கருவுற்ற நிலையின் போது பெண்கள் அவர்களின் மருத்துவ குறிப்புகளை அவர்களே எடுத்து செல்வதற்கு கொடுப்பது

ஒட்டுமொத்தமாக, ஆதாரத்தின் தரம் குறைந்தது முதல் மிதமானது வரை என்று மதிப்பிடப்பட்டது. இந்த புதுப்பிக்கப்பட்ட தேடல் ஒரு கூட்டத் தொகுதி-சீரற்ற சோதனையை அடையாளம் கண்டது, மற்றும் அது சேர்க்கப்பட்டது.

பெண்கள் அவர்களின் மருத்துவ குறிப்புகளை அவர்களே எடுத்து செல்வது, அவர்களின் கட்டுப்பாட்டு உணர்வு மற்றும் கருக்கால ஆவணங்கள் கிடைக்கக் கூடிய தன்மை ஆகியவற்றை மேம்படுத்துகிறது, ஆனால் கூடுதலான விளைவுகளுக்கு பற்றாக்குறையான ஆதாரம் உள்ளது.

சில ஆரோக்கிய பராமரிப்பு அமைப்புகளில், பெண்கள் அவர்களின் மருத்துவ குறிப்புகளை அவர்களே பார்த்துக் கொள்வதற்கும் மற்றும் ஒவ்வொரு கர்ப்பக்கால மருத்துவ அமர்விற்கும் எடுத்து வருவதற்கும் கொடுக்கப்படுகிறது. 1176 பெண்கள் சம்மந்தப்பட்ட நான்கு சோதனைகளின் இந்த திறனாய்வு, சாத்தியமான நன்மைகள் (மருத்துவமனை வருகையின் போது கருக் கால ஆவணங்கள் கிடைக்கப் பெறும் தன்மை அதிகரித்தல் மற்றும் தாயின் அதிகரித்த கட்டுப்பாடு) மற்றும் தீங்குகள் (அதிகப்படியான அறுவை வழி பிரசவங்கள்) இரண்டும் இருப்பதாக பரிந்துரைக்கிறது. மருத்துவ குறிப்புகள் குழுவில் இருந்த அதிகமான பெண்கள் அவர்களின் கருக்கால ஆவணங்களை இன்னொரு கருவுற்ற நிலையின் போதும் எடுத்து செல்வதற்கு விரும்பக் கூடும் என்று எல்லா சோதனைகளும் அறிக்கையிட்டன, ஆனால், புகைத்தல், மற்றும் தாய் பாலூட்டல், பெண்களின் திருப்தி, மற்றும் மருத்துவ விளைவுகள் போன்ற ஆரோக்கிய நடத்தைகள் மேல் பெண்கள் அவர்களின் மருத்துவ குறிப்புகளை அவர்களே எடுத்து செல்வதின் விளைவை தீர்மானிக்க போதுமான ஆதாரம் இல்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information