உணவு முறை மாற்றங்கள், நாள்பட்ட சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு கனிம மற்றும் எலும்பு பிறழ் நிலைகளை நிர்வகிப்பதில் பலன் தருமா?

நாள்பட்ட சிறுநீரக நோயை (க்ரானிக் கிட்னி டிசிஸ், சிகேடி) உடையவர்களில், கனிம மற்றும் எலும்பு வளர்ச்சிதை மாற்றத்தில் உள்ள சிக்கல்கள் மிகவும் பொதுவானதாகும் , இவை உடைந்த எலும்புகள் (முறிவு) , இதயம் மற்றும் இரத்த ஓட்டம் (கார்டியோ-வாஸ்குலர் ) பிரச்சினைகள், மற்றும் சில நேரங்களில் மரணம் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். கனிம-எலும்பு நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தப்படும் பல மருந்து சிகிச்சைகள் பக்க விளைவுகளைக் கொண்டிருக்கும் மற்றும் நோயாளிகளுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். சாதாரண உணவுமுறைகள் அல்லது மருந்து சிகிச்சைகளை விட, குறிப்பிட்ட உணவு முறைகள் (குறைந்த அளவில் புரதம் அல்லது பாஸ்பரஸ் உட்கொள்ளுதல் போன்ற) நன்மையானதா அல்லது தீமையானதா என்பதை நாங்கள் கண்டுபிடிக்க விரும்பினோம்.

நாங்கள் ஆகஸ்ட் 2015 வரையிலான இலக்கியதை தேடினோம், மற்றும் 634 பங்கேற்பாளர்களை பகுப்பாய்வு செய்த ஒன்பது ஆய்வுகளை சேர்த்தோம் ; ஆய்வுகளின் கால வரம்பு , 4 வாரங்கள் முதல் 24 வாரங்கள் வரை இருந்தது. கால்சியம் நிறைந்த ரொட்டி, குறைந்த பாஸ்பரஸ் உட்கொள்ளல் , குறைந்த புரத உட்கொள்ளல், மிகவும் குறைந்த புரத உட்கொள்ளல் , இரத்த ஊடு பிரித்தலுக்கு பிறகு உட்கொள்ளப்படும் உப உணவுகள், மற்றும் குறைந்த கொழுப்பு நிறைந்த உணவு ஆகியவற்றை சிகிச்சை தலையீடுகள் உள்ளடக்கி இருந்தன. ஒரே ஒரு ஆய்வு மட்டும் மரணத்தை அறிக்கை செய்திருந்தது . சேர்க்கப்பட்டிருந்த ஆய்வுகள் எதுவும் இதய நிகழ்வுகளையோ அல்லது எலும்பு முறிவுகளையோ அறிக்கை செய்யவில்லை . ஒரு ஆய்வு, பாதகமான நிகழ்வுகளை அறிக்கை செய்தது. ஒருதலை சார்பின் அபாயத்தை ஆற்றலுடன் மதிப்பிட இயலுவதற்கு, சேர்க்கப்பட்டிருந்த ஆய்வுகள் மத்தியில் ,வடிவமைப்பு மற்றும் செயல்முறையியல் அம்சங்கள் போதிய அளவில் அறிக்கை செய்யப்படாமல் இருந்தது.

நாள்பட்ட சிறுநீரக நோயை (சிகேடி) உடையவர்களில், உணவு முறையில் புரதம் அல்லது பாஸ்பரஸ்யை கட்டுப்படுத்துதல் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று பரிந்துரைக்கும் பற்றாக்குறையான ஆதாரத்தை நாங்கள் கண்டோம். ஒரு சிறிய, தரம் குறைந்த ஆய்விலிருந்து பெறப்பட்ட சான்று கால்சியம் நிறைந்த ரொட்டி கால்சியதின் அளவை அதிகரிக்கவும் மேலும் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம்× பாஸ்பேட் தயாரிப்பை குறைக்கவும் உதவும் என்று பரிந்துரைக்கிறது.

ஆதாரம், குறைந்த தரம் கொண்டது என்றும், மற்றும் சி.கே.டி -எம்.பி.டி. உடையவர்களுக்கு, உணவு முறை மாற்றம் எந்தளவு மதிப்புமிக்கது என்பதைக் குறித்து மருத்துவ முடிவெடுக்க தெரிவிப்பதற்கு போதுமானதாக இல்லை என்றும் மதிப்பிடப்பட்டது. சேர்க்கப்பட்டிருந்த எந்த ஆய்வுகளும், எமது பிரதான விளைவுகளான இதய நிகழ்வுகள் அல்லது எலும்பு முறிவை அறிக்கையிடவில்லை; ஒரே ஒரு ஆய்வு மாத்திரம் பாதகமான நிகழ்வுகளை அறிக்கை செய்தது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information