சி ஆய்வில், பங்கேற்பாளர்கள் கவுட் கொண்ட சாதரண பங்கேற்பாளர்களுக்கு ஒத்திருந்தனர்.

முக்கிய கண்டுப்பிடிப்புகள் - செறிவூட்டப்பட்ட கொழுப்பு நீக்கிய பால் தூள் எடுத்துக்கொள்ளும் கவுட் கொண்ட மக்களுக்கு என்ன நடக்கும்?

கவுட் தாக்குதல்கள்

செறிவூட்டப்பட்ட கொழுப்பு நீக்கிய பால் தூளை உண்ட மக்கள், மூன்று மாதங்களில், மாதத்திற்கு 0.21 குறைவான கவுட் தாக்குதல்களை (0.76 குறைவானது முதல் 0.34க்கும் மேலாக) கொண்டிருந்தனர் அல்லது ஒரு வருடத்திற்கு 2.5 குறைவான கவுட் தாக்குதல்களைக் கொண்டிருந்தனர்.

-செறிவூட்டப்பட்ட கொழுப்பு நீக்கிய பால் தூளை உண்ட மக்களுக்கு, மாதத்திற்கு 0.49 கவுட் தாக்குதல்கள் (அல்லது வருடத்திற்கு ஆறு கவுட் தாக்குதல்கள் ) இருந்தது.

-நிலையான கொழுப்பு நீக்கிய பால் தூளைஅல்லது லாக்டோசை உண்ட மக்களுக்கு, மாதத்திற்கு 0.70 கவுட் தாக்குதல்கள் (அல்லது வருடத்திற்கு எட்டு கவுட் தாக்குதல்கள் ) இருந்தது.

தீய விளைவுகள் காரணமாக ஆய்வில் இருந்து விலகியவர்கள்

செறிவூட்டப்பட்ட கொழுப்பு நீக்கிய பால் தூள் உண்ட 100 பேருக்கு, மேலும் 4 மக்கள்,மூன்று மாதங்களில், துணை உணவு திட்டத்தை தொடரவில்லை (4% அதிகமான விலகியவர்கள்).

- 100ல் 18 பேர் செறிவூட்டப்பட்ட கொழுப்பு நீக்கிய பால் தூள் உட்கொள்வதை நிறுத்தினர்.

-100ல் 14 பேர் நிலையான கொழுப்பு நீக்கிய பால் தூள் அல்லது லாக்டோஸ் உட்கொள்வதை நிறுத்தினர்.

வலி குறைப்பு, சீரம் யூரிக் அமில (serum uric acid, sUA) அளவுகள் மற்றும் உடற் செயல்பாடு முடிவாகவில்லை. டோபி பின்னடைவின் மேலான விளைவு அளவிடப்படவில்லை.

கவுட் கொண்ட மக்கள் வைட்டமின் சி-யை உட்கொண்டால் என்ன நடக்கும்?

சீரம் யூரிக் அமில அளவுகள்

- வைட்டமின் சி உட்கொள்பவர்கள் மக்கள், எட்டு வாரங்களுக்குப் பிறகு, 0. 014 mmol / L ஆன sUA குறைவைக் காட்டினர் (அல்லது 2.8% sUA குறைப்பு).

-ஆலோபியூரினல் செலுத்தப்பட்ட மக்கள் எட்டு வாரங்களுக்குப் பிறகு, 0.118 mmol / L ஒரு sUA குறைவைக் காட்டினர் (அல்லது 23.6% sUA குறைப்பு).

வைட்டமின் சி அல்லது ஆலோபியூரினல் சிகிச்சை குழுக்களில், பக்க விளைவுகள் காரணமாக பக்க விளைவுகள் அல்லது விலகல்கள் பற்றி எந்த குறிப்புகளும் இல்லை.

கவுட் தாக்குதல்கள், வலி குறைப்பு, உடற் செயற்பாடு, மற்றும் டோபி பின்னடைவின் மேல் வைட்டமின் சி-யுடைய பலன்கள் அளவிட படவில்லை.

சான்றின் தரம்

ஒரு ஆய்வின் குறைந்த-தர சான்று, செறிவூட்டப்பட்ட கொழுப்பு நீக்கிய பாலை, நிலையான கொழுப்பு நீக்கிய பால் அல்லது லாக்டோஸ் தூளுடன் ஒப்பிடுகையில், கவுட் மறுநிகழ்வுகளை குறைக்கவில்லை அல்லது உடல் செயல்பாட்டை அல்லது யூரிக் அமில அளவுகளை மேம்படுத்தவில்லை, ஆனால் வலியைக் குறைக்கக் கூடும் என்று சுட்டிக்காட்டியது. மேற்படியான ஆராய்ச்சி இந்த மதிப்பீடுகளை மாற்ற வாய்ப்பு உள்ளது. பக்க விளைவுகள் மற்றும் சிக்கல்கள் பற்றிய துல்லியமான தகவல் எங்களுக்கு இல்லை, ஆனால் சாத்தியமான பக்க விளைவுகளில், குமட்டல் அல்லது வயிற்றுப்போக்கு ஆகியவை அடங்கும்.

பொதுவாக பயன்படுத்தப்படும் ஆலோபியூரினல் மருந்துடன் ஒப்பிடுகையில், sUA அளவுகளை குறைப்பதில் வைட்டமின் சி-யின் விளைவு சிறிதாகும் மற்றும் மருத்துவரீதியாக முக்கியத்துவமற்றதாகும் என்று ஒரு ஆய்வில் இருந்த குறைந்த-தர சான்று சுட்டிக்காட்டியது. வைட்டமின் சி-யின் பிற நன்மைகள் ஆய்வு செய்யப்படாததால், அவை உறுதியற்றதாக இருக்கிறது. எந்த பக்க விளைவுகளும் பதிவிடப்படவில்லை. மேற்படியான ஆராய்ச்சி இந்த மதிப்பீடுகளை மாற்ற வாய்ப்பு உள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.