கீழ்-முதுகு வலிக்கு பாராசிட்டாமால்

திறனாய்வு கேள்வி

இந்த திறனாய்வு, குறிப்பிட்ட-காரணம் அல்லாத கீழ்-முதுகு வலிக்கு பாராசிட்டாமால் எவ்வளவு சிறப்பாக வேலை செய்யக் கூடும் என்பதை காண்பதற்கு நோக்கம் கொண்டுள்ளது. குறிப்பிட்ட-காரணம் அல்லாத கீழ்-முதுகு வலி என்பது ஒரு நோய் அல்லது நிலைமையினால் ஏற்பட்டதா என்பதை கண்டு பிடிக்க முடியாத ஒரு வலியாகும்.

பின்புலம்

கீழ்-முதுகு வலி கொண்ட மக்களுக்கு, மிகவும் பொதுவாக பரிந்துரைக்கப்படும் மருந்துகளில் ஒன்று பாராசிட்டாமால் ஆகும் மற்றும் பல்வேறு விதமான சுகவீனங்களை சமாளிப்பதற்கு மருத்துவர்களுக்கு உதவ மருத்துவ நடைமுறைகளில் இது பரிந்துரைக்கப்படுகிறது. எனினும், இது எவ்வாறு திறன் மிக்கதாக இருக்கக் கூடும் என்று சமீபத்திய ஆதாரம் கேள்வி எழுப்புகிறது.

தேடல் தேதி

ஆதாரம் ஆகஸ்ட் 2015 வரை நிலவரப்படியானது.

ஆய்வு பண்புகள்

இந்த திறனாய்வில், மொத்தம் 1825 பங்கேற்பாளர்களை கொண்ட மூன்று சோதனைகளை நாங்கள் சேர்த்தோம். இரண்டு சோதனைகளில், திடீரென்று மற்றும் சமீபமாக கீழ்-முதுகு வலி ஏற்பட்ட பங்கேற்பாளர்களைக் கொண்டிருந்தன; மற்றும் ஒரு சோதனை, ஆறு வாரங்களுக்கு மேலாக கீழ்-முதுகு வலி ஏற்பட்ட பங்கேற்பாளர்களைக் கொண்டிருந்தது. ஆய்வில், பெரும்பாலான மக்கள் (90%) நடுத்தர-வயதினராய் இருந்தனர்; மற்றும் சமீபத்தில் நிகழ்ந்த கீழ்-முதுகு வலியை ஆராய்ந்த ஒற்றை சோதனையில் பங்கு பெற்றவர்களாய் இருந்தனர். அனைத்து சோதனைகளும், ஒரு போலி மருந்தோடு (மருந்தை போல் பாவனை கொண்ட , ஆனால் எந்த பொருளும் கொண்டிருக்காது) பாராசிட்டாமாலை ஒப்பிட்டன. சிகிச்சைகள், ஒரு 24 மணி நேர அளவில், ஒற்றை 1கிராம் மருந்தளவு முதல் 4கிராம் (நரம்பு வழி செலுத்தப்பட்டது) முதல் நான்கு வாரங்கள் ( வாய் வழி மாத்திரைகள்) வரை நீடித்தன. பங்கேற்பாளர்கள் ஒரு நாள் முதல் 12 வாரங்கள் வரை பின் தொடரப்பட்டனர். வலி மற்றும் இயலாமை ஆகியவை முக்கிய விளைவுகளாக ஆராயப்பட்டன; வாழ்க்கைத் தரம், மக்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கையை எவ்வளவு எளிதாக மேற்கொண்டனர்; விரும்பத்தகாத அல்லது தேவையற்ற பக்க விளைவுகள், மக்கள் எவ்வளவு சிறப்பாக மீட்சி பெற்றனர் என்பதை உணர்ந்தனர், தூக்கத்தின் தரம்; பரிந்துரைக்கப்பட்டபடி மருந்துகளை உட்கொண்டனரா; மற்றும் பாராசிட்டாமால் வேலை செய்யாத காரணத்தினால் இடர் மீட்பு மருந்தை எடுப்பதற்கு தேவை ஏற்பட்டதா என்பவற்றையும் நாங்கள் ஆராய்ந்தோம். ஒரு போலி மருந்தோடு பாராசிட்டாமாலை ஒப்பிட்ட இரண்டு சோதனைகளிலிருந்த முடிவுகளை நாங்கள் ஒற்றை பகுப்பாய்வில் (மெட்டா- அனலைசிஸ்) இணைத்தோம். போலி மருந்திற்கான முடிவுகளை மூன்றாவது சோதனை அறிக்கையிடவில்லை, ஆதலால் இந்த ஆய்வு இணைக்கப்பட முடியவில்லை.

முக்கிய முடிவுகள் மற்றும் ஆதாரத்தின் தரம்

குறுகிய அல்லது நீண்ட-கால கட்டத்தில், சமீபமாக ஏற்பட்ட கீழ்-முதுகு வலியை போக்குவதில், போலி மருந்தை காட்டிலும் பாராசிட்டாமால் (ஒவ்வொரு நாளும் 4 கிராம்) சிறப்பானதாக இல்லை என்பதற்கு உயர்-தர ஆதாரத்தை நாங்கள் கண்டோம். வாழ்க்கைத் தரம் மற்றும் தூக்கத்தின் தரம் என்ற பிற வகையான அம்சங்களிலும், போலி மருந்தைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்கவில்லை. சிலவை மட்டுமே கடுமையாக இருந்தாலும், பக்க விளைவுகள் பற்றி ஐந்தில் ஒரு பங்கு மக்கள் அறிக்கையிட்டனர். மற்றும் சிகிச்சை குழு மற்றும் கட்டுப்பாட்டு குழுவிடையே எந்த வித்தியாசமும் இருக்கவில்லை. பெரும்பாலான பங்கேற்பாளர்கள் நடுத்தர-வயதினராய் இருந்ததால், பிற வயது மக்களுக்கும் இந்த முடிவுகள் இதே மாதிரியாக இருக்குமா என்பது பற்றி உறுதியாக தெரியவில்லை.

நாள்பட்ட கீழ்-முதுகு வலியின் உடனடி குறைவிற்கு, ஆதாரம் குறைவான தரம் கொண்டதாய் இருந்தாலும் மற்றும் இது சார்ந்திருந்த ஒற்றை ஆய்வு, ஆய்வு பத்திரிக்கையிலிருந்து விலக்கப் பட்டிருந்தாலும், போலி மருந்து மற்றும் பாராசிட்டாமால் இடையை எந்த வித்தியாசமும் இருக்கவில்லை என்று தெரிகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்

Tools
Information