இன மற்றும் சிறுபான்மை மக்களில் ஆரோக்கிய நிலையை மேம்படுத்த மற்றும் ஏற்றத்தாழ்வுகளை குறைக்க சமூக கூட்டணி உந்துதல் தலையீடுகள்

பொதுவான மக்கள் குடிகளோடு ஒப்பிடுகையில், இன மற்றும் சிறுபான்மை மக்கள் மத்தியில் சமமற்ற ஆரோக்கிய நிலையானது உலகளாவிய ரீதியில் பொது ஆரோக்கிய பிரச்சனையாக உள்ளது பல பத்தாண்டுகளாக, இன மற்றும் சிறுபான்மையினரிடையே ஆரோக்கிய ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதில் பொது ஆரோக்கிய தலையீடுகள் சிறிய வெற்றிக்கே வழிவகுத்துள்ளன. ஆரோக்கியம் சார்ந்த தேர்ந்தெடுப்புகள் மற்றும் வாழ்க்கை தரத்திற்கு ஆதரவான சமூக சூழலை ஏற்படுத்த சிறுபான்மை சமூகங்களிலிருந்து பிரதிநிதிகளை கொண்ட கூட்டணியை பயன்படுத்துவது ஆரோக்கிய ஏற்றத்தாழ்வுகளை குறைக்கும் ஒரு அணுகுமுறையை உள்ளடக்கும். இந்த திறனாய்வு, இன மற்றும் சிறுபான்மை மக்களில் ஆரோக்கிய நிலையை மேம்படுத்த மற்றும் ஏற்றத்தாழ்வுகளை குறைக்கும் சமூக கூட்டணி உந்துதல் தலையீடுகளின் ஆதாரத்தைப் கண்டது.

இந்த திறனாய்வு, ஜனவரி 1990முதல் மார்ச் 31, 2014 வரையிலான தரவுத்தளங்களின் தேடல்கள் மூலம் ஒரு பரவலான ஆரோக்கிய விளைவுகள் மற்றும் அபாய நடத்தைகளைக் குறிப்பிட்ட 58 சமூக கூட்டணி உந்துதல் ஆய்வுகளைச் சேர்த்தது. குறைந்தது ஒரு இன அல்லது சிறுபான்மையினர் குழுவை மக்கள் பிரதிநிதிகளாக கொண்ட மற்றும் குறைந்தது இரண்டு சமூகம்-சார்ந்த பொது அல்லது தனியார் நிறுவனங்கள் கொண்ட சமூக கூட்டணி ஆய்வுகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. இந்த திறனாய்வு, சமூகக் கூட்டணிகளால் பயன்படுத்தப்படும் நான்கு வகையான உத்திகள் அல்லது தலையீடுகளின் விளைவுகளை பரிசோதித்தது.

சமூக அமைப்பு-நிலை மாற்ற உத்திகள் ( வீடுகள், பசுமை வெளிகள் , சுற்றுப்பற பாதுகாப்பு, அல்லது கட்டுப்பாட்டு வழிமுறைகள் மற்றும் கொள்கைகள் போன்ற சூழ்நிலைகளுக்கான இலக்கு முயற்சிகள் போன்றவை) சிறிய சீரற்ற விளைவுகளை உருவாக்கி இருக்கின்றன; பரந்த ஆரோக்கிய மற்றும் சமூக பாதுகாப்பு அமைப்பு -நிலை உத்திகள் (ஒரு ஆரோக்கிய அல்லது சமூக பாதுகாப்பு அமைப்பில் ஊழியர்களின் நடத்தையை இலக்காக கொள்ளும் திட்டங்கள் , பராமரிப்பு தரத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ள சேவைகள், அல்லது கொள்கைகள், நடைமுறைகள், மற்றும் தொழில்நுட்பங்களை அணுகுதல் போன்றவை) தொடர்ந்து சாதகமான சிறிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன; எளிய சமூக ஆரோக்கிய நலன் தொழிலாளர்கள் அல்லது தொழில்முறை ஊழியர்கள் தலைமையிலான குழு-சார்ந்த ஆரோக்கிய கல்வி போன்றவற்றை பயன்படுத்திய தலையீடுகள் ஓரளவு ஒரே மாதிரியான சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன ; மற்றும் சகாக்கள் தலைமையிலான குழு-சார்ந்த ஆரோக்கிய கல்வி சீரற்ற விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திறனாய்வு, சமூக கூட்டணிகளால் வழிநடத்தப்பட்ட தலையீடுகள், தனிப்பட்ட ஆரோக்கிய விளைவுகள் மற்றும் நடத்தைகள், அத்துடன் பராமரிப்பு விநியோக அமைப்புகள் ஆகியவற்றுக்கு பயனளிக்கும் வகையில், இன மற்றும் சிறுபான்மையினர் சமூகங்களில், ஆரோக்கியம் மற்றும் மனித சேவை வழங்குபவர்களை இணைக்கிறது என்று காட்டுகிறது. எனினும்,அணைத்து சமூகங்களிலும் ஒரே மாதிரியான ஆரோக்கிய நிலை அடைய, நிறம் மற்றும் இனத்தை பொருட்படுத்தாமல் , நாம் ஒரு திட்டம் குறிப்பாக எப்படி வேலை செய்கிறது அல்லது வேலை செய்யவில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இந்த திறனாய்வு விவரித்த சில திட்டங்கள் அனுகூலமான மாற்றத்தை எவ்வாறு கொண்டு வந்தன, மற்றும் தேவைப்படும் வளங்கள் ஆகியவற்றை பற்றிய தகவல் தெரிவதால், அதன் மூலம் பின்பற்ற முடியக் கூடும். மேலும், முழு சமூக அமைப்புகளில் திட்டங்களின் விளைவுகளை அடையாளம் காண மற்றும் அவற்றை சரியாக பயன்படுத்துகின்ற போது சமநிலையை நோக்கிய ஆரோக்கிய விநியோகம் மாற்றத்திற்கான அந்நிய புள்ளிகளைப் புரிந்து கொள்ள நமது திறனை மேம்படுத்தும் சிறந்த அறிவியல் கருவிகள் நமக்கு வேண்டும்.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information