இதயத்தமனி நோயின் அபாயத்தை குறைப்பதற்கான உணவுமுறை திட்ட ஆலோசனை

நாட்பட்ட வியாதிகளை, குறிப்பாக இதய நோயை முடிவு செய்வதில் உணவுமுறை திட்டம் முக்கியமான ஒன்றாகும். ஆரோக்கியமான வயது வந்தவர்களின் உணவுமுறைகளில் நிலையான மேம்பாடுகளை உருவாக்குவதற்கு அவர்களுக்கு உணவுமுறை திட்ட ஆலோசனை வழங்குவதின் விளைவுகளை இந்த திறனாய்வு மதிப்பிட்டது. உணவுமுறை திட்ட மேம்பாடுகள், இதய நோயோடு தொடர்புடைய அபாய காரணிகளை குறைக்குமா என்பதையும் அது ஆராய்ந்தது. ஆரோக்கியமான வயது வந்தவர்கள், உணவுமுறை திட்ட ஆலோசனை பெறுவதற்கு அல்லது ஆலோசனை பெறாமல் இருப்பதற்கு என்று சீரற்ற முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 44 சோதனைகளை நாங்கள் கண்டோம். சிகிச்சையளிக்கப்பட்ட குழுக்களில், உப்பு மற்றும் கொழுப்பு உட்கொள்ளலை குறைத்தல், மற்றும் பழம், காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரித்தல் என்பதை சுற்றி உணவுமுறை திட்ட மேம்பாடுகள் பரிந்துரைக்கப்பட்டன. ஒருவர்-ஒருவருடனான தொடர்பு, குழு அமர்வுகள் மற்றும் எழுத்திலான பொருள்கள் என்று பல்வேறு விதமான வழிகளில் ஆலோசனை வழங்கப்பட்டது. ஒரு ஆய்வு பங்கேற்பாளர் உடனான ஒரு தொடர்பு முதல் நான்கு வருடங்களில் 50 மணி நேர ஆலோசனை என்று சிகிச்சை தலையீட்டின் தீவிரத்தில் வேறுபாடுகள் இருந்தன. சோதனைகளின் கால அளவு மூன்று மாதங்கள் முதல் நான்கு வருடங்கள் வரை பரவி இருந்தன, மற்றும் பின்-தொடர்தல் காலத்தின் இடை நிலை 12 மாதங்களாக இருந்தது. இதய நோய் அல்லது புற்று நோய் அபாயம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்ட மக்களில் , அதிகமான பலாபலன் இருந்தது என்பதற்கு சில ஆதாரம் இருக்கிறது. இரத்த அழுத்தம் மற்றும் மொத்த மற்றும் அடர்த்தி குறைவான கொலஸ்ட்ரால் (லோ டென்சிடி லிப்போ ப்ரோடீன்- கொலஸ்ட்ரால்) அளவுகள் போன்ற இதயத் தமனி அபாய காரணிகளில் மிதமான மேம்பாடுகள் இருந்தன. பாலினம் கொண்டு விளைவுகள் பிரிக்கப்பட்ட சோதனைகளில், பெண்கள் அதிக அளவில் கொழுப்பு உட்கொள்ளுதலை குறைத்தனர், ஆனால் இது மொத்த கொலஸ்ட்ரால் அளவுகள் குறைவதற்கு மாற்றப்பட்டதா என்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை. சோதனைகளின் முடிவிற்கு பிறகு, இரண்டு சோதனைகள் 10 முதல் 15 வருடங்கள் வரை மக்களை பின் தொடர்ந்தன, மற்றும் இதயத் தமனி நோய் அபாய காரணிகளில் ஏற்பட்ட நன்மையான மாற்றங்கள், குறைந்த இதய நோய் நிகழ்வுகள், பக்கவாதம் அல்லது மாரடைப்பு ஆகியவற்றுக்கு வழி வகுத்தன என்று காட்டின. எனினும், இதை உறுதிப்படுத்த அதிகமான ஆதாரம் தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information