முதல் வகை நீரிழிவு நோய் கொண்ட பெண்களுக்கான ஹார்மோன் மாற்று சிகிச்சை முறை

முதல் வகை நீரிழிவு நோய் கொண்டு வாழ்ந்துக் கொண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. நல்ல வாழ்க்கைத் தரத்தை பேணுவது, மற்றும் இரத்தக் குளுக்கோஸ் மட்டங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் நீரிழிவு சம்மந்தமான சிக்கல்களை குறைப்பது அல்லது தடுப்பது என்பது நீரிழிவு நோய்க்கான சிகிச்சையின் முக்கிய நோக்கமாகும். முதல் வகை நீரிழிவு நோய் கொண்ட பெண்கள், அவர்களின் வாழ்க்கையில் மாதவிடாய் நிற்கும் கட்டத்தில் (மெனோபாஸ்) அவர்களின் இரத்த குளுக்கோஸ் மட்டங்களை கட்டுப்படுத்துவதில் அடிக்கடி சிரமங்களை வெளிப்படுத்துவர். எனினும், இதற்கான காரணம் இன்னும் ஆராயப்படவில்லை.

மெனோபாஸின் அறிகுறிகளைக் மட்டுப்படுத்துவதற்கு, அநேக பெண்களுக்கு ஹார்மோன் மாற்று சிகிச்சை முறை ஒரு சிகிச்சையாக பரிந்துரைக்கப்படுகிறது.

ஹார்மோன் மாற்று சிகிச்சை முறை மற்றும் முதல் வகை நீரிழிவு நோயை சார்ந்த மருத்துவ இலக்கியத்திற்கு இதுவரை முறைப்படுத்தப்பட்ட தேடலோ மற்றும் திறனாய்வோ செய்யப்படவில்லை.

முதல் வகை நீரிழிவு நோய் கொண்ட மெனோபாஸ் பெண்களுக்கான மேலாண்மை பற்றி ஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர்களுக்கு கிடைக்கப் பெறும் ஆதாரம் தெளிவற்றதாக உள்ளது. அநேக ஆய்வுகள் இரண்டாம் வகை நீரிழிவு நோய் கொண்ட பெண்களையும் உள்ளடக்கிய படியால், முதல் வகை நீரிழிவு நோய் கொண்ட பெண்களுக்கு ஹார்மோன் மாற்று சிகிச்சை முறையை பயன்படுத்துவது தொடர்பாக முரண்பட்ட மருத்துவ இலக்கியம் உள்ளது. 12 மாதங்களுக்கும் மேலாக ஹார்மோன் மாற்று சிகிச்சை முறை அல்லது போலி சிகிச்சையை பெற்ற 56 பங்கேற்பாளர்களைக் கொண்ட முதல் வகை நீரிழிவு நோய் துணை-குழுவை கொண்டிருந்த ஒரு ஆய்வை நாங்கள் கண்டோம். ஹார்மோன் மாற்று சிகிச்சை முறை மற்றும் போலி சிகிச்சையிடையே எந்த குறிப்பிடத் தகுந்த புள்ளியல் வித்தியாசங்களும் காணப்படவில்லை. எந்த காரணத்திற்காவது ஏற்படும் மரணம், இதயத் தமனி நோய் ( எடுத்துக்காட்டிற்கு: மாரடைப்பு, பக்கவாதம்), நீரிழிவு சிக்கல்கள் (எடுத்துக்காட்டிற்கு: நீரிழிவு கண் நோய், நீரிழிவு சிறுநீரக நோய்) அல்லது ஆரோக்கியம்-சார்ந்த வாழ்க்கைத் தரம் போன்ற நோயாளி-முக்கியமான விளைவுகள் ஆராயப்படவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information