புகைப்பிடித்தலை நிறுத்த முயற்சி செய்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு அறிதுயில் நிலை (ஹிப்னோதெரபி) சிகிச்சை முறை உதவுமா?

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

புகைப்பிடித்தலை மக்கள் விடுவதற்கு முயற்சி செய்யவும் மற்றும் விடவும் வெவ்வேறு விதமான ஹிப்னோதெரபி பயன்படுகிறது. சில முறைகள், மக்களில் புகைபிடிப்பதின் ஆசையை பலவீனமாக்கும், புகைப்பிடித்தலை நிறுத்துவதற்கு அவர்களின் மனோதைரியத்தை உறுதிப்படுத்தும் அல்லது ' விட்டொழிக்கும் திட்டத்தின்' மேல் கவனம் செலுத்த அவர்களுக்கு உதவும். வெவ்வேறு விதமான மற்றும் அளவுகளிலான ஹிப்னோதெரபியை சோதனைகள் பயன்படுத்தி உள்ளன, மற்றும் அவை சிகிச் சையின்மை, சுருக்கமான அறிவுரை அல்லது புகைப்பிடித்தலை நிறுத்துவதற்கான ஆலோசனை போன்ற வெவ்வேறான கட்டுப்பாடு நிலைகளோடு ஒப்பிடப்பட்டன ஆலோசனையை போன்றே ஹிப்னோதெரபி திறன் மிக்கதாக இருக்கக் கூடும் என்பதற்கு சாத்தியம் இருந்தாலும் , இதன் மேல் உறுதியோடு இருக்க போதுமான நல்ல ஆதராம் இல்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.