இடுப்பு அல்லது முழங்கால் மூட்டு மாற்றுக்கான அறுவைச் சிகிச்சைக்கு முன்பான விளக்கக் கல்வி

பின்புலம்- அறுவைச் சிகிச்சைக்கு முன்பான விளக்கக் கல்வி என்றால் என்ன?

அறுவைச் சிகிச்சைக்கு முன்பான விளக்கக் கல்வி என்பது மக்களின் அறிவு, ஆரோக்கிய நடத்தைகள் மற்றும் சுகாதார விளைவுகளை மேம்படுத்தும் நோக்கில் அறுவை சிகிச்சைக்கு முன்னர் அளிக்கப்படும் ஏதாவதொரு விளக்கக் கல்வி தலையீட்டைக் குறிக்கிறது. அறுவைச் சிகிச்சைக்கு முன்பான விளக்கக் கல்வியின் உள்ளடக்கம், அமைப்புகளிடையே வேறுபடுகிறது, ஆனால் அறுவைச் சிகிச்சைக்கு முன்பான நடைமுறைகள், அறுவைச் சிகிச்சை நடைமுறையின் உண்மையான படி நிலைகள், அறுவைச் சிகிச்சைக்கு பின்பான பராமரிப்பு, அறுவைச் சிகிச்சையுடன் தொடர்புடைய சாத்தியமான மன அழுத்த நிலைகள் , சாத்தியமான அறுவைச் சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சை தொடர்பில்லாத சிக்கல்கள் , அறுவைச் சிகிச்சைக்கு பின் வலி மேலாண்மை மற்றும் அறுவைச் சிகிச்சைக்கு பின்பான தவிர்க்க வேண்டிய இயக்கங்கள் ஆகியவை பற்றிய​ விவாதத்தைக் அடிக்கடி கொண்​டிருக்கிறது. விளக்கக் கல்வியானது​, பெரும்பாலும் இயன் முறை சிகிச்சையாளர்கள், செவிலியர்கள் அல்லது உளவியலாளர்கள் உட்பட பல்வகை அணிகளின் உறுப்பினர்கள் மூலம் வழங்கப்படுகிறது. விளக்கக் கல்வி வடிவமானது ஒருவரிடமிருந்து-ஒருவருக்கான மொழித் தொடர்பு, நோயாளி குழு அமர்வுகள் அல்லது காணொளி அல்லது மொழித் தொடர்பு இல்லாத கையேடு என மாறுபடுகிறது.

ஆய்வு பண்புகள்

இந்த காக்ரேன் திறனாய்வு சுருக்கம், அறுவைச் சிகிச்சைக்கு முன்பான விளக்கக் கல்வியை வழக்கமான பராமரிப்புடன் ஒப்பிடுகையில், இடுப்பு அல்லது முழங்கால் மாற்று பெறும் மக்களில் விளைவுகளை மேம்படுத்துகிறதா (எ.கா. வலி, செயல்பாடு) என்பதைப் பற்றிய ஆராய்ச்சியில் இருந்து நாம் என்ன அறிகிறோம் என்பதை அளிக்கிறது. மே 2013 வரை அனைத்து தொடர்புடைய ஆய்வுகளை தேடிய பிறகு, கடந்த திறனாய்வு முதல் ஒன்பது புதிய ஆய்வுகளுடன் மொத்தம் நாங்கள் 18 ஆய்வுகளைச் (1463 பங்கேற்பாளர்கள்) சேர்த்தோம்; 13 சோதனைகள் இடுப்பு மாற்று மேற்கொண்ட 1074 மக்களை (மொத்தம் 73%) உள்ளடக்கியது, மூன்று முழங்கால் மாற்று மேற்கொண்ட மக்கள் சம்பந்தப்பட்டது மற்றும் இரண்டு, இடுப்பு மற்றும் முழங்கால் மாற்று மேற்கொண்ட இருவகை மக்களையும் உள்ளடக்கியது. பெரும்பாலான பங்கேற்பாளர்கள் பெண்களாக (59 %) இருந்தனர் மற்றும் பங்கேற்பாளர்களின் சராசரி வயது 58லிருந்து 73 ஆண்டுகளுக்கிடையிலான எல்லைக்குள் இருந்தது

முக்கிய முடிவுகள்- இடுப்பு மாற்றுக்காக அறுவைச் சிகிச்சைக்கு முன்பான விளக்கக் கல்வி மேற்கொண்ட மக்களை வழக்கமான பராமரிப்பு மேற்கொண்ட மக்களுடன் ஒப்பிடுகையில் என்ன நடக்கும்.

அறுவைச் சிகிச்சைக்கு பின்பான பதட்டம் (குறைந்த மதிப்பெண்களின் அர்த்தம் குறைந்த பதட்டம்):

அறுவைச் சிகிச்சைக்கு முன்பான விளக்கக் கல்வி கொண்ட இடுப்பு மாற்று மேற்கொண்ட மக்களில் அறுவைச் சிகிச்சைக்கு பின்பான பதட்டம் ஆறு வாரங்களில் 2.28 புள்ளிகள் குறைவாக இருந்தது (5.68 புள்ளிகள் குறைந்ததிலிருந்து 1.12 புள்ளிகள் உயர்ந்தது வரையிலான இடைவெளியில்), (4% முழுமையான முன்னேற்றம் , 10% முன்னேற்றத்திலிருந்து 2 % மோசமடைதல் வரையிலான இடைவெளியில்) - இடுப்பு மாற்றுக்கு வழக்கமான பராமரிப்பு மேற்கொண்ட மக்கள் 20 முதல் 80 புள்ளிகள் என்ற அளவுகோலில் தங்கள் அறுவைச் சிகிச்சைக்குப் பின்பான பதட்டத்தை 32.16 புள்ளிகள் என மதிப்பீடு செய்தார்கள்.

