குறைகாலபிறப்பு குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க கார்போஹைட்ரேட் கொண்டு செறிவூட்டிய தாய்ப்பால்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க கார்போஹைட்ரேட் கொண்டு செறிவூட்டிய தாய்ப்பால் நன்மைப் பயக்கும் என்று கூற போதுமான ஆதாரங்கள் இல்லை. நிறைமாத குழந்தைகளுக்குக் குறைந்தபட்சம் வாழ்க்கையின் முதல் ஆறு மாதத்திற்குத் தாய்ப்பால் சிறந்த ஊட்டம் அளிக்கிறது. குறைப்பிரசவ குழந்தை (37 வாரங்களுக்குள்) களுக்கு வேறு விதமான ஊட்டம் தேவைப்படும் .முதிர்வடையாத தாய்ப்பாலினால் இந்த தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமல் போகலாம். தாய்ப்பாலில் கார்போஹைட்ரேட் சேர்த்தல் உதவலாம். இது புரதசத்து சேர்க்கையினால் ஏற்படும் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் எடையைக் கூட்ட உதவும் ( காக்ரேன் ஆய்வு பார்க்க). எனினும் கார்போஹைட்ரேட் ஊட்டச்சத்து வயிற்றுப்போக்கு மற்றும் உணவு சிக்கல்களை ஏற்படுத்தலாம். குறைகாலபிறப்பு குழந்தைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க தாய்ப்பாலுடன் கார்போஹைட்ரேட் சேர்த்து அளிபத்தின் விளைவுகளை மதிப்பீடு செய்த ஆய்வுகள் வெளியிடப்பட்டவில்லை. மேலும் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: சி.இ.பி.என்.அர். குழு