சீரற்ற சோதனைகளில் மக்களை தக்க வைக்க உதவும் வழிமுறைகள்

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

பின்புலம்

பெரும்பாலான சோதனைகள், மக்களை ஆய்வில் சேர்த்த பின்னர், தனிப்பட்ட தொடர்பின் மூலம் தரவை சேகரிக்க அவர்களை பின் தொடரும். சில சோதனைகள், வழக்கமான சேகரிக்கப்பட்ட தரவு அல்லது நோய் பதிவேடுகள் போன்ற மற்ற ஆதாரங்களில் இருந்து தரவை கிடைக்கப் பெறும். பரிசோதனைகளில், மக்களிடமிருந்து தரவுகளை சேகரிக்க பல வழிகள் உள்ளன, மற்றும் இவை, கடிதங்கள், இணையம், தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்தி அனுப்புதல், முக-முகமான சந்திப்புகள், அல்லது மருத்துவ சோதனை கருவிகளை திரும்ப பெறுவது போன்றவற்றுள் அடங்கும். பதிலளிக்க முடியாமல் மக்கள் மிகவும் நேரமின்மையோடு இருப்பது, ஒரு மருத்துவ சிகிச்சையகத்திற்கு செல்ல முடியாமல் இருப்பது, இடம் மாறி செல்வது அல்லது இனிமேல் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுப்பது போன்ற காரணங்களால், பெரும்பாலான சோதனைகள் தொலைந்த தரவை கொண்டுள்ளன. சில நேரங்களில், ஆய்வு தளங்களில் தரவு பதிவு செய்யப்பட்டிருக்காது, அல்லது சோதனை ஒருங்கிணைப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்காது. இதை, ஆராய்ச்சியாளர்கள் 'பின்-தொடர் இழப்பு', 'பங்கேற்பாளர் வெளியேறுவது' அல்லது 'தேய்வு' என்று அழைப்பர், மற்றும் இது சோதனை முடிவுகளை பாதிக்கக் கூடும். உதாரணமாக, மிக அதிகமான அல்லது குறைந்த தீவிர அறிகுறிகள் உள்ளவர்கள், வினாப்பட்டியல்களை திரும்பி தராமல் போனால் அல்லது ஒரு பின்தொடர்ந்த சிகிச்சை அமர்விற்கு வராமல் போனாலோ, அவை சோதனை கண்டுபிடிப்புகளில் பரபட்சத்தை ஏற்படுத்தும். சோதனைகளில் மக்களைத் தக்க வைக்க, ஆராய்ச்சியாளர்கள் பல வழிமுறைகளை பயன்படுத்துகின்றனர். கேள்வித்தாள் மூலம் தரவை திரும்ப அனுப்ப, சோதனை-தொடர்பான ஆய்வுகளுக்கு ஒரு சிகிச்சை மையத்திற்கோ அல்லது மருத்துவமனைக்கோ திரும்ப வர, அல்லது ஒரு ஆரோக்கிய அல்லது சமூக பராமரிப்பு பணியாளர் மூலம் பார்க்கப்பட இவை மக்களுக்கு ஊக்கமளிக்கும்.

ஆய்வு பண்புகள்

சோதனைகளில் மக்களைத் தக்க வைக்க உற்சாகப்படுத்துகிற வழிமுறைகளை இந்த திறனாய்வு கண்டறிந்தது. சோதனைகளில் மக்களைத் தக்க வைத்தலை அதிகரிக்கும் வழிமுறைகளை ஒப்பிட்ட சீரற்ற சமவாய்ப்பு ஆய்வுகள் (இரண்டில் ஒன்று அல்லது அதற்கும் மேல் வாய்ப்புள்ள சிகிச்சைகளுக்கு மக்களை சீரற்ற முறையில் ஒதுக்குதல்) அல்லது அரை-சீரற்ற சமவாய்ப்பு ஆய்வுகளை (உண்மையான சீரற்ற முறையில் மக்களை ஒதுக்காது, எ.கா. பிறந்த நாள், சிகிச்சை மையத்தில் கலந்து கொண்ட ஒழுங்கை அடிப்படையாக கொண்டு ஒதுக்குதல்) அறிவியல் தரவுத்தளங்களில் நாங்கள் தேடினோம். அனைத்து வயது, பாலினம், இனம் , கலாச்சாரம், மொழி, புவியியல் குழுக்களிலிருந்த பங்கேற்பாளர்களை கொண்ட சோதனைகளை நாங்கள் சேர்த்துள்ளோம்.

முக்கிய கண்டுப்பிடிப்புகள்

ஒரு நிறைவு செய்த கருத்தறியும் வினாப்பட்டியலை திருப்பி தரப்படும் போது சிறிய அளவிலான பணம் அளிக்கப்படுவது, மற்றும் நிறைவு செய்யப்படும் வினாப்பட்டியலை திருப்பி தருவதற்கு மேலும் ஒரு சிறிய அளவிலான பணம் அளிக்கப்படும் என்ற வாக்குறுதியுடன் வினாப்பட்டியலோடு இணைக்கப்பட்ட ஒரு சிறிய அளவிலான பணம் ஆகிய வழிமுறைகள் பயனளித்ததாக தெரிகிறது. சோதனைகளில் மக்களை தக்க வைப்பதற்கு மற்ற வழிகளின் விளைவு பற்றி இன்னும் தெளிவாகவில்லை, மேலும் இவை உண்மையில் பயனளிக்குமா என்பதை அறிய அதிக ஆராய்ச்சி தேவைப்படுகிறது. குறுகிய வினாப்பட்டியல்கள், பதிவு தபால் முறை மூலம் வினாப்பட்டியல்கள் அனுப்புதல், பங்கேற்பாளர்கள் தாங்கள் எந்த சிகிச்சை பெறுகிறோம் என்று தெரிந்த சோதனை வடிவம், சுய-விலாசமிட்ட உறையுடன் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட திருப்பி அனுப்பப்படும் தபால்கள் மற்றும் அதனை தொடர்ந்த நினைவூட்டல்கள், தரும நன்கொடை வழங்குதல் அல்லது பரிசு குலுக்கலில் நுழைதல், பங்கேற்பாளர் பின்-தொடர்தல் குறித்து ஆய்வு மையத்திற்கு நினைவூட்டல் அனுப்புதல், கடைசியாக நோயாளி பின்-தொடரப்பட்ட சமயத்திற்கு ஒட்டியே வினாப்பட்டியல்களை அனுப்புதல், பின்-தொடர்தல் மேலாண்மை, தொலைபேசி மூலம் பின்-தொடர்தல் நடத்தி மற்றும் வினாப்பட்டியலின் கேள்விகளை ஒழுங்கை மாற்றுதல் ஆகியவை அத்தகைய வழிமுறைகளில் அடங்கும்.

சான்றின் தரம்

நாங்கள் அடையாளம் காட்டிய முறைகள் பல்வேறு நோய் பகுதிகள் மற்றும் அமைப்புகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஆய்வு செய்யபட்டதாகும், மற்றும், சில சந்தர்ப்பங்களில், ஒரே ஒரு சோதனையில் பரிசோதிக்கப் பட்டதாகும். எனவே, பிற ஆராய்ச்சி துறைகளில் நமது கண்டுப்பிடிப்புகளை பயன்படுத்த முடியும் என்பதை தீர்மானிக்க உதவ அதிக ஆய்வுகள் தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.