பக்கவாதத்திற்கு பின்னான மனச்சோர்வை தடுப்பதற்கான சிகிச்சை தலையீடுகள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

பக்கவாதத்திற்கு பின்னான மனச்சோர்வை தடுப்பதில் சிகிச்சை தலையீடுகளின் பங்கு தெளிவாக இல்லை. பக்கவாதத்திற்கு பின், மனச்சோர்வு என்பது அடிக்கடி விடப்பட்டு அல்லது மிக மோசமாக மேலாண்மை செய்யப்பட்ட மிக பொதுவான மற்றும் ஒரு முக்கிய சிக்கலாகும். பக்கவாதத்திற்கு பின் விரைவாக தொடங்கப்படும் சிகிச்சை மனச்சோர்வின் அபாயத்தை குறைத்து மற்றும் மீட்சியை மேம்படுத்துமா என்பது பற்றி மிக குறைவாகவே அறியப்படுகிறது. மனச்சோர்வு நீக்கி மருந்துகள் மனச்சோர்வை தடுக்கும் அல்லது பக்கவாதத்திற்கு பின் மீட்சியை மேம்படுத்தும் என்பதற்கு 1515 பங்கேற்பாளர்களை கொண்ட 14 சோதனைகளின் இந்த திறனாய்வு எந்த ஆதாரத்தையும் காணவில்லை. உளவியல் சிகிச்சை, நோயாளியின் மனோநிலையை மேம்படுத்தும் மற்றும் மனச்சோர்வை தடுக்கும், ஆனால் பிற விளைவுகளை மேம்படுத்தாது என்று இரண்டு சோதனைகள் காட்டின. இந்த மருத்துவ சோதனைகளில் மிக சிறிய விகிதத்தில் பக்கவாதத்திலிருந்து பிழைத்தவர்கள் பங்கு பெற்றதினால், இந்த முடிவுகள், எல்லா பக்கவாதத்திலிருந்து பிழைத்தவர்களுக்கு பொத்தம் பொதுவாக பொருந்துவது வரைமுறைக்குட்பட்டுள்ளது. பக்கவாதத்திலிருந்து பிழைத்த எல்லோரிலும் மனச்சோர்வை தடுப்பதற்கான நடைமுறை சிகிச்சை தலையீடுகளை ஆராய அதிக, சிறப்பாக -வடிவமைக்கப்பட்ட மருத்துவ சோதனைகள் தேவைப்படுகின்றன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.