குறைகாலபிறப்பு குழந்தைகளுக்கு பல்கூறு கொண்டு செறிவூட்டிய தாய்ப்பால்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

திறனாய்வு கேள்விகுறைகாலபிறப்பு குழந்தைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்துக்கள் (புரதம் மற்றும் சக்தி உள்ளிட்ட ) கொண்டு செறிவூட்டிய தாய்ப்பாலுடன் செறிவூட்டாத தாய்ப்பாலை ஒப்பிடும்போது அது அவர்களின் வளர்ச்சி் வீதம் மற்றும் மேம்பாட்டை அதிகரிக்குமா?

பின்புலம் குறைகாலபிறப்பு குழந்தையின் உகந்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு தாயின்பால் மட்டும் போதியளவு ஊட்டச்சத்துக்கள் அளிக்காமல் இருக்கலாம். 10% ஊட்டச்சத்தை அதிகரிக்க குறைகாலபிறப்பு குழந்தைகளுக்கு பல்கூறு கொண்ட செறிவூட்டிகள் (தூள் அல்லது திரவ வடிவில் புரதம், கொழுப்பு அல்லது கார்போஹைட்ரேட் மற்றும் பொதுவாக பசும்பாலில் இருந்து எடுக்கப்பட்ட பிற ஊட்டச்சத்துக்கள்) தாய்ப்பாலுடன் சேர்க்கப்படுகிறது குறைகாலபிறப்பு குழந்தைகளுக்கு, குறிப்பாக மிகவும் குறைவான குறைகாலபிறப்பு குழந்தைகளுக்கு பல்கூறு கொண்டு செறிவூட்டிய தாய்ப்பால் அளிப்பது, ஊட்டச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்கும்.மேலும் வளர்ச்சி விகிதம் மற்றும் குழந்தைகள் வளர்ச்சியை மேம்படுத்தலாம்.

ஆய்வு பண்புகள்: நாங்கள் 14 ஆராச்சிகளைக் கண்டறிந்தோம்; இவற்றில் பெரும்பாலானவை சிறியனவாகவும் ( மொத்தமாக 1071 பச்சிளங்குழந்தைகள் சம்பந்தப்பட்டிருந்தன ) , செயல்முறையியல் குறைபாடுகளைக் கொண்டவையாகவும் இருந்தன.

மூக்கிய முடிவுகள் பல்கூறு கொண்டு செறிவூட்டிய தாய்ப்பால் அருந்திய குறைகாலபிறப்பு கைக்குழந்தைகளுக்கு, குழந்தை பிறந்த மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தபொழுது, எடை அதிகரிப்பு விகிதம், உயரம் அதிகரித்தல் மற்றும் தலை வளர்ச்சி போன்றவற்றில் சிறிய முனேற்றம் காணப்பட்டது. குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு பற்றியவிளைவுபயனை குழந்தையின் பச்சிளம் பருவத்திற்கு அப்பால் மதிப்பீடு செய்ததற்கான தரவுகள் மிகக்குறைவாகவே உள்ளன. இவை, செறிவூட்டிய தாய்ப்பால் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தியதாகக் காண்பிக்க வில்லை. செறிவூட்டிய தாய்ப்பாலின் மற்ற சாத்தியமான நன்மைகள் அல்லது உணவு ஊட்டுதல் அல்லது குடல் பிரச்சினைகள் தொடர்பான ஆபத்துக்கூறுகளில் தாக்கம் உள்ளிட்ட தீங்குகள் பற்றி நிலைத்தன்மையுடைய சான்றுகள் ஆய்வுகளில் அறிவிக்கப்படவில்லை.

முடிவுரை: குறைகாலபிறப்பு குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க பல்கூறு கொண்டு செறிவூட்டிய தாய்ப்பால், மருத்துவமனையில் சேர்த்த ஆரம்பகாலத்தில் குழந்தையின் வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கலாம் என்று கிடைத்துள்ள ஆய்வு காண்பிக்கிறது என்றாலும் அவை நீண்ட கால வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் தாக்கம் பற்றிய நிலைத்த தன்மையுடைய ஆதாரங்களைவழங்கவில்லை. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு மேலும் ஆராய்ச்சிகள் தேவை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:சி.இ.பி.என்.அர் குழு