கடுமையான பக்கவாதத்திற்கு காமா அமினோ-பியூட்ரிக் அமிலம் வாங்கி முதன்மை இயக்கிகள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

கேள்வி:கடுமையான பக்கவாதத்திற்கு காமா அமினோ-பியூட்ரிக் (GABA) அமிலம் ஒரு திறனான மற்றும் பாதுகாப்பான சிகிச்சையா?


பின்புலம்காமா அமினோ-பியூட்ரிக் (GABA) அமிலம் வாங்கி முதன்மை இயக்கிகள் ஒரு வகையான மருந்து, அது கடுமையான பக்கவாதத்தின் போது மூளையைப் பாதுகாக்க உதவும். டையஸிபம் மற்றும் குளோரோமேதியசோல் (chloromethiazole) ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த வர்க்கத்தை சேர்ந்த மருந்துகள் காலங்காலமாக பாரம்பரியமிக்க தூக்க மருந்துகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்.மேலும் பக்கவாத விலங்கு மாதிரிகளில் பயனுள்ளதாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ள எனினும் காபா வாங்கி முதன்மை இயக்கிகளின் தணிவு விளைவு கடுமையான பக்கவாதம் கொண்ட நோயாளிகளுக்குத் தீங்கு ஏற்படுத்தக்கூடும்

ஆய்வின் தன்மைகள்: மார்ச் 2016 வரை எங்களுடைய தேர்வு அடிப்படைக் கூறுக்கு உட்பட்ட 5 ஆராய்ச்சிகளைை நாங்கள் கண்டறிந்தோம். இவை் 3838 பங்கேற்பாளர்களைக் கொண்டிருந்தன, அதில் 3758 பேர் மதிப்பிடு செய்யப் பட்டார்கள். பொதுவாக அணைத்து ஆராய்ச்சிகளின் பாரபட்ச ஆபத்து (risk of bias) குறைவாகவும், தரம் நன்றாகவும் இருந்தது . பக்கவாதம் வந்த 12 மணி நேரத்திற்குள்ளாக டையஸிபம் சிகிச்சை அளிக்கப்பட்ட 849 பங்கேற்பாளர்களைக் கொண்ட ஒரு ஆய்வு அதன் திறன் மற்றும் பாதுகாப்பை மதிப்பீடு செய்தது 12 மணி நேரத்திற்குள் தொடங்கிய குறுகிய கால (acute) பக்கவாதம் வந்தவர்களுக்கு குளோரோமேதியசோல் (chloromethiazole) னுடைய திறன் மற்றும் பாதுகாப்பைச் சோதித்த 2909 பங்கேற்பாளர்களைக் கொண்ட 4 ஆராய்ச்சிகள் மதிப்பீடு செய்யப்பட்டன; இரத்தக்கசிவு வாதம் (hemorrhagic stroke ) வந்த 95 பங்கேற்பாளர்கள் தனியாக மதிப்பீடு செய்யப்பட்டனர்.முதன்மை முடிவு: 3 மாதங்களுக்குப் பின் இறப்பு மற்றும் சார்பு நிலை பற்றி 5 ஆய்வுகளும் தகவல் தெரிவித்தன. குளோரோமேதியசோல் (chloromethiazole)க்கும் மருந்தற்ற குளிகை குழுக்களுக்கும் இடையே அல்லது டையஸிபம்முக்கும் மருந்தற்ற குளிகை குழுக்களுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு எதுவும் இல்லை. குளோரோமேதியசோல் (chlormethiazole) உட்கொள்வதால் அடிக்கடி உண்டாகும் பாதகமான நிகழ்வுகள் அயர்வு மற்றும் நாசியழற்சி ஆகும்.

ஆதாரங்களின் தரம். முடிவாக, கடுமையான பக்கவாதத்திற்கு, GABA வாங்கி முதன்மை இயக்கி பயன்படுத்தி சிகிச்சை அளிக்க ஆதரவாக திருப்திகரமான ஆதாரம் எதுவும் இல்லை என்று மிதமான -தர ஆதாரம் கூறுகிறது. குளோரோமேதியசோல் (chlormethiazole) உட்கொள்வதால் அடிக்கடி உண்டாகும் பாதகமான நிகழ்வுகள் அயர்வு மற்றும் நாசியழற்சி ஆகும்

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: இ. நவீன் மற்றும் சி.இ.பி.என்.அர் குழு