இது, ஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர்கள் தங்களின் நோயாளிகளை ஆரோக்கிய பராமரிப்பில் முடிவெடுக்க வைக்க உதவக் கூடிய வழிகளின் திறனாய்வு ஆகும்.

இந்த மொழிபெயர்ப்பு காலாவதி ஆனது. இந்த ஆய்வின் சமீபத்திய ஆங்கில பதிப்பை பார்க்க தயவுச்செய்து இங்கே கிளிக் செய்யவும்.

அநேக சிகிச்சை தலையீடுகள் இருக்கும் போது, ஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர்கள் தங்களின் நோயாளிகளை அவர்களின் ஆரோக்கிய பராமரிப்பில் முடிவெடுக்க வைக்கலாம். இது என்னவென்றால், நோயாளிகள் தங்களின் தேவைகளுக்கும் மற்றும் முக்கியமானவையாக கருதும் விஷயங்களை பிரதிபலிக்கும் வகையில் தேர்ந்தெடுத்து கொள்வதாகும். இதை நாங்கள், 'பகிரப்பட்ட முடிவெடுத்தல்' என்று அழைக்கிறோம். நோயாளிகளை அவர்களின் ஆரோக்கிய பராமரிப்பில் முடிவெடுக்க வைக்கும் போது முடிவுகள் சிறந்ததாக இருந்தாலும், ஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர்கள் பெரும்பாலும் தங்களின் நோயாளிகளை அத்தகைய முடிவுகளில் பங்கேற்க வைப்பதில்லை. ஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர்கள் தங்களின் நோயாளிகளுடன் பகிரப்பட்ட முடிவெடுத்தலை மேற்கொள்வதை ஊக்கப்படுத்துவதற்கான வழிகள் என்ன என்பதை நாங்கள் அறிய விரும்பினோம். ஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர்கள் தங்களின் நோயாளிகளுடன் பகிரப்பட்ட முடிவெடுத்தலை மேற்கொள்வதை ஊக்கப்படுத்துவதற்கு என்ன நடவடிக்கைகள் உதவக் கூடும் என்பதை சோதித்த 39 ஆய்வுகளை இந்த திறனாய்வில் நாங்கள் அடையாளம் கண்டோம். எந்த வித தலையீடும் இல்லாத நிலையை ஒப்பிடுகையில், ஏதாவது ஒரு நடவடிக்கை சிறந்ததாக இருந்ததென நாங்கள் கண்டோம். ஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர்கள் அல்லது நோயாளிகளுக்கென்று பிரத்தேயகமாக இருந்த நடவடிக்கைகளைக் காட்டிலும் இருவருக்குமான இணைந்த நடவடிக்கைகள் ஒரு விதத்தில் சிறப்பாக இருந்ததென நாங்கள் கண்டோம். எனினும், குறைந்த எண்ணிக்கையிலான ஆய்வுகள் மற்றும் ஆய்வுகள் இடையேயான வித்தியாசங்கள் போன்ற காரணங்களால் எந்த நடவடிக்கைகள் சிறப்பாக செயல்பட்டன என்பதை அறிவது கடினமாக உள்ளது. எதிர்காலத்தில் இந்த நடைமுறையை பற்றி மேலும் விவரமாக அறிந்துக் கொள்ள, ஆரோக்கிய பராமரிப்பு வல்லுநர்கள் தங்களின் நோயாளிகளுடன் பகிரப்பட்ட முடிவெடுத்தலை எந்தளவிற்கு மேற்கொள்கின்றனர் என்பது ஆராயப்பட வேண்டும் என்று இந்த திறனாய்வு பரிந்துரைக்கிறது.

மொழிபெயர்ப்பு குறிப்புகள்: 

மொழிபெயர்ப்பாளர்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன்