வேலை-தொடர்பான மேல் அவயம் மற்றும் கழுத்தின் தசைக்கூட்டு சீர்குலைவுகளைத் தடுக்கும் பணிச்சூழலியல் தலையீடு.

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

உலகம் முழுவதும் உள்ள தொழில்சார் கோளாறுகளில், வேலை-தொடர்பான மேல் அவயம் மற்றும் கழுத்தின் தசைக்கூட்டு சீர்குலைவுகள் மிகவும் பொதுவான ஒன்றாகும். பணிச்சூழலியல் காரணிகளாகிய பணியிட உபகரணங்களின் வடிவமைப்பு அல்லது சூழல், அல்லது இரண்டையும் கருத்தில் கொள்ளுதல், அதே போல தொழிலாளர்களுக்கு பணிச்சூழலியல் கோட்பாடு பயிற்சிகள் அளித்தல் ஆகியவை தொழிலாளர்களில் இந்த தசைக்கூட்டு சீர்குலைவுகள் ஏற்படுகிற ஆபத்தைக் குறைக்கக் கூடும். வேலை-தொடர்பான மேல் அவயம் மற்றும் கழுத்தின் தசைக்கூட்டு சீர்குலைவுகளைத் தடுக்கும் பணியிட பணிச்சூழலியல் தலையீடுகளின் ​விளைவு பற்றி ஆய்விலிருந்து நாங்கள் அறிந்ததை இந்த காக்குரேன் திறனாய்வு அளிக்கிறது.

இந்த முறைபடுத்தப்பட்ட திறனாய்வில், 2397 தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட 13 ஆய்வுகளை சேர்த்துள்ளோம். ஒரு ஆய்வை குறைந்தளவு ஒருதலை சார்பு அபாயம் கொண்டது என்று நாங்கள் தீர்மானித்தோம். நான்கு ஆய்வுகள் பணிச்சூழலியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட உபகரணங்களின் திறனை மதிப்பிட்டன, மற்றும் நான்கு ஆய்வுகள், வேலை தொடர்பான மேல் அவயம் மற்றும் கழுத்து தசைக்கூட்டு சீர்குலைவுகளைத் தடுக்கும் இடைவேளை நேரங்கள் அல்லது குறைக்கப்பட்ட பணி நேரங்களின் திறனை மதிப்பிட்டன. மேலும் மூன்று ஆய்வுகள், பணிச்சூழலியல் கொள்கைகள் மற்றும் உத்திகளின் பயிற்சியை திறன் மதிப்பீடு செய்தன. அதே சமயம் ஒரு ஆய்வு, பணிச்சூழலியல் ரீதியாக வடிவமைக்கப்பட்ட உபகரணங்களை இந்த பயிற்சியுடன் இணைத்து மதிப்பீடு செய்தன, மற்றுமொரு ஆய்வு ஒரு பாதுகாப்பாக தூக்கும் தலையீட்டின் திறனை மதிப்பீடு செய்தது.

ஒரு மாற்று கணினி சுட்டியுடன் சேர்த்து கை ஆதரவை பயன்படுத்துவது வேலை தொடர்பான கழுத்து மற்றும் தோள்பட்டை தசைக்கூட்டு சீர்குலைவுகளை தடுக்கலாம், ஆயினும், வலது மேல் அவயவத்தின் சீர்குலைவைத் தடுக்காது என்று இந்த திறனாய்வின் முடிவுகள் பரிந்துரைக்கின்றன. கை ஆதரவு அல்லது மாற்று கணினி சுட்டியை தனித்தனியாக மாத்திரம் பயன்படுத்துவது திறன் வாய்ந்ததாக இருக்கவில்லை. எனினும், அநேக எண்ணிகையிலான தலையீடுகள் மற்றும் விளைவுகள் சம்பந்தப்பட்ட பல ஒப்பீடுகள் செய்யப்பட்ட போதிலும், இந்த தலையீடுகளின் திறனை மதிப்பிடுவதற்கு அதிக உயர்-தர ஆராய்ச்சி தேவைப்படுகிறது. மேல் அவயம் மற்றும் கழுத்து தசைக்கூட்டுத் சீர்குலைவுகளை தடுக்கும் மற்ற பணிச்சூழலியல் தலையீடுகளின் திறனை இந்த திறனாய்வு தீர்மானிக்க முடியவில்லை.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ஸ்ரீகேசவன் சபாபதி.