இதய பிரச்னைகளோடு பிறந்த வளர் இளம் பருவத்தினர் மற்றும் வயது வந்தவர்களில் மனச்சோர்விற்கான உளவியல் சிகிச்சைகள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

சில நேரங்களில், இதய பிரச்னைகளோடு பிறந்த வளர் இளம் பருவத்தினர் மற்றும் வயது வந்தவர்கள் வளரும் போது மனச்சோர்வு கொண்டிருப்பர். மனச்சோர்வு நீக்கி மருந்துகள் தவிர அவர்களுக்கு உதவும் சிகிச்சைகளில் , உளச்சிகிச்சை, புலனுணர்வு நடத்தை சிகிச்சைகள் மற்றும் உரையாடல் சிகிச்சைகள் ஆகியவை உள்ளடங்கும். சிகிச்சை எடுத்துக்கொள்வதினால் வரும் நன்மைகள் வாழ்க்கைத் தர மேம்பாட்டை உள்ளடக்கும், மற்றும் சிகிச்சை எடுத்துக்கொள்வதினால் வரும் குறைகளில், அதிக தீவிரமான மனச்சோர்வு மற்றும் குறைந்த வாழ்க்கைத் தரம் ஆகியவை உள்ளடங்கும். பிறவி இதய நோய் கொண்ட வளர் இளம் பருவத்தினர் மற்றும் வயது வந்தவர்களில், மனச்சோர்விற்கு சிகிச்சை அளிப்பதற்கான உளவியல் சிகிச்சை தலையீடுகளுடைய விளைவுகளின் (தீங்குகள் மற்றும் நன்மைகள் இரண்டும்) மீதான முந்தைய திறனாய்வை புதுப்பிப்பதை எங்களின் நோக்கமாக கொண்டோம். புலனுணர்வு நடத்தை சிகிச்சை, உளச்சிகிச்சை அல்லது உரையாடல்/ கலந்தாலோசனை சிகிச்சை ஆகியவை மனச்சோர்விற்கான உளவியல் சிகிச்சை தலையீடுகளில் அடங்கும். முந்தைய தேடல்களை பிப்ரவரி 2013 வரை நாங்கள் புதுப்பித்தோம், மற்றும் பிறவி இதய நோய் கொண்ட வளர் இளம் பருவத்தினர் மற்றும் வயது வந்தவர்களில் மனச்சோர்விற்கு சிகிச்சையளிப்பதற்கு உளச்சிகிச்சை, புலனுணர்வு நடத்தை சிகிச்சைகள், மற்றும் உரையாடல் சிகிச்சைகளுடைய விளைவுகள் பற்றி சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளிலிருந்து எந்த ஆதாரத்தையும் நாங்கள் காணவில்லை. பிறவி இதய நோயில் மனச்சோர்விற்கான உளவியல் சிகிச்சை தலையீடுகளின் விளைவுகளை மதிப்பிட ஒரு சிறப்பாக-வடிவமைக்கப்பட்ட சீரற்ற கட்டுபடுத்தப்பட்ட சோதனை தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.