உலகெங்கிலும், அதிக உடல் எடை அல்லது உடற்பருமன் பொதுவான ஆரோக்கிய பிரச்னைகளாக உள்ளன, ஆனால் திறன் வாய்ந்த சிகிச்சைகள் மிக சிலதே உள்ளன. சிடோசன் என்பது உடல் எடை, மற்றும் இரத்த கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்க உதவுவதில் பயன்படும் மற்றும் பரந்த அளவில் கிடைக்கும் நார் உபரிச்சத்தாகும். மொத்தம் 1219 பங்கேற்பாளர்களைக் கொண்டு, 4 முதல் 24 வாரங்கள் வரை நீடித்த 15 ஆய்வுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. இன்றைய தேதி வரையான சிடோசன் சோதனைகள், குறிப்பிடத்தக்க வகையில் தரத்தில் வேறுபட்டு உள்ளன. உடல் எடை மீது சிடோசன் மிக சிறிய விளைவை கொண்டிருக்கும் என்று இந்த திறனாய்வு பரிந்துரைக்கிறது, ஆனால் உயர் தர சோதனைகளின் முடிவுகள் இந்த விளைவு மிக குறைந்ததாய் இருக்கும் என்று சுட்டிக்காட்டுகின்றன.
மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.