இடுப்பு அல்லது முழங்கால் கீல்வாதத்திற்கான, உயர்-தீவிர மற்றும் குறைந்த-தீவிர உடலியல் நடவடிக்கை அல்லது உடற்பயிற்சி திட்டங்களின் நன்மைகள் மற்றும் தீமைகள்.

திறனாய்வு கேள்வி

இடுப்பு அல்லது முழங்கால் கீல்வாதம் கொண்ட மக்களுக்கான உயர்-தீவிரத்திற்கு எதிரான குறைந்த-தீவிர உடற்பயிற்சி திட்டங்களின் நன்மைகள் மற்றும் தீமைகள் மீதான ஆய்வுகளுக்காக, ஜூன் 2014 வரையிலான இலக்கியத்தை நாங்கள் தேடினோம்.

பின்புலம்

கீல்வாதம் என்பது, மூட்டுகளை (பொதுவாக இடுப்புகள், முழங்கால்கள், முதுகு, மற்றும் கைகள்) பாதிக்கும் ஒரு நாள்பட்ட நிலையாக உள்ளது. காலப்போக்கில், மூட்டுகளில் குருத்தெலும்பு தேய்ந்து விடுகிறது. கீல்வாதம் கொண்ட மக்கள், பொதுவாக வலியை உணர்கிறார்கள், மேலும் நடை போன்ற அன்றாட நடவடிக்கைகளை தொடர்வதில் சிரமங்களை அனுபவிக்கிறார்கள். வழக்கமாக, உடற்பயிற்சி அல்லது உடலியல் நடவடிக்கை திட்டங்கள் ஆகிய மருந்து அல்லாத சிகிச்சைகள், இடுப்பு அல்லது முழங்காலில் கீல்வாதம் உள்ள மக்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. பல வகையான உடற்பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் அவை பயனுள்ளதாக இருக்குமா என்பது தெளிவாக தெரியவில்லை. ஒரு உடற்பயிற்சி திட்டத்தின் திறனில் உடற்பயிற்சியின் காலஅளவு, அடுக்கு நிகழ்வு, அல்லது எதிர்ப்பின் அளவு போன்ற பல வேறுபட்ட கூறுகளின் பங்கு இருக்கலாம். உயர்-தீவிரம் என்பது, உடற்பயிற்சி திட்டங்களில், தேவையான ஒரு கூடுதல் நேர அளவு (காலம் அல்லது அடுக்கு நிகழ்வு) அல்லது எதிர்ப்பு தன்மை (வலிமை அல்லது முயற்சி) என்று வரையறுக்கப்படுகிறது.

ஆய்வு பண்புகள்

656 பங்கேற்பாளர்கள் அடங்கிய ஆறு சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளை நாங்கள் அடையாளம் கண்டோம். ஐந்து ஆய்வுகள் (620 பங்கேற்பாளர்கள்) முழங்கால் கீல்வாதம் உள்ள மக்களை சேர்த்தன. மேலும் ஒரு ஆய்வு (36 பங்கேற்பாளர்கள்) முழங்கால் அல்லது இடுப்பு கீல்வாதம் கொண்ட மக்களை சேர்த்தது. ஆய்வுகள், ஆண்களை விட பெண்களை (70%) அதிகளவில் உள்ளடக்கியிருந்தன.

முக்கிய முடிவுகள்

0-20 புள்ளிகள் கொண்ட அளவுக்கோலில் (குறைந்த மதிப்பெண்கள் என்றால் குறைந்த வலி என்று அர்த்தம்), ஒரு உயர்-தீவிர உடற்பயிற்சி திட்டத்தை நிறைவு செய்த மக்கள் ஒரு குறைந்த-தீவிர உடற்பயிற்சி திட்டத்தை நிறைவு செய்த மக்களை விட அவர்களின் வலியை 0.84 புள்ளிகள் குறைவாக (4% முழுமையான முன்னேற்றம்) மதிப்பிட்டனர். குறைந்த-தீவிர உடற்பயிற்சி திட்டத்தை செய்த மக்கள் தங்கள் வலியை 6.6 புள்ளிகள் என்ற அளவில் மதிப்பிட்டனர்.

0 -68 புள்ளிகள் கொண்ட அளவுக்கோலில் (குறைந்த மதிப்பெண்கள் என்​​றால் சிறந்த செயல்பாடு என்று அர்த்தம்) ஒரு உயர்-தீவிர உடற்பயிற்சி திட்டத்தை நிறைவு செய்த மக்கள் ஒரு குறைந்த-தீவிர உடற்பயிற்சி திட்டத்தை நிறைவு மக்களை விட தங்கள் உடல் செயல்பாட்டை 2.65 புள்ளிகள் குறைவாக (4% முழுமையான முன்னேற்றம்) மதிப்பிட்டனர். குறைந்த-தீவிர உடற்பயிற்சி திட்டத்தை செய்த மக்கள் தங்கள் வலியை 20.4 புள்ளிகள் என்ற அளவில் மதிப்பிட்டனர்.

0-200 மிமீ கொண்ட காட்சி-சார்ந்த தொடர்முறை அளவுக்கோலில் (அதிக மதிப்பெண் என்றால் சிறந்த செயல்பாடு என்று பொருள்) ஒரு உயர்-தீவிர உடற்பயிற்சி திட்டத்தை நிறைவு செய்த மக்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை, ஒரு குறைந்த-தீவிர உடற்பயிற்சி திட்டத்தை நிறைவு செய்த மக்களை விட,4.3 மிமீ அதிகமாக மதிப்பிட்டனர் (குறைந்த அளவு 6.5மிமீ முதல் அதிக அளவு 15.2மிமீ ) ( 2% முழுமையான முன்னேற்றம்). குறைந்த-தீவிர உடற்பயிற்சி திட்டத்தை செய்த மக்கள், தங்கள் வாழ்க்கைத் தரத்தை 66.7 மிமீ என்ற அளவில் மதிப்பிட்டனர்.

இரண்டு சதவிகித மக்கள் அல்லது 1000 மக்களில் 17க்கும் மேலானோர் உயர்-தீவிர உடற்பயிற்சி திட்டத்தின் மூலம் பாதகமான விளைவுகளை அடைந்தனர்.

•1000 மக்களில், 39 பேர், உயர்-தீவிர உடற்பயிற்சி திட்டம் தொடர்புடைய ஒரு பாதகமான விளைவை அறிக்கை செய்தனர்.

• 1000 மக்களில், 22 பேர் குறைந்த-தீவிர உடற்பயிற்சி திட்டம் தொடர்புடைய ஒரு பாதகமான விளைவை அறிக்கை செய்தனர்.

எதிர்மறையான விளைவுகள் முறைப்படி கண்காணிக்கப் படவில்லை, மற்றும் முழுமையற்று குழுவால் அறிக்கையிடப்பட்டிருந்தன. ஆபத்தான எதிர்மறை விளைவுகளை, எந்த சேர்க்கப்பட்டிருந்த ஆய்வும் அறிக்கையிடவில்லை.

சான்றின் அடிப்படையில்​, குறைந்த-தீவிர ​உடற்பயிற்சி​ திட்டத்தோடு ஒப்பிடுகையில், ​உயர்-தீவிர​ உடற்பயிற்சி செய்கிற முழங்கால் கீல்வாதம் உள்ள மக்கள்​ உடற்பயிற்சி திட்டத்தின் இறுதியில் (8 முதல் 24 வாரங்கள்) தங்கள் ​ முழங்கால் வலி​ குறைதல் ​ மற்றும் செயல்பாடு​ ஆகியவற்றில் ​ லேசான முன்னேற்ற​த்தை ​ உணரலாம்​. உயர்-தீவிர உடற்பயிற்சி​,​ வாழ்க்கை தரத்தை ​ மேம்படு​த்துமா ​ அல்லது பாதகமான சம்பவங்களை ​அனுபவிக்கும் ​மக்க​ளின் ​ எண்ணிக்கை​யை ​ அதிகரிக்குமா ​ எ​ன்பதை குறித்து நாங்கள் ​ உறுதியற்ற​ நிலையில் உள்ளோம்.

சான்றின் தரம்

வலி மற்றும் செயல்பாடு ஆகியவற்றிக்கு சான்றின் தரம் தாழ்வாக இருந்தது என்றும் மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கு மிக தாழ்வாக இருந்தது என்றும் நாங்கள் மதிப்பீடு செய்தோம். சில பகுப்பாய்வுகளில் சேர்க்கப்பட்டுள்ள ஆய்வுகள் மற்றும் பங்கேற்பாளர்களின் குறைவான எண்ணிக்கை இந்த கண்டுபிடிப்புகளின் உறுதித்தன்மை மற்றும் துல்லியதை குறைத்தது.

எதிர்மறையான விளைவுகள் குறைவாக பதிவு செய்யப்பட்டன. உயர்-தீவிர உடற்பயிற்சி திட்டங்கள், குறைந்த-தீவிர உடற்பயிற்சி திட்டங்களை விட கூடுதலான பக்க விளைவுகளை ஏற்படுத்துமா என்பதில் நாம் நிச்சயமற்று உள்ளோம் என்பதை மிக குறைந்த தர சான்று காட்டுகிறது. மேற்படியான ஆராய்ச்சி முடிவை மாற்றக் கூடும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information