ஆஸ்துமா மற்றும் உடற்பயிற்சியினால்-தூண்டப்பட்ட மூச்சு விட இயலா நிலைக்கு வைட்டமின்ஸ் சி மற்றும் இ

திறனாய்வு கேள்வி

ஆஸ்துமா அல்லது உடற்பயிற்சியினால்-தூண்டப்பட்ட மூச்சு விட இயலா நிலை கொண்ட மக்களுக்கு வைட்டமின்ஸ் சி மற்றும் இ இரண்டையும் ஒன்றாக தினசரி எடுத்துக் கொள்வது உதவி செய்யுமா என்பதை இந்த திறனாய்வில் நாங்கள் கருத்தில் கொண்டோம்

பின்புலம்ஆஸ்துமா என்பது காற்று குழாய்கள் சுருங்கும் தன்மை கொண்ட ஒரு நுரையீரல் வீக்க நோயாகும்;மூச்சு விட இயலா நிலை, நெஞ்சு இறுக்கம், இருமல் மற்றும் இழுப்பு ஆகியவற்றோடு தொடர்புடையதாகும். இந்த நிலை, வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும். இந்த நிலை வாழ்க்கைத் தரத்தை பாதிக்கும். 300 மில்லியன் மக்கள் ஆஸ்துமாவால் அவதிப்படுகின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, மற்றும் வைட்டமின்ஸ் சி மற்றும் இ ஆகியவை இவற்றின் அறிகுறிகளைக் குறைக்க உப மருந்துகளாக பரிந்துரைக்கப்படுகின்றன

ஆய்வு பண்புகள்ஆஸ்துமா மற்றும் உடற்பயிற்சியினால்-தூண்டப்பட்ட மூச்சு விட இயலா நிலை கொண்ட 214 மக்களில், வைட்டமின்ஸ் சி மற்றும் இ ஆகியவற்றை போலியோடு (வைட்டமின்ஸ் சி மற்றும் இ அல்லாத) ஒப்பிட்ட ஐந்து ஆய்வுகளை இந்த திறனாய்வில் சேர்க்கப்பட்டுள்ளது. நான்கு ஆய்வுகள் வயது வந்தவர்களை உள்ளடக்கியது மற்றும் ஒன்று குழந்தைகளை சேர்த்திருந்தது. மிக குறைந்த எண்ணிக்கையிலான ஆய்வுகள் இந்த திறனாய்விற்கு கிடைக்க பெற்றதாலும், மற்றும் அவற்றின் வெவ்வேறான ஆய்வு வடிவமைப்புகள் காரணத்தினாலும், ஆய்வுகளின் முடிவுகளை ஒன்று திரட்டி சராசரி முடிவை நிர்ணயம் செய்வதற்கு பதிலாக எங்களால் தனிப்பட்ட ஆய்வுகளாகவே விளக்கவே முடிந்தது. பெரும்பான்மையான ஆய்வு அறிக்கைகளில், அதன் வடிவமைப்பு சிறப்பாக விளக்கப்படவில்லை; ஆதலால், பெரும்பான்மையான ஆய்வுகளுக்கு ஒரு தலை சார்பு அபாயத்தை மதிப்பிடுவது முடியாமல் போனது. முக்கிய விளைவுகளை பொறுத்தவரை, சோதனையாளர்களால் மிக குறைந்த தொடர்புடைய தரவை மட்டுமே அளிக்க முடிந்தது

முக்கிய முடிவுகள்ஆஸ்துமா சம்பந்தப்பட்ட வரை, வைட்டமின்ஸ் சி மற்றும் இ ஆகியவற்றை கருத்தில் கொண்ட ஆய்வுகளில், அவற்றின் நன்மைக்கான எந்த ஒரு அறிகுறியையும் நாங்கள் காணவில்லை. ஆஸ்துமா கொண்ட நோயாளிகளில், வைட்டமின்ஸ் சி மற்றும் இ ஆகியவற்றின் பயனை ஒழுங்காக மதிப்பிட்டு வழிவிட கிடைக்கப்பெறும் ஆதாரம் போதுமானதாக அல்லாதபடியால், இவற்றின் முடிவுகளை கொண்டு தெளிவான தீர்மானங்களுக்கு வர தற்சமயம் இயலாது. இந்த கேள்விக்கு பதில் அளிக்க கூடுதலான சிறப்பாக- வடிவமைக்கப்பட்ட ஆராய்ச்சி தேவை.

சான்றின் தரம்சேர்க்கப்பட்டிருந்த ஐந்து ஆய்வுகளிலும், நோயாளிகள் வைட்டமின்ஸ் சி மற்றும் இ அல்லது போலி வைட்டமினை பெறுவதற்கு எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டனர் என்பது தெளிவாக விளக்கப்படவில்லை. இதென்னவென்றால், ஆய்வுகள் சிறப்பாக சீரற்று இல்லை என்று அர்த்தம், மேலும் இவை முடிவுகளை பாதிக்க கூடும். மற்றொரு இடர்ப்பாடு என்னவென்றால், ஆய்வுகளின் வடிவமைப்புகள் வெவ்வேறாக இருந்தன, ஆதலால் ஆய்வுகள் ஒரே விஷயத்தை அளக்கவில்லை என்று நாம் உறுதிக் கொள்ளலாம். இவற்றை கருத்தில் கொண்டு, இந்த திறனாய்வில் உள்ள ஆதாரத்தை நாங்கள் ஒட்டுமொத்தமாக குறைந்த முதல் மிதமான தரம் வாய்ந்தது என்று தீர்வு செய்தோம்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information