பச்சிளங் குழந்தைகளின் விளைவுகளை மேம்படுத்த கர்ப்பகால உணவு கல்வி மற்றும் கர்ப்பகாலத்தில் சக்திக்காகவும் புரத சத்து உட்கொள்ளலுக்காகவும் கொடுக்கப்படும் பிற்சேர்ப்பு

பிரச்சினை என்ன?

உணவுமுறை ஆலோசனை அல்லது கர்ப்பகாலத்தில் சக்தி மற்றும் புரதம் உட்கொள்ளலை அதிகரிக்க கொடுக்கப்படும் பிற்சேர்ப்பு, குழந்தைகளின் விளைவுகளை மேம்படுத்துகிறதா , மற்றும் ஏதும் பாதகமான விளைவுகள் உள்ளனவா? இந்த தலையீடுகள் மோசமான ஊட்டச்சத்து மற்றும் நல்ல ஊட்டச்சத்து உள்ள கர்ப்பிணி பெண்களிடமும் அவர்களின் பச்சிளங்குழந்தைகளிடம் வேறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறதா ?

இது ஏன் முக்கியம்?

கர்ப்ப காலத்தில், கருவின் உள்ளே வளரும் (உருவாகும்) சிசு அதன் தாயிடம் இருந்து அதற்குதேவையான அனைத்து ஊட்டச்சத்தையும் பெறுகிறது. கர்ப்ப காலத்தில் தேவைக்கு குறைவான உணவு உட்கொள்ளுதல், குழந்தைக்கு சத்துகுறைபாடு மற்றும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே, கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு, அவர்கள் உட்கொள்ள வேண்டிய உணவை பற்றிய ஆலோசனை மற்றும் உணவு பிற்சேர்ப்பு வழங்குதல் குழந்தைகள் வளரவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவும்.

நாங்கள் கண்டறிந்த ஆதாரங்கள்

இந்த ஆய்வு 9030 பெண்கள் பங்கேற்ற 17 சமவாய்ப்பு கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளை உள்ளடக்கியது. இதில் சேர்க்கப்பட்டுள்ள ஆய்வுகளின் தரம் மிதமானது முதல் குறைவானதாக இருந்தது. நாங்கள் உணவுமுறை ஆலோசனைகளின் பல அம்சங்கள் மற்றும் கூடுதலாகக் கொடுக்கப்படும் பிற்சேர்ப்பு பற்றி ஆய்வு செய்து, பின்வரும் நான்கு முக்கிய கண்டுபிடிப்புகளைத் தயாரித்தோம்.

(1) ஊட்டச்சத்து ஆலோசனை வழங்கியதன் விளைவாக தாயின் புரதம் உட்கொள்ளல் அதிகரித்தது; குறைவான குழைந்தைகளே குறைமாதத்தில் பிறந்தன (449பெண்கள் பங்கேற்ற இரண்டு சோதனைகள் ) மற்றும் குறைவான குழந்தைகளே குறைந்த பிறப்பு எடை கொண்டிருந்தன (300 பெண்கள் பங்கேற்றஒரு சோதனையில் ). 389 பெண்களை கொண்ட ஒரு ஆய்வு சில குழந்தைகளது பிறந்த தலை சுற்றளவு அதிகமாக உள்ளதாக காட்டியது. ( 389 பெண்கள் பங்கேற்றஒரு சோதனையில் ) மேலும் ஊட்டச்சத்து குறைவான பெண்களுக்கும் அதிக பிறப்பு எடை உடைய குழந்தைகள் அதிகம் இருந்தன ( 320பெண்கள் பங்கேற்ற இரண்டு ஆய்வுகளில்).

(2) தாய்மார்களுக்கு சமச்சீர் ஆற்றல் மற்றும் புரதம் பிற்சேர்ப்புகொடுப்பதற்கும் பிரசவத்தின் போது குறைவான குழந்தைகள் இறப்பதற்கும். (ஐந்து சோதனைகள், 3408 பெண்கள்) , தெளிவான பிறப்பு எடை அதிகரித்தலுக்கும் (11 சோதனைகள், 5385 பெண்கள் ) குறைந்த கர்ப்ப கால வயதுடன் குறைவான குழந்தைகள்பிறப்பதற்கும்( ஏழு சோதனைகள், 4408 பெண்கள்)தொடர்பு இருந்தது. எனினும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள பெண்கள் உட்பட குழந்தையின் நீண்ட கால ஆரோக்கியத்தின் மீது இவற்றின் தாக்கம் நிச்சயமற்றதாகும்.

3) உயர் புரதம் (high protein) பிற்சேர்ப்பு (1051 பெண்கள் பங்கேற்ற ஒரு ஆய்வில்) பெண்களுக்கு பயனும் அளிக்கவில்லை என்றும் கர்ப்ப கால வயது பிறப்பின் போது குறைவாக இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் குழந்தைக்கு சாத்தியமான தீங்கு இருப்பதாகவும் காட்டியது.

(4) சம ஆற்றல் ( Isocaloric ) புரத பிற்சேர்ப்பு (சமச்சீர் பிற்சேர்ப்பு-புரதம் ஒரு சம அளவு சீரான பிற சத்துக்களுக்கு பதிலாக எடுத்தல், எ.கா. கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்) : பிறப்பு எடை மற்றும் வாராந்திர கர்ப்பகால எடை அதிகரிப்பில் , பெண்களுக்கோ அல்லது அவர்கள் குழந்தைகளுக்கோ எந்த பலனும் இல்லை என்று காட்டின (184பெண்கள் பங்கேற்ற இரண்டு ஆய்வுகள்).

இதற்கு என்ன அர்த்தம்?

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஊட்டச்சத்து ஆலோசனை அல்லது சம ஆற்றல் மற்றும் புரதம் பிற்சேர்ப்பு வழங்குதல் உதவியாக இருக்கும். இருப்பினும், தற்போது பயனற்றதாக தோன்றும் சம ஆற்றல் ( isocaloric ) புரதம் பிற்சேர்ப்பு மற்றும் உயர் புரதம் பிற்சேர்ப்பினால் தீங்கு இருக்கலாம் என்பதற்கு போதுமான ஆதாரம் எதுவும் இல்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: கா.அழகுமூர்த்தி மற்றும் சி.இ.ப.ஏன்.அர். குழு

Tools
Information