பக்கவாத நோயாளிகளில் புலனறிவு குறைப்பாட்டிற்கான ஆக்குபேஷனல் தெரபி

பக்கவாதத்திற்கு பின்னர், புலனறிவு குறைப்பாடு ஏற்படுவது பொதுவானதாகும். அது, உடை உடுத்துவது, சாப்பிடுவது மற்றும் குளிப்பது போன்ற அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளை செய்யக் கூடிய ஒரு நபரின் திறனை பாதிக்கும். மக்கள் தங்களின் அதிகபட்சமான பிறர் சார்பின்மையை அடைவதற்கு உதவ ஆக்குபேஷனல் தெரபி நோக்கம் கொண்டுள்ளது. பக்கவாதம் கொண்ட மக்களில் புலனறிவு குறைப்பாட்டிற்கான ஆக்குபேஷனல் தெரபியின் திறனிற்கு தற்போது போதுமான ஆதாரம் இல்லையென 33 ஆய்வு பங்கேற்பாளர்களைக் கொண்ட ஒரு ஆய்வினை உள்ளடக்கிய இந்த திறனாய்வு கண்டது. பக்கவாதத்திற்கு-பின் ஏற்படும் புலனறிவு குறைப்பாட்டிற்கான ஆக்குபேஷனல் தெரபி சிகிச்சைகளை சோதிக்க சிறப்பாக-வடிவமைக்கப்பட்ட அதிக மருத்துவ சோதனைகள் தேவைப்படுகின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information