கீழ் முதுகு வலிக்கான ஊக்கி அல்லா அழற்சி மருந்துகள் (Non-steroidal anti-inflammatory drugs (NSAIDs)).

திறனாய்வு கேள்வி

நாள்பட்ட கீழ் முதுகு வலியுள்ள வர்களுக்கு ஊக்கி அல்லா அழற்சி மருந்துகளின் (நான்-ஸ்டீராய்ட்டல் ஆன்டி-இன்ப்லமேட்டரி ட்ரக்ஸ், NSAIDs) விளைவை பற்றியதான ஆதாரத்தை நாங்கள் மதிப்பிட்டோம். போலி மருந்து, பிற (NSAIDs) என்எஸ்ஏஐடி'எஸ், பிற மருந்துகள் அல்லது பிற சிகிச்சை முறைகளுடன்ன் என்எஸ்ஏஐடி'எஸ்(NSAIDs)கள் ஒப்பிடப்பட்டது.

பின்புலம்

நாள்பட்ட கீழ் முதுகு வலி பொதுவான மற்றும் வலி மற்றும் இயலாமையை ஏற்படுத்தும் பிரச்சினை. நாள்பட்ட கீழ் முதுகு வலி கொண்டவர்களுக்கு சிகிச்சையளிக்க என்எஸ்ஏஐடி'எஸ் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. இவை வெவ்வேறு வகைகள் மற்றும் வேதியல் உட்பொருள்கள் கொண்டு, மருத்துவர் பரிந்துரைப்பின்றி மற்றும் பரிந்துரைப்போடும் கிடைக்கப்பெறும்.

ஆய்வு பண்புகள்

என்எஸ்ஏஐடி'எஸ்-ன் திறனை மதிப்பிட்ட, ஜூன் 24, 2015 வரை வெளியான சீரற்ற கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளை நாங்கள் சேகரித்தோம். நாள்பட்ட கீழ் முதுகு வலி கொண்ட மக்களில், போலி மருந்து, பிற என்எஸ்ஏஐடி'எஸ், பிற மருந்துகள் அல்லது பிற சிகிச்சை வகைகளுடன் என்எஸ்ஏஐடி'எஸ்-ஐ ஒப்பிட்ட 13 சோதனைகளை நாங்கள் இணைத்தோம். ஆறு சோதனைகள், என்எஸ்ஏஐடி'எஸ்-ஐ போலி மருந்துடன் ஒப்பிட்டு, மொத்தமாக 1354 பங்கேற்பாளர்களை உள்ளடக்கின. பின்-தொடர்தல் ஒன்பது நாட்கள் மற்றும் 16 வாரங்கள் வரை இடைப்பட்டிருந்தது.

முக்கிய முடிவுகள்

நாள்பட்ட கீழ் முதுகு வலி உள்ளவர்களுக்கு, போலி மருந்துடன் ஒப்பிடும் போது என்எஸ்ஏஐடி'எஸ் வலி மற்றும் இயலாமையைக் குறைத்தது. எனினும், இந்த வித்தியாசங்கள் சிறிதாக இருந்தன; வலியின் தீவிரத்தை, 100-புள்ளி அளவீட்டில் 7 புள்ளிகளாக இருந்தது. இயலாமையை பொறுத்தவரை, என்எஸ்ஏஐடி'எஸ் பெற்றவர்கள் 0 முதல் 24 வரையான இயலாமை அளவீட்டில் 0.9 புள்ளிகள் மேம்பட்டதாக கருதினர். என்எஸ்ஏஐடி'எஸ் மற்றும் போலி மருந்தை பெற்ற மக்களிடையே, பாதக நிகழ்வுகளின் எண்ணிக்கையில் எந்த குறிப்பிடத்தக்க வித்தியாசமும் இல்லை, ஆனால், அரிதான அல்லது தாமதிக்கப்பட்ட பாதக நிகழ்வுகள், முக்கியமான மருந்து இடைவினைகள், மற்றும் நீண்ட-கால பயன்பாட்டினால் ஏற்படும் பாதக நிகழ்வுகள் ஆகியவற்றை அடையாளம் காண நீண்ட கால, பெரிய ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

வெவ்வேறு வகைகளான என்எஸ்ஏஐடி'எஸ் எந்த குறிப்பிடத்தக்க வித்தியாசமான விளைவுகளையும் காட்டவில்லை. சேர்க்கப்பட்டிருந்த 13 ஆய்வுகளில், மூன்று ஆய்வுகள், இரண்டு வெவ்வேறான என்எஸ்ஏஐடி'எஸ் வகைகளை ஒப்பிட்டன அதில் எந்த வித்தியாசங்களையும் காணவில்லை.

என்எஸ்ஏஐடி'எஸ் பிற மருந்து வகைகளோடும் ஒப்பிடப்பட்டது: பாராசிடமால், டிராமாடால், மற்றும் பிரேகாபாலின். என்எஸ்ஏஐடி'எஸ் மற்றும் பாராசிடமால், மற்றும் பிரேகாபாலின் இடையே விளைவிலோ அல்லது பாதக நிகழ்வுகளிலோ எந்த வித்தியாசங்களும் காணப்படவில்லை. செலிகாக்ஸ்இப்-ஐ டிராமாடாலுடன் ஒப்பிட்ட ஒரு ஒற்றை ஆய்வு, செலிகாக்ஸ்இப் பயன்படுத்திய மக்களில் ஒரு சிறப்பான ஒட்டுமொத்த மேம்பாட்டை காட்டியது.

ஒரு சோதனை, என்எஸ்ஏஐடி'எஸ்-ஐ வீடு-சார்ந்த உடற்பயிற்சியோடு ஒப்பிட்டது. இயலாமையை பொறுத்தவரை, என்எஸ்ஏஐடி'எஸ்-ஐ பெற்ற மக்களைக் காட்டிலும், உடற்பயிற்சி செய்த மக்கள் அதிகமாக மேம்பட்டனர்; ஆனால் வலி அளவுகள் புள்ளியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கவில்லை.

ஆதாரங்களின் தரம்

நாள்பட்ட கீழ் முதுகு வலிக்கு, போலி மருந்தைக் காட்டிலும் என்எஸ்ஏஐடி'எஸ் சிறிதளவு அதிக திறன் வாய்ந்தது என்பதற்கு குறைந்த தர ஆதாரம் உள்ளது. வித்தியாசத்தின் பரும அளவு சிறிதாக இருந்தது, மற்றும் உயர்ந்த தர சோதனைகளை மட்டும் நாங்கள் கணக்கில் கொண்ட போது, இந்த வித்தியாசங்கள் குறைந்தன.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information