வயது வந்தவர்களில் புற்றுநோய்-தொடர்புடைய வலிக்கு குத்தூசி சிகிச்சை

பின்புலம்

70% வரை புற்றுநோய் வலி கொண்ட நோயாளிகள், போதுமான வலி நிவாரணம் பெறுவதில்லை, மற்றும் இது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை குறைக்கிறது. புற்றுநோய் வலி மேலாண்மையில், குத்தூசி சிகிச்சை பங்கு வகிக்கிறது என்று கருதப்படுகிறது, மற்றும் குத்தூசி சிகிச்சை கொண்டு புற்றுநோய் வலி சிகிச்சை அளிப்பதற்கு வழிகாட்டல்கள் உள்ளன.

இந்த ஆராய்ச்சியின் நோக்கம்

புற்றுநோய் வளர்வதில் நேரடியாக தொடர்புடைய வலியை குறைப்பதில், குத்தூசி சிகிச்சை திறன் வாய்ந்ததா என்பதற்கான ஆதாரத்தை மதிப்பிட இந்த காக்குரேன் திறனாய்வின் ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.

ஆதாரத்திற்கான தேடல்

ஜூலை 2015 வரையான தொடர்புடைய ஆய்வுகளுக்கு, பரந்த அளவிலான மின்னணு மருத்துவ தரவுத் தளங்களை நாங்கள் தேடினோம். வயது வந்தவர்களை உள்ளடக்கி, மற்றும் புற்றுநோய் வலிக்கு குத்தூசி சிகிச்சையை, சிகிச்சையின்மை, அல்லது வழக்கமான சிகிச்சை அல்லது போலி குத்தூசி அல்லது பிற சிகிச்சைகளோடு ஒப்பிட்ட எந்த மொழியிலும் வெளியான ஆய்வுகளை நாங்கள் சேர்த்தோம். ஆற்றல் மிக்க ஆராய்ச்சியில் மட்டுமே நாங்கள் ஆர்வம் கொண்டிருந்ததால், சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளோடு (பங்கேற்பாளர்கள் சீரற்ற முறையில், ஆய்வுக்கு உட்பட்ட முறைகளில் ஒதுக்கீடு செய்யபடுதல்) எங்கள் தேடலை வரையறுத்துக் கொண்டோம்.

நாங்கள் கண்டது

குத்தூசி சிகிச்சையை, போலி குத்தூசி சிகிச்சைக்கோ அல்லது வலி-நிவாரண மருந்துகளுக்கோ ஒப்பிட்ட ஐந்து ஆய்வுகளை ( மொத்தம் 285 பங்கேற்பாளர்கள் கொண்ட) நாங்கள் கண்டோம். அனைத்து ஐந்து ஆய்வுகளும் குறைவான பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையை கொண்டிருந்தன, இவை சான்றின் தரத்தை குறைத்தன.

ஒரு முன்னோடி ஆய்வு மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது, ஆனால் சினைப்பை புற்று நோய் கொண்ட பெண்களில், மின்குத்தூசி அல்லது ஒரு போலி சிகிச்சைக்கு பிறகு, வலியில் மிக சிறிதான அளவே வித்தியாசத்தை கண்டது. ஒரு ஆய்வு, குத்தூசி -அல்லாத புள்ளிகளில் அளிக்கப்பட்ட போலி காது​ குத்தூசி சிகிச்சையை ஒப்பிட்ட போது காது சிரை (காது​) குத்தூசி சிகிச்சை புற்று நோய் வலியை குறைத்து என்று கண்டது. எனினும், போலி குத்தூசி சிகிச்சை குழுவில் இருந்த மக்கள் அவர்கள் உண்மையான குத்தூசி சிகிச்சை குழுவில் இல்லை என அறிந்திருக்க கூடும், மற்றும் இது அவர்கள் அறிக்கையிட்ட வலியின் அளவை பாதித்திருக்கக் கூடும். மற்றொரு ஆய்வு, கணைய புற்று நோய் கொண்ட மக்களில், மின் குத்தூசி குழு மற்றும் போலி சிகிச்சை குழு இடையே வித்தியாசத்தை கண்டது, ஆனால் மறுபடியும், மக்கள் எந்த குழுவில் இருந்தனர் என்பதை மறைப்பதற்கான ஏற்பாட்டை பற்றி எதுவும் அறிக்கையிடப்படவில்லை. ஒரு ஆய்வு, வலி-கொல்லி மருந்தை போன்றே குத்தூசி சிகிச்சையும் திறன் வாய்ந்தது என்று கண்டது, மற்றும் ஒரு ஆய்வு, மருந்தை காட்டிலும் குத்தூசி சிகிச்சை மிகவும் திறன் வாய்ந்தது என்று கண்டது, ஆனால் இரண்டு ஆய்வுகளும் மிக மோசமாக வடிவமைக்கப்பட்டிருந்தன மற்றும் ஆய்வு அறிக்கைகள் விவரங்கள் இன்றி இருந்தன.

முடிவுரைகள்

இந்த திறனாய்வில் விளக்கப்பட்டுள்ள எந்த ஆய்வுகளும், நம்பகமான முடிவுகளுக்கான போதுமான அளவு பெரியவையாக இல்லை. பங்கேற்பாளர்களுக்கு எந்த தீங்கையும் பற்றி எந்த ஆய்வுகளும் அறிக்கையிடவில்லை. வயது வந்தவர்களில் புற்றுநோய் வலியை குறைப்பதில், குத்தூசி சிகிச்சை திறன் வாய்ந்தது என்று தீர்மானிக்க போதிய அளவு ஆதாரம் இல்லை என்று நாங்கள் முடிவு செய்கிறோம். இந்த பகுதியில் ஆதாரத்தை அளிக்க, பெரிய அளவிலான, சிறப்பாக-வடிவமைக்கப்பட்ட ஆய்வுகள் தேவைப்படுகிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழி பெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.

Tools
Information