ஒன்று முதல் 16 வயது குழந்தைகளுக்கு ஊசி போடுவதினால் ஏற்படும் வலியை எளிமையாக்கும் இனிப்பு சுவை

இது இதழ் 10,2011 இல் வெளியிடப்பட்டஅசல் காக்ரேன் திறனாய்வின் ஒருமேம்படுத்தப்பட்ட பதிப்பு ஆகும்: ஒன்று முதல் 16 வயது குழந்தைகளுக்கு ஊசியோடு தொடர்புடைய நடைமுறையின் வலியை இனிப்பு சுவை கரைசல் எளிமையாக்கும். மீண்டும் நாங்கள் அக்டோபர் 2014ல் தேடுதல் மேற்கொண்டோம்.

திறனாய்வின் கேள்வி: எந்த சிகிச்சையும் எடுக்காமல் இருப்பது, வேறு இனிப்பு இல்லாத கரைசல் அல்லது வேறு தலையீடுகளானஊட்ட சத்துஇல்லாத உறிஞ்சும் (கைகுழந்தைகள்) அல்லது இனிப்பு உணவு அல்லது மெல்லும் கோந்து (குழந்தைகள்) , மயக்க மருந்து , இசை மற்றும் திசை திருப்புதல் இவற்றோடு ஒப்பிடும்போது இனிப்பு சுவை கரைசல்1 முதல் 16 வயது உள்ள குழந்தைகளுக்கு ஊசி போடுவதின் வலியை குறைக்குமா?

பின்னணி: சிறிய அளவில் இனிப்பு சுவை கொண்ட சர்க்கரை கரைசலலை குழந்தைகளுக்கு ஊசி போடுவதற்கு முன்பும், ஊசி போடும் போதும் வாய்வழியாக கொடுப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க துன்பம் குறைக்கிறது. எனினும் ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு இனிப்பு கரைசல் வலியை குறைக்குமா என்பது தெரியவில்லை. ஆதலால் இனிப்பு கரைசல்களானசுக்ரோஸ் அல்லது குளுக்கோஸ்போன்றவை1 முதல் 16 வயது உள்ள குழந்தைகளுக்கு ஊசி போடுவதின் வலியை குறைக்குமா என்பதற்கானஆய்வுகளை ஆய்வு செய்தோம்.

தகவல் தேடல்: நாங்கள் அக்டோபர் 2014 வரை வெளியிடப்பட்ட மற்றும் வெளியிடப்படாத ஆய்வுகளை தேடினோம்.

ஆய்வின் பண்புகள்:ஆறு ஆய்வுகளிள் ஒன்று முதல் நான்கு வயது வரை உள்ள குழந்தைகள் கவனம் செலுத்துவதை நாங்கள் கண்டோம். இதில் இரண்டு ஆய்வுகள் அசல் ஆய்வில் சேர்க்கப்பட்டுள்ளது மற்ற நான்கு ஆய்வுகள் புதியவை. அசல் திறனாய்வில் சேர்க்கப்பட்டுள்ள இரண்டு ஆய்வுகளில் குறைந்த செறிவு சுக்ரோஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது, வெறும் 12%செறிவுள்ளகரைசல் வலியை குறைக்கும் விளைவுக்கு ஏற்றதாக இல்லை என கருதப்படுகிறது. நான்கில் மூன்று புதிய ஆய்வுகள், முழு சோதனைகளை தெரிவிக்க நடத்தப்பட்டசிறிய வெள்ளோட்ட ஆய்வுகள் (pilot study) ஆகும். ஒரு இனிப்பு கரைசல் ஆய்வில் மட்டும் அதிகமாக குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். நாங்கள் இரண்டு ஆய்வுகளின் முடிவுகளையும் ஒப்பிட்டுப்பார்தோம் அதில் இரண்டு ஆய்வுகளில் மட்டும் ஊசி போடுவதின் வலியை இனிப்பு கரைசல்குறைக்கும் என காண்பிக்கப்பட்டுள்ளது. எனினும் சிறிய எண்ணிக்கையிலான குழந்தைகள் சேர்க்கபட்டதினால் எந்த ஒரு விளைவும் காண்பிக்கபடவில்லை . எனவே அவர்கள் வலியில் பெரிய வேறுபாடுகள் கண்டறிய முடியவில்லை. மேலும் இனிப்பு சுவை ஊசிபோடுவதின் வலி மற்றும் துன்பத்தை குறைக்கும் என்பதை அறிய அதிக எண்ணிக்கைகயிலான குழந்தைகள் கொண்டு சோதனைகள் நடத்த வேண்டும்.

பள்ளி வயது குழந்தைகள் கொண்ட இரண்டு ஆய்வுகள் அதே ஆசிரியர் மூலம் வெளியிடப்பட்டது, அந்த இரண்டு ஆய்வுகளும் இந்த திறனாய்வில் சேர்க்கப்பட்டுள்ளது. எந்த ஆய்வும் இனிப்பு சுவை வலியை குறைக்க உதவியது என்று காண்பிக்கவில்லை. பிற ஆய்வுகளில் வேறு அணுகுமுறைகளான திசை திருப்புதல் மற்றும் மயக்க மருந்து கொடுப்பதன் மூலம் ஊசி போடுவதால்பள்ளி வயது குழந்தைகளுக்கு வலியை திறம்பட குறைக்க முடியும் என காட்டுகிறது. பள்ளி வயது குழந்தைகளுக்கு மேற்கொண்டு செய்யப்பட்ட வலி மேலாண்மைக்கான இனிப்பு சுவை ஆய்வுகள் காப்புறுதியோடு இல்லை.

ஆய்வின் நிதி மூலம்:

இளம் குழந்தைகள் கொண்ட ஆறு ஆய்வுகளில், இரு ஆய்வுகள் ஆய்வு நிதியைபெற்றுக் கொள்ளவில்லை. மீதமுள்ள நான்கு ஆய்வுகளுக்கு: மாநில அளவிலான நர்சிங் நிதி இரண்டு pilot ஆய்வுகளுக்கு உதவியது, ஒரு உள் ஆராய்ச்சி நிறுவனம் மீதமுள்ள வெள்ளோட்ட ஆய்வுளுக்கு (pilot study) ஆதரவு வழங்கியது. மற்றும் மற்றொரு ஆய்விற்கு தாய்வழி மற்றும் குழந்தை சுகாதார மானியம்ஒரு பகுதி யளவு உதவியாக கிடைத்தது

அதே ஆசிரியர் மூலம் நடத்தப்பட்ட, பள்ளி வயது குழந்தைகள் கொண்ட இரண்டு ஆய்வுகளுக்கு, கனடா நாட்டு சுகாதார ஆராய்ச்சி நிறுவனங்களின் மானியம் உதவியாககிடைத்தது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு: ஜெயலக்ஷ்மி மற்றும் சி.இ.பி.என்.அர். குழு

Tools
Information