இறுதிக்-கட்ட சிறுநீரக நோயிற்கு வீட்டில் மற்றும் மருத்துவமனையில் செய்யப்படும் ஹீமோடையாலைசிஸ் ஒப்பீடு

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

வீட்டில் செய்யப்படும் ஹீமோடையாலைசிஸ்-ஐ கொண்ட மக்கள் சிறப்பான வாழ்க்கைத் தரம் மற்றும் உயிர் வாழுதலைக் கொண்டுள்ளனர் என்று அநேக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், இந்த பகுப்பாய்வுகள் சீரற்ற முறையில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை (அதாவது, வீட்டில் ஹீமோடையாலைசிஸ்-ஐ செய்துக் கொள்ளும் மக்கள் இளம் வயதினராயும் மற்றும் வெகு குறைவான ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டிருக்கக் கூடும், ஆதலால், விளைவுகளில் முன்னேற்றம் தெரிந்திருக்கலாம்.)

வீட்டில் செய்யப்படும் ஹீமோடையாலைசிஸ்-ஐ, நோயாளியின் மற்றும் குடும்பத்தினரின் பளுவை மற்றும் ஹீமோடையாலைசிஸ்-ஐ ஸ் செய்வதற்கு இரத்த நாள நுழைவோடு தொடர்புடைய அபாயங்களின் தீங்குகளை அதிகரிக்கும்.

பங்கேற்பாளர்கள் வெவ்வேறு சிகிச்சை குழுக்களுக்கு சீரற்ற முறையில் ஒதுக்கீடு செய்யப்படும் போது, மருத்துவமனை அல்லது ஒரு மருத்துவ மையத்தில் செய்யப்படும் ஹீமோடையாலைசை ஒப்பிடுகையில் வீட்டில் செய்யப்படும் ஹீமோடையாலைசிஸ் மருத்துவ விளைவுகளை மேம்படுத்துமா என்பதை நாங்கள் ஆராய்ந்தோம்.

மருத்துவமனையில் செய்யப்படும் ஹீமோடையாலைசை வீட்டில் செய்யப்படும் ஹீமோடையாலைசிஸோடு ஒப்பிட்ட ஆய்வில் வெறும் ஒன்பது நோயாளிகளே இருந்தனர். உயிர் வாழ்தல், அல்லது மருத்துவமனை அனுமதித்தல் போன்றவற்றின் மீது வீட்டில் செய்யப்படும் ஹீமோடையாலைசிஸ் பற்றி அறிந்துக் கொள்ள போதுமான தகவல் இல்லை. வீட்டில் செய்யப்படும் ஹீமோடையாலைசிஸ் இரத்த அழுத்தம் மற்றும் உடலியல் அறிகுறிகள் ஆகியவற்றை மேம்படுத்தும், ஆனால், குடும்பங்கள் மற்றும் நோயாளிகளின் மீதான சுமையை அதிகரிக்கக் கூடும். சீரான ஆய்வுகளில் காட்டப்பட்ட வீட்டில் செய்யப்படும் ஹீமோடையாலைசிஸ்-யின் சாத்தியமான விளைவை காட்டும், வீட்டில் செய்யப்படும் ஹீமோடையாலைசிசின் மருத்துவ பராமரிப்பு மற்றும் கொள்கைக்கு அறிவுறுத்த பெரியளவிலான சீரற்ற சோதனைகள் தேவைப்படுகின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சி[ந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்