பல்பிறவிசூல்களின் விளைவுகளை மேம்படுத்த ஊட்டச்சத்து ஆலோசனை

பல்பிறவி சூல்களில் (இரட்டையர்கள், மூவர்கள் மற்றும் அதற்கும் மேற்பட்ட), தாயின் வளர்சிதை மாற்ற விகிதம் ஒரு ஒற்றை குழந்தையை சுமக்கும் பெண்களை விட அதிகமாக உள்ளது. அதனால் ஒரு உயர்- கலோரி (உடல் சக்தி) உணவு, தாயின் ஊட்டச்சத்து நிலையை பராமரிக்க உதவும். ஒற்றை கருவூறல்களை விட பல்பிறவி சூல்கள், பெண்களுக்கு மற்றும் அவர்களுடைய குழந்தைகளுக்கான சிக்கல்களின் அதிகமான அபாயத்தை கொண்டிருக்கும். குறிப்பாக, கருப்பையில் குழந்தைகளின் குறைந்த வளர்ச்சி, குறைமாத பிறப்பு, மற்றும் குறைந்த பிறப்பு எடைகள் மிகவும் பொதுவானவையாகும்.

கர்ப்பிணி பெண்களுக்கான ஒரு சிறப்பு உயர் -கலோரி உணவு, குழந்தைகளுக்கான விளைவுகளை மேம்படுத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும், உடல் எடையை செயற்கையாக ஏற்றுவது எந்த நன்மையையும் கொண்டு வராமல் போகலாம் மற்றும் தாயால் விரும்பத்தகாததாக இருக்கலாம். அது, அவர் அதிக எடையுடயவராய் ஆக கூடிய போன்ற நீண்ட-கால பிரச்சினைகளுக்கு கூட பங்களிக்கும். சாதாரண உணவுகளை சிறப்பு உணவுகளுடன் ஒப்பிட்ட தரம் கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் அல்லது சிறப்பு உணவுகள் மீதான ஆலோசனையை கண்ட சோதனைகளை அடையாளம் காண்பதை இந்த காக்ரேன் திறனாய்வு குறிக்கோளாக கொண்டிருந்தது, ஆனால், எதையும் காணவில்லை. அதாவது, பல்பிறவிசூல்கள் கொண்டிருக்கும் பெண்களுக்கு குறிப்பிட்ட உணவுமுறை ஆலோசனை கெடுதலை விட அதிகமாக நன்மை செய்யுமா என்பதை ஆலோசனையாக வழங்க சீரற்ற சோதனைகளில் இருந்து எந்த ஆதாரமும் கிட்டவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information