பிரத்தியேக தாய்ப் பாலுட்டலுக்கான உகந்த கால வரையறை

ஆறு மாத பிரத்தியேக தாய்ப் பாலுட்டல் (மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு, மற்றும் அதன்பின் தொடரப்படும் கலவையான தாய் பாலுட்டலுக்கு எதிராக) இரையக-குடலிய தொற்றை குறைக்கும் மற்றும் தாய் உடல் எடை குறைய உதவும் மற்றும் கர்ப்பத்தை தடுக்கும், ஆனால்,ஒவ்வாமை நோய், வளர்ச்சி, உடற் பருமன், புலனுணர்வு திறன் அல்லது நடத்தை மீது எந்த நீண்ட -கால தாக்கமும் இல்லை.

கலவையான தாய்ப் பாலுட்டலால் பின் தொடரப்பட்ட மூன்று முதல் நான்கு மாத பிரத்தியேக தாய்ப் பாலுட்டலை விட, ஆறு மாத பிரத்தியேக தாய்ப் பாலுட்டல் (, வைட்டமின்கள் மற்றும் மருந்துகள் தவிர தாய்ப்பாலை தாண்டி எந்த திட அல்லது திரவ உணவும் இல்லை) அநேக அனுகூலங்களை கொண்டுள்ளது என்று இரண்டு கட்டுப்பாட்டு சோதனைகள் மற்றும் பிற 21 ஆய்வுகளின் முடிவுகள் பரிந்துரைக்கின்றன. இரையக-குடலிய தொற்று அபாய குறைவு, குழந்தை பேற்றிற்கு பின் அதிக விரைவான தாய் உடல் எடை குறைவு, மற்றும் தாமதமாக திரும்பும் மாதவிடாய் சுழற்சிகள் ஆகியவை இந்த அனுகூலங்களில் அடங்கும். பிற தொற்றுகள், ஒவ்வாமை நோய்கள், உடற் பருமன், பல் சொத்தை அலல்து புலனுணர்வு அல்லது நடத்தை பிரச்சனைகள் மீதான எந்த அபாய குறைவுகளும் விளக்கப்படவில்லை. முன்னேறும்-நாடு அமைப்புகளில், இரும்புச் சத்து அளவு குறைதல் கண்டறியப்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information