சமூகத்தில் வாழும் முதியோர்கள் கீழே விழுவதை தடுக்கும் குறுக்கீடுகள்.

மக்கள் முதுமை அடைய சமநிலை (balance) பிரச்சனைகள், பார்வைகுறைவு மற்றும் மூளைத்தேய்வு போன்ற பல்வகை காரணங்களால் அடிக்கடி கீழே விழ நேரிடலாம்.ஒரு வருடத்தில் 30% முதியோர்கள் கீழே விழலாம். இதில் ஐந்தில் ஒருவருக்கு மருத்துவ கவனம் தேவைப்படுமென்றாலும் பத்தில் ஒன்றுக்கும் குறைவானவர்களுக்கு கீழே விழுவதினால் எலும்பு முறிவு ஏற்படும்.

இந்த திறனாய்வில் சமுதாயத்தில் உள்ள முதியோர்கள் கீழே விழுதலை தடுக்கும் எந்த முறைகள் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை நிர்ணயிக்க உதவும் ஆய்வுகளை தேடி பார்க்கப்பட்டன . இதில் 79193 பங்கேற்பாளர்கள் கொண்ட 159 சமவாய்ப்பு கட்டுப்பாட்டு சோதனைகள் அடங்கியுள்ளன.

சமநிலை மற்றும் வலிமை பயிற்சிகள் அடங்கிய குழு மற்றும் உறைவிடம் சார்ந்த உடற்பயிற்சி திட்டங்கள் தாய்ச்சி (Tai Chi )யைப் போல் கீழே விழுதலை திறம்பட குறைக்கின்றன. மொத்தத்தில், கீழே விழுதலை குறைப்பதை நோக்கமாக கொண்ட உடற்பயிற்சி திட்டங்கள் எலும்பு முறிவை குறைப்பதாக தோன்றுகின்றன.

பலகாரணிகள் குறுக்கீடுகள் ஒரு நபரின் கீழே விழும் ஆபத்தை மதிப்பிட்டு பின்னர் கண்டறியப்பட்ட ஆபத்தை குறைப்பதற்கு சிகிச்சைகளை மேற்கொள்கின்றன அல்லது ஆபத்தை குறைப்பதற்கு பரிந்துரைகள் ஏற்பாடு செய்கின்றன. மொத்தத்தில், தற்போதைய ஆதாரங்கள் இது போன்ற குறுக்கீடுகள் மூலம் இந்த சமுதாயத்தில் வாழும் முதியோர்கள் கீழே விழுதல் எண்ணிக்கையை குறைக்கிறது என்று காட்டுகின்றன ஆனால் பின்தொடர்தலில் கீழே விழும் மக்களின் எண்ணிக்கையை குறைக்க இயலவில்லை. இவை எல்லாம் பல்கூட்டான (complex) குறுக்கீடுகள் ஆதலால் இவற்றின் செயல்திறன் இன்னும் தீர்மானிக்கப்படாத காரணிகளை சார்ந்து இருக்கலாம்.

தொழில் சார்ந்த மருத்துவர் நடத்திய வீட்டுப் பாதுகாப்பை மேம்படுத்தும் குறுக்கீடுகள் பயனுள்ளதாக கருதப்படுகிறது, குறிப்பாக இவை அதிகம் கிழே விழும் ஆபத்து கொண்ட மக்களுக்கு திறன்கொண்டதாக தோன்றுகிறது. பனிக்கட்டிசூழலில் அணியப்படும் நழுவல் எதிர்ப்பு காலணி சாதனம் கூட கீழே விழுதலை குறைக்கும்.

சமுகத்தில் வாழும் பெரும்பாலான முதியோர்கள் வைட்டமின் டி கூடுதலாக எடுத்துக் கொள்வதினால் கீழே விழுதலை தவிர்க்க முடியாது. ஆனால் சிகிச்சைக்கு முன் இரத்தத்தில் குறைந்த அளவு வைட்டமின் டி அளவுகள் உள்ளவர்களுக்கு கீழே விழுதலை தவிர்க்க முடியும்.

சில மருந்துகள் கீழே விழும் ஆபத்தை அதிகரிக்கின்றன. இந்த திறனாய்வில் இடம்பெற்ற மூன்று ஆராய்ச்சிகள் மருந்துகளை மீள்பார்வையிடல் (reviewing) மற்றும் ஒழுங்கு படுத்துவதன் மூலம் கீழே விழுதலின் எண்ணிக்கையை குறைக்க தவறியுள்ளன. மருந்து உட்கொள்ளுதலை குடும்ப மருத்துவர்கள் மற்றும் அவர்களின் நோயாளிகள் சேர்ந்து மீள்பார்வையிட்ட சம்பந்தப்பட்ட நான்காவது ஆராய்ச்சியில் கீழே விழுதலை குறைப்பதில் திறன்வாய்ந்ததாக இருந்தது. தூக்கத்தை மேம்படுத்தவும் , மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கவும் எடுக்கப்படும் சில குறிப்பிட்ட மருந்துகளை படிப்படியாக கைவிடுவதினால் கீழே விழுதலை குறைக்க முடியும் (மனோவியல் மருந்து ) என்று காண்பிக்கபடுகிறது.

முதலில் பாதிக்கப்பட்ட கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்வதினால் பெண்கள் கீழே விழுதலை குறைக்க முடியும். இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தில் திடீர் மாற்றங்களை ஏற்படுத்துகிற கறோற்றிட்குடா அதிபரவுணர்திறன் (carotid sinus hypersensitivity) கோளாறோடு தொடர்புடைய மக்கள் அடிக்கடி கீழே விழுவதை இதயமுடுக்கி (pacemaker) பொருத்துவதன் மூலம் குறைக்க முடியும்.

முடக்க வைக்கும் கால் வலி உள்ளவர்களுக்கு கூடுதலாக காலணி பற்றிய மதிப்பீடு, தனிப்பயனாக்கப்பட்ட காலணி உட்பகுதிகள் (insoles) அடிக்கால் மருத்துவத்துடன்(podiatry) கால் மற்றும் கணுக்கால் உடற்பயிற்சிகள் சேர்த்து செய்வது, கீழே விழுதல் எண்ணிக்கையை குறைக்க முடியும், ஆனால் கீழே விழும் மக்களின் எண்ணிக்கையை குறைக்க முடியாது.

கீழே விழுவதை தடுக்க கல்வி உபகரணங்கள் மட்டும் வழங்குதல் தொடர்பான ஆதாரம் முடிவற்ற நிலையில் உள்ளது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பு:பா.ஜெயலக்ஷ்மி, தங்கசுவாமி மற்றும் சி.இ.பி.என்.அர் குழு

Tools
Information