தசை சீர்குலைவுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான கிரியாட்டின்

பொதுவாக, மரபு வழியான தசை வியாதிகள் தீவிரமடைந்து செல்லும் தசை பலவீனத்திற்கு வழி நடத்தும். குணப்படுத்தும் சிகிச்சை முறைகள் இல்லாத காரணத்தினால், சிகிச்சை, முக்கியமாக, அறிகுறிகளை சார்ந்து இருக்கும். தடகள வீரர்கள் மத்தியில் மிக பிரபலமான கிரியாட்டின் என்ற ஒரு ஒரு உபரி சத்து, ஆரோக்கியமான தனிநபர்களில் தசை செயல்திறனை மேம்படுத்தும். இது, 2007-ல் தசை சீர்குலைவுகளுக்கு கிரியாட்டின் சிகிச்சையை மதிப்பிட்டு முதலில் வெளியான எங்களுடைய திறனாய்வின் புதுப்பித்தல் ஆகும். இந்த புதுப்பித்தலில், நாங்கள் எந்த புதிய ஆய்வுகளையும் அடையாளம் காணவில்லை, ஆனால் அதற்கு முன்பதாக, எங்களுடைய சேர்க்கை திட்ட அளவையை சந்தித்த, 364 பங்கேற்பாளர்களைக் கொண்ட 14 சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளை நாங்கள் கண்டோம். ஒரே ஒரு விதிவிலக்கை தவிர, இந்த ஆய்வுகளின் செயல்முறையியல் தரம் உயர்ந்ததாக இருந்தன. கிரியாட்டின் சிகிச்சையை போலி சிகிச்சையோடு ஒப்பிட்ட போது, தசை வளக் கேடுகளின் தசை வலிமை மற்றும் தசை வளக் கேடுகள் மற்றும் வீக்க தசை அழிவு நோய்களின் அன்றாட நடவடிக்கைகளில் ஒரு குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தை சேர்க்கப்பட்ட முடிவுகளின் பகுப்பாய்வு காட்டியது. v வகை க்லைக்கோஜென் சேமிப்பு வியாதி கொண்டிருந்த மக்களில் மட்டும், அதிகரித்த தசை வலி நிகழ்வுகள், மற்றும் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில் குறைபாடு போன்ற குறிப்பிடத் தகுந்த பாதகமான நிகழ்வுகள் ஏற்பட்டன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி. 

Tools
Information