வலி (குறைந்த மதிப்பெண்களின் அர்த்தம் குறைந்த வலி):

அறுவைச் சிகிச்சைக்கு முன்பான விளக்கக் கல்வி கொண்ட இடுப்பு மாற்று மேற்கொண்ட மக்களில் மூன்று மாதங்கள் வரை இருந்த வலி 0.34 புள்ளிகள் குறைவாக இருந்தது (0.94 புள்ளிகள் குறைந்ததிலிருந்து 0.26 புள்ளிகள் உயர்ந்தது வரையிலான இடைவெளியில்) . (3% முழுமையான முன்னேற்றம் , 9% முன்னேற்றத்திலிருந்து 3 % மோசம் வரையிலான இடைவெளியில் , ) - இடுப்பு மாற்றுக்கு வழக்கமான பராமரிப்பு மேற்கொண்ட மக்கள் 0 முதல் 10 புள்ளிகள் என்ற அளவுகோலில் தங்கள் வலியை 3.1 புள்ளிகள் என மதிப்பீடு செய்தார்கள்.

செயல்பாடு (குறைந்த மதிப்பெண்களின் அர்த்தம் சிறந்த செயல்பாடு அல்லது குறைவான இயலாமை):

அறுவைச் சிகிச்சைக்கு முன்பான விளக்கக் கல்வி கொண்ட இடுப்பு மாற்று மேற்கொண்ட மக்களில் செயல்பாடு 3 முதல் 24 மாதங்களில் 4.84 புள்ளிகள் குறைவாக இருந்தது (10.23புள்ளிகள் குறைந்ததிலிருந்து 0.66 புள்ளிகள் உயர்ந்தது வரையிலான இடைவெளியில்) . (7% முழுமையான முன்னேற்றம் , 15% முன்னேற்றத்திலிருந்து 1 % மோசம் வரையிலான இடைவெளியில் , ) - இடுப்பு மாற்றுக்கு வழக்கமான பராமரிப்பு மேற்கொண்ட மக்கள் 0 முதல் 68 புள்ளிகள் என்ற அளவுகோலில் தங்கள் செயல்பாட்டை 18.4 புள்ளிகள் என மதிப்பீடு செய்தார்கள்.

பக்க விளைவுகள் :

அறுவைச் சிகிச்சைக்கு முன்பான விளக்கக் கல்வி மேற்கொண்டமக்களை வழக்கமான பராமரிப்பு மேற்கொண்டமக்களுடன் ஒப்பிடுகையில், 100 –ல் வெகுசில 5 மக்களில் பாதகமான நிகழ்வுகள் இருந்தது (தொற்று அல்லது ஆழமான நாள இரத்த உறைவு போன்றவை) ஆனால் இந்த மதிப்பீடு நிச்சயமற்றதாகவே உள்ளது.- இடுப்பு மாற்றுக்காக அறுவைச் சிகிச்சைக்கு முன்பான விளக்கக் கல்வி மேற்கொண்ட100 மக்களில் 18 பேர் பாதகமான நிகழ்வுகளை பதிவுசெய்தனர். - இடுப்பு மாற்றுக்காக வழக்கமான பராமரிப்பு மேற்கொண்ட100 மக்களில் 23 பேர் பாதகமான நிகழ்வுகளை பதிவுசெய்தனர்.

சான்றின் தரம்

அறுவைச் சிகிச்சைக்கு முன்பான விளக்கக் கல்வி அளிக்கப்பட்ட இடுப்பு அல்லது முழங்கால் மாற்று பெறும் மக்களில் இந்த திறனாய்வு காட்டுவதாவது:

அறுவைச் சிகிச்சைக்கு முன்பான விளக்கக் கல்வி வழக்கமான பராமரிப்பை விட வலி, செயல்பாடு, உடல்நிலை தொடர்பான வாழ்க்கை தரம் மற்றும் அறுவைச் சிகிச்சைக்குப் பின்பான பதட்டம் ஆகியவற்றை மேம்படுத்த முடியாது என்று தரம் குறைந்த சான்றுகள் பரிந்துரைத்தன. மேற்கொண்டு​ செய்யப்படும் ​ஆராய்ச்சியானது இந்த மதிப்பீடுகள் மீதான நமது நம்பிக்கையில் ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது, மற்றும் அதின் மதிப்பீடுகளை மாற்ற வாய்ப்பு உள்ளது.

ஆரோக்கியம் தொடர்பான வாழ்க்கைத் தரம், சிகிச்சை வெற்றியின் ஒட்டுமொத்த மதிப்பீடு மற்றும் மறு-அறுவைச் சிகிச்சை வீதங்கள் பற்றிய தகவல் இல்லை.

அறுவைச் சிகிச்சைக்கு முன்பான விளக்கக் கல்வியை வழக்கமான பராமரிப்புடன் ஒப்பிடுகையில் தொற்று அல்லது ஆழமான நாள இரத்த உறைவு போன்ற ஒருசில பாதகமான நிகழ்வுகளை அளித்தது என்பது மிகவும் குறைந்த தர சான்று காரணமாக நிச்சயமற்றதாகவே உள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